நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 20, 2026

திருப்புகழ்

 நாடும் வீடும்

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ... தனதான

ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
     மேவதுப ழிக்கும் ... விழியாலே

ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
     லேமருவி மெத்த ... மருளாகி

நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
     நாரியர்கள் சுற்ற ... மிவைபேணா

ஞானஉணர் வற்று நானெழுபி றப்பும்
     நாடிநர கத்தில் ... விழலாமோ..

ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
     யாடுமொரு பச்சை ... மயில்வீரா

ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
     ஆருமுய நிற்கு ... முருகோனே

வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
     மேவியகு றத்தி ... மணவாளா

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ... பெருமாளே..
:- அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா  முருகா
முருகா  முருகா
***

10 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்லதே நடக்கட்டும். முருகப் பெருமான் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. கந்தன் காலடியை வணங்கினால்
    கடவுள்கள் யாவரையும் வணங்குதல்
    போலே..

    பதிலளிநீக்கு
  3. கந்தனிடம் செல்லுங்கள்.. என்ன வேண்டும் சொல்லுங்கள்..

    ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருப்புகழ் பாடி முருகனை வழிபாட்டுக் கொண்டேன். முருகன் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தரட்டும். முருகா சரணம்.🙏 முத்துக் குமரா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. முருகா சரணம்.

    திருப்புகழ் பாடல் பாடி வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..