நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 06, 2024

திருமலை தரிசனம் 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 24
சனிக்கிழமை


காலையில் பயணத்தைத் தொடங்கிய போது 8:57

காலி கோபுரத்திற்கு வந்தபோது 12.54..

அனுமன் சிலை இருக்கும் அஞ்சனாத்ரிக்கு வந்தபோது 3:09..




ஸ்ரீ நரசிம்மர் கோயிலைக் கடந்து சாலைக்கு வந்தபோது 4:39






ஸ்ரீ உடையவர் முழங்காலிட்டு ஏறிய மேட்டுக்கு வந்தபோது 5:14..



ஓம் நமோ வேங்கடேசாய

திருமலையின் படிக்கட்டுகள் நிறைவுற்றன..

2018 ல் எடுக்கப்பட்டது

ஸ்ரீ ஆண்டாள் 2024

திருமலையேற்றத்தை பெருமாள் துணையுடன் நிறைவு செய்து ஆண்டாள் நாச்சியாரின் அருகில் வந்த போது மாலை 6:24..

ஊரிலிருந்து  கொண்டு வந்திருந்த கறிவேப்பிலைப் பொடியுடன் (!?)  அலிபிரியில் நான்கு  இட்லி மட்டும்... 

வழிநடையில் காலி கோபுரம் வந்ததும் ஏதோ சிற்றுண்டி..  சற்று களைப்பு.. அங்கிருந்த முதலுதவி மையத்திற்கு நான் மட்டும் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொண்டேன்.. 

சாதாரண அளவை விட கொஞ்சம் அதிகமாக இருந்தது.. அங்கிருந்த பணியாளர் - " அண்ணா.. இங்கே ஒரு மணி நேரம் ஓய்வு எடுங்கோ.. மாத்திரை எல்லாம் தர்றேன்.."  என்றார்.. 

" இது மலையேற்றத்தினால் தான்.. எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.. " என,  நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு நடந்தேன்..
 

தவிர, 
வேறெந்த பிரச்னையும் இல்லாது எங்களை வழி நடத்திய ஸ்ரீ திருமலை அப்பனுக்கும் தாயாருக்கும் எவ்விதம் நன்றி சொல்லுவேன்?..


தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1034)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் நமோ வேங்கடேசாய 
ஓம் சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. நிதானமாய், மெதுவாக மலை ஏறி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துள்ளித் துள்ளி மலையேறுவதற்கு பதினெட்டோ அல்லது இருபதோ அல்லவே..

      இந்த அளவுக்கு நடந்ததே நாராயணன் செயல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. படங்கள் மிகவும் சிறப்பு.
    ஓம் நமசிவாய

    பதிலளிநீக்கு
  3. உங்கள் யாத்திரையால் திருமலை தரிசனம் கிடைத்தது.

    படங்கள் , காட்சிகள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருமலை கோவிலின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    நீங்கள் படிகளின் வழியே திருப்பதி மலையேறி, வெங்கடேசபெருமாளை தரிசித்து வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நானும் முன்பு நல்ல திடமுடன் இருக்கும் போது அப்படி செல்ல வேண்டுமென நினைத்தேன். ஆனால், இருமுறை சென்று அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவ்வாறு செல்ல நேரங்கள் கைகூடி வரவில்லை. நம் விருப்பத்துடன் அவன் விருப்பமும் இணைந்தால்தான் எதுவும் நல்லபடியாக நடந்தேறும் அல்லவா?

    தங்களுக்கு அவனருளினால், அவன் தரிசனம் கிடைத்திருப்தற்கு மிக்க மகிழ்ச்சி. ஓம் நமோ நாராயணா என்று கூறி தங்கள் பகிர்ந்திருந்த படங்களின் மூலம் அவனை பக்தியுடன் தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. /// நமது விருப்பத்துடன் அவன் விருப்பமும் இணைந்தால்தான் எதுவும் நல்லபடியாக நடந்தேறும் .. ///

    உண்மை தான்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..