அழகெல்லாம் அணில்களே!..
அணிலையும் அதன் ஆட்டத்தையும் ஓட்டத்தையும்
ரசிப்பது அலாதியான சுகம்... சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை..
தோட்டங்களில் பூனையையோ பாம்பையோ கண்டு விட்டால்
பெரும் பதற்றத்துக்குள்ளாகி மற்ற சிற்றுயிர்களுக்கு எச்சரிக்கை
செய்வதில் வல்லவை....
அணில்களோடு இன்றைய பதிவு...
அணிலையும் அதன் ஆட்டத்தையும் ஓட்டத்தையும்
ரசிப்பது அலாதியான சுகம்... சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை..
தோட்டங்களில் பூனையையோ பாம்பையோ கண்டு விட்டால்
பெரும் பதற்றத்துக்குள்ளாகி மற்ற சிற்றுயிர்களுக்கு எச்சரிக்கை
செய்வதில் வல்லவை....
அணில்களோடு இன்றைய பதிவு...
சீக்கிரமா வேற கட்சிக்குத் தாவிடணும்!.. |
இதோ... தாவப் போறேன்!... ஏன்னா... |
தலை கீழாத் தொங்குனாலும் இந்தக் கட்சியில தலைவர் பதவி மட்டும் கிடைக்காதாம்!... |
நீ அந்தப் பக்கம்!.. |
நான் இந்தப் பக்கம்!.. |
என் மரம்.. என்காடு.. ன்னு நாங்க மட்டும் சொல்லக் கூடாதாம்!.. |
மரத்தை எல்லாம் வெட்டிட்டா ஏழை பாழைங்க எங்கே போய் இருக்கிறது?.. |
ஒரே காடு.. ஒரே கார்டு.. அதெல்லாம் இல்லையா?.. |
ஆதார் கார்டுல மூஞ்சி வேற மாதிரி இருக்குதாமா!.. |
அடே... அது ஐயாவோட கேமரா.. ஒன்னும் பண்ணிடாதே!.. |
என்னது!.. புதன் கிழமையானா கேள்வி கேக்கணுமா?... |
கொஞ்சமா சிரிக்கணும்..ன்னு சொன்னாங்க!.. |
புறப்பட்டுட்டீங்களா!.. சரி.. மறுபடியும் வாங்க!.. |
அணிற்பிள்ளைகளை அழகாகப்
படம் பிடித்து வலையேற்றிய
கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
படங்கள் FB ல் வந்தவை..
படம் பிடித்து வலையேற்றிய
கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
படங்கள் FB ல் வந்தவை..
அழகு.. அழகு.. 7 முந்தைய பதிவின்
இணைப்பு - இங்கே!..
எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
அழகே அழகு..
வாழ்க நலம்
ஃஃஃ
ஆமாம். அணில் அழகுதான். அதே சமயம் அதிரா வெளியிட்டிருந்த காணொளியில் வந்த அணிலும், ஏஞ்சல் சொல்லும் அணிலும் நினைவுக்கு வருகின்றன..
பதிலளிநீக்குகுட்மார்னிங்.
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி...
வரிகள் ரசிக்க வைத்தன. தலைகீழா தொங்கினாலும் தலைவர் பதவி கிடைக்காது...
பதிலளிநீக்குஇது பொருந்தாத கட்சியே இருக்காது!
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குவேடிக்கை உலகம் இது...
மகிழ்ச்சி.. நன்றி...
புதன்னா கேள்வி கேட்கணுமா...
பதிலளிநீக்கு'இல்லை,
பதிலையும் படிக்கணும்!!!
ஸ்ரீராம்...
நீக்குஅதையெல்லாம் விட முக்கியமா சிந்திக்கணும்..
அதுக்கு நாம எங்கே போறது?..
மகிழ்ச்சி.. நன்றி...
ஹா... ஹா... ஹா...!
நீக்குவெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தில் கும்பலாக அமர்ந்திருக்கும் அணில்கள் நிஜமாகவே சோகத்தைச் சொல்கின்றன.
பதிலளிநீக்குஸ்ரீராம்...
நீக்குஇந்த அணிற்பிள்ளைகளின் தாய் தந்தையர் தாவித் திரியாத மரங்கள்.. இல்லை..
இப்போது இவை தாவித் திரிய - அந்த மரங்களே இல்லை...
என்ன கொடுமை...
இந்த பாவத்தை எல்லாம் எங்கே கொண்டு தொலைப்பது?...
அடடே....
நீக்குமுதல் படத்தில் அந்த அணில் "கடவுளே... இந்த நாள் நல்லாயிருக்கணும்" என்று வேண்டிக் கொள்வது போல இருக்கிறது!
பதிலளிநீக்குஇதுவும் நன்றாயிருக்கிறதே... ஸ்ரீராம்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
அணில் தாவும்போதும் காட்சியின் துல்லியம் மாறாமல் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள்.
பதிலளிநீக்குபடம் எடுத்தவர் ஒருவரோ... பலரோ.. தெரியவில்லை..
நீக்குஅவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
அருமையான புகைப்படங்கள். மிக மிகத்துல்லியமான காட்சிகள். அதிலும் தாவும் அணில்கள்! அணில்கள், பறவைகள் ஆகியவற்றைக் கவனிப்பது எல்லாம் சென்னை, அம்பத்தூர் வீட்டோடு போச்சு! இங்கே தற்சமயம் தோட்டத்துப் பக்கம் போக முடியாது. ஸ்ரீரங்கத்தில் பக்கத்துத் தோப்பின் மரங்கள் காற்றில் நம்ம பக்கம் வளைந்தாலும் பறவைகள் அரிதாகவே நம்ம வீட்டுப் பக்கம் வரும். அதுக்காகவே சாப்பிட தானியங்கள் போட, சாதம் வைக்க, குடிநீர் வைக்கனு ஏற்பாடு பண்ணி வைச்சிருக்கோம். வந்து சாப்பிட்டு விட்டுப் போயிடும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...
நீக்குஇப்போது குடியிருக்கும் வீட்டிலும் நல்ல நாள் பெரிய நாட்களில் முதல் சோறு காக்கை என்று வைத்தால் -
அணில்கள் தான் வந்து சாப்பிட்டுத் தீர்க்கின்றன...
மகிழ்ச்சி.. நன்றி...
படங்கள் மிகவும் தெளிவு ஜி
பதிலளிநீக்குவசனங்கள் ரசிக்க வைத்தன...
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் அனைத்தும் அழகு. அதற்கான வரிகளும் சிறப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அணிப்பிள்ளை படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குஅதற்கு கீழ் கொடுத்து இருக்கும் வரிகளும் அருமை.
உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஹா ஹா ஹா தலைப்புப் பார்த்து ஏதோ கோயில் தெய்வம் அழகு எனச் சொல்றீங்க என உள்ளே வந்து கதவைத்திறந்தால்.. அணில்ப்பிள்ளை..:)
பதிலளிநீக்குஅன்பின் அதிரா...
நீக்குஅணில்களும் குழந்தைகளைப் போல...
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
புதன்கிழமை எனில் கேள்விகேட்கோணும் என அணிலும் விக்கித்து நிற்கிறதே ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஅன்பின் அதிரா...
நீக்குஅணில்களும் அறிவுடையவை தானே..
இருந்தாலும் இத்தனை மாமேதைகளுக்கு நடுவே நான் எப்புடி..ண்டு விக்கித்து நிற்கிறது...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆனா இதிலிருப்பவை எல்லாம் ஓரினமாகவே இருக்கே.. நம் நாட்டில சீத்தாபிராட்டியின் ஹஸ்பண்டூ கோடு போட்ட அணிலைக் காணம்:)).. இங்கிருப்பவை எல்லாம் சம்பல் அல்லது கறுப்பு நிற குண்டு அணில்கள்.
பதிலளிநீக்குஅன்பின் அதிரா...
நீக்குஇதெல்லாம் வெளிநாட்டு அணில்கள்...
சீதாவின் வீட்டுக்காரர் கோடு போட்டு விட்ட அணில் ஐரோப்பாவுக்குப் போயிருக்கிறதாம் - சர்வ தேச மாநாட்டுக்காக!...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இங்கே இரண்டு வகை அணிலளும் இருக்கின்றன.
நீக்குகண்கள் பேசும். நாம் தோட்டத்தில் உட்கார்ந்தால்
கால்கள் பக்கத்தில் வந்து கீழே உட்கார்ந்து கொறிக்கும்.
உங்கள் அணில்கள் அழகு. அதற்குக் கொடுத்திருக்கும்
தலைப்புகளும் அருமை.
நாட்டு அணிலும் வெளிநாட்டு அணிலும் சந்தித்தால்..
பதிலளிநீக்குநெஞ்சம் துள்ளுமோ ஆவல் மிஞ்சுமோ இன்பத்தால் !
அன்பின் ஏகாந்தன்...
நீக்குஇருக்கும் இருக்கும்.. தாங்கள் சொல்வது போலவே இருக்கும்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அழகு... அழகு... அழகோ அழகு...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல ரசனை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
சில உயிரினங்களுக்குத்தான் நாம் பிள்ளை அடைமொழி கொடுக்கிறோம்.
பதிலளிநீக்குஅணிற்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை, கீரிப்பிள்ளை.
இது எதனால்?
//பதற்றத்துக்குள்ளாகி மற்ற சிற்றுயிர்களுக்கு....// - வாக்கியம் பொருத்தமாக முடியலையே
அன்பின் நெல்லை..
நீக்குதங்கள் கேள்விக்கு என்ன பதில் என்று தெரியலையே..
மற்றபடி தாங்கள் குறிப்பிட்டுள்ள வாக்கியத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போனது.. சரி செய்து விட்டேன்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..