கடந்த ஆகஸ்ட் 27 அன்று விடியற்காலையில் செந்தூரில் இருந்தோம்...
திருக்கோயில் நாலரைக்கெல்லாம் நடை திறக்கப்படுகின்றது...
ஆயினும், நாழிக்கிணற்றுக்கு ஆறு மணிக்கு மேல் தான் அனுமதி...
கடலில் நீராடும் அளவுக்கு இல்லை.. மிகவும் தளர்ச்சியாக இருந்தது...
எனவே விடியும் முன்னரே வெளியில் நீராடி முடித்து சூர்ய தரிசனம் செய்தபின் சந்நிதி புகுந்தோம்...
அவ்வளவாகக் கூட்டம் இல்லை...
திருமூலஸ்தானத்தில் நல்ல மகிழ்ச்சியான தரிசனம்..
ஆவணித் திருவிழா நிகழ்ந்ததால்
ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார்...
முன்பெல்லாம் திருச்சுற்றில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, சனைச்சரன், வைரவர் சந்நிதிகளில் நூற்றுக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றியிருப்பார்கள்...
விளக்கேற்றும் நடைமுறை இப்போது தடை செய்யப்பட்டு விட்டது...
மேலும் சத்ரு சங்காரமூர்த்தி மண்டபத்தில்
ஹோமங்கள் செய்யப்படுவதில்லை என்றும் எழுதப்பட்டிருந்தது...
இருந்தாலும் சந்நிதியை வலம் வருவது மட்டும்
சோமசூத்ரப் பிரதக்ஷிணம் மாதிரி தான்...
திருச்சுற்றில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனையும் கண்ணார சேவித்தபின்
மேலைக் கோபுரத்தின் வடபுறத்தில் விளங்கும் காவல் நாயகமாகிய
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமியையும் வணங்கி நின்றோம்...
அங்கிருந்து வள்ளி குகை நோக்கி வந்த வேளையில் தான்
உடல் நலக்கோளாறு ஏற்பட்டது...
அதற்கு முன் எடுக்கப்பட்ட படங்களே இன்றைய பதிவில்...
எம்முறையும் இல்லாதபடிக்கு இம்முறை
இப்படியானதே.. என்று தளர்ச்சியுற்றேன்...
ஆனால் அதற்கான விளக்கத்தை
இப்போது தான் - இந்தப் பதிவின் போது தான் பெற்றேன்..
அன்றைக்கு அவனொரு திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறான்...
அது அப்போது புரியவில்லை...
அருணகிரியாருக்குத் நடனத் திருக்காட்சி நல்கிய திருத்தலம் திருச்செந்தூர்..
அருணகிரியாருக்கு அருளிய செந்தில்நாதனே -
எளியேனுக்கும் நாளும் நலமும் நல்கியிருக்கின்றான்...
அருணகிரிநாதரின் திருவாக்கு மெய்யானது.. மெய்யானது... மெய்யானது..

சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்அவன்
கால்பட்டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன்கையெழுத்தே!..
-: அருணகிரிநாதர் :-
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
செந்தில்நாதா சரணம்.. சரணம்..
ஃஃஃ
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
செந்தில்நாதா சரணம்.. சரணம்..
ஃஃஃ
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஎல்லாவற்றுக்கும் ஏதோ காரணம் இருக்கும் என்பார்கள். அதுபோலதான் அன்று உங்கள் உடல்நலமின்மைக்கும் காரணம் இருந்திருக்கும்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் மூலம் முருகனை நினைத்துக் கொன்டேன். மனதில் சீர்காழி குரலுடன் பாடியும் பார்த்துக்கொண்டேன்!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமுருகா சரணம்...
காலை வணக்கம். அழகான படங்கள். முருகன் அருளால் நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குமுருகனருளால் நலமே விளையட்டும்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
காரணமின்றி காரியமில்லை வாழ்க நலம் ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குகாரணம் இல்லாத காரணம் இல்லை... உண்மைதான்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கரணம் காரணம் கர்த்தா - இவைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
எல்லாவற்றுக்கும் காரணங்கள் இருக்கும். அதான் உங்களுக்குப் புரிய வந்துள்ளது. செந்தில்நாதன் கிருபையில் அனைத்தும் நலமாக நடந்ததுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..
நீக்குதங்கள் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சியக்கா..
வாழ்க நலம்...
இனிய தரிசனம்...
பதிலளிநீக்குஎல்லாம் நன்மைக்கே ...அனைத்தும் அவன் அருளே...
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குமுருகன் வீட்டில் இருக்கும் போது ,தளர்வு ஏற்பட்டாலும் அவன் கரையேற்றி விடுவான்.
பதிலளிநீக்குஅன்று காத்த தெய்வம் எப்போதும் காப்பான்.
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
உடல் பற்றிய பிணி ஆறுமே.
படங்களில் முருகனை மனதாரக் கண்டேன்.
அவன் நல்லருள் உங்களைத் தொடரும்.
வாழ்க நலமுடன்.