அதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது!..
அப்போதே சொன்னார் அவர்..
அவர் என்றால்!?..
அவர் தான் முதல் வாசகரும்
முதல் விமரிசகருமான அன்பின் திரு ஸ்ரீராம்!...
சரி... அப்படியானால் விட்டு விடுங்கள்... - என்றேன்...
ஆனால் அவர் விடவில்லை...
ஏதோ மர்மக் கதை மன்னன் அளவுக்கு ஆகும் என்று எதிர்பார்த்தால்...
சில விநாடிகளிலேயே புஸ்வாணம் ஆகி விட்டது...
பெயர் சொல்லாமல் வெளியிட்டதெல்லாம்
சும்மா லுலுலுவா!... காட்டத்தானே அன்றி... வேறெதற்கும் அல்ல!...
கதையின் நாயகனாக வருகின்ற ஸ்ரீ முனீஸ்வரன் எனது இஷ்ட தெய்வம்..
எனது பெரிய பாட்டனார் வழிபட்ட மூர்த்தி...
கதையின் களம் கற்பனை அல்ல!...
தஞ்சை மாவட்டத்தின் உட்பகுதிகளில்
முனீஸ்வரன் தான் காவல் தெய்வம்...
பற்பல கிராமங்களிலும் பெரிய அளவிலான
முனீஸ்வரன் சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன...
தவிரவும் - நானறிந்த வரையில்
மயிலாடுதுறை, பந்தநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடவூர், கடுவெளி ( திருஐயாறு அருகில்) ஆகிய திருக்கோயில்களின் காவல் மூர்த்தி முனீஸ்வரன் தான்!...
ராஜகோபுரத்தில் அல்லது திருக்கோயிலுக்கு முன்னால்
சந்நிதி கொண்டிருப்பார்..
திரு அரங்கம் தெற்கு ராஜகோபுரத்திலும்
முனீஸ்வரனுக்குத் தனிச்சந்நதி உண்டு...
தஞ்சை பெரிய கோயிலுக்கும் முனீஸ்வரன் தான் காவல் நாயகம்..
இவரது இருப்பிடம் பெரிய கோயிலுக்கு எதிரே
அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆலமரம்...
இங்கே தளத்தில் காட்சியளிக்கும் திருமேனி
தஞ்சை நகரில் கீழ ராஜவீதியும் வடக்கு ராஜவீதியும் சந்திக்கும்
ஈசான்யத்தின் கொடிமரத்து மூலை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலுக்கு எதிரிலுள்ள திருமேனியாகும்...
மேலும் சில பிரம்மாண்டமான முனீஸ்வரன் சுதை சிற்பங்களும்
தஞ்சை நகரில் அமைந்துள்ளன...
எங்கள் பிளாக்கில்
களத்து மேட்டுக் காவலன்
முதல் பகுதி வெளியான போது திருச்செந்தூர் கடற்கரையில்!..
திங்களன்று செந்தூரில் தரிசனம் செய்து விட்டு மறுநாள் காலையில்
உவரிக்குச் செல்வதாகத் திட்டம்...
ஆனால் அப்படி நிகழவில்லை...
முருகன் சந்நிதியில் தரிசனம் ஆகியபின் திருச்சுற்று வலம் செய்து
வள்ளிக் குகையின் அருகில் வரும்போது சொல்லொணாத வேதனைக்கு ஆளானேன்..
நானெல்லாம் உணவு விஷயத்தில் மாயாபஜார் கடோத்கஜன் அல்ல!..
முதல் நாளிரவில் நான்கு இட்லிகள் மட்டுமே...
ஆனால் பகல் போதில் சாப்பிட்ட -
உலகம் அழிந்தாலும் அழியாததான
முட்டைக் கோஸுடன் கடலைப்பருப்பு கூட்டு
வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனது...
அது செய்த வேலையால் - மிகுந்த கஷ்டம்...
நிற்பதற்கும் நடப்பதற்கும் இயலாமல் ஆகிவிட்டது...
என் மகன் அங்குமிங்கும் அலைந்தான்..
கோயிலுக்கு அருகில் எவ்வித மருத்துவ மையமும் கிடையாது...
அங்கே உடனடியாக மருந்தானது எது எனில் -
சற்று நேரத்துக்கு முன் சந்நிதியில் பெற்றுக் கொண்ட திருநீறுதான்!...
நல்ல வேளையாக
ஆவணித் திருவிழாவில் மக்கட்பணி செய்வதற்கு வந்திருந்த
முருகனடியார் திருக்கூட்டத்தினரிடம் இருந்து பேருதவி கிடைத்தது...
இருவேளைக்கு மாத்திரைகளும் நீரில் கலந்து குடிப்பதற்கு சூரணமும்
கிடைத்தன.. எல்லாமே சித்த வைத்திய மருந்துகள்...
அத்துடன் கோயிலுக்குப் பின்னால் சஷ்டி விரத மண்டபத்தில்
முன்னூறு ரூபாய் கொடுக்க அங்கே தங்குதற்கு அனுமதி கிடைத்தது...
நல்ல தூக்கத்துக்குப் பின் விழித்தேன்...
தளர்வாக இருந்தாலும் உடல் நலம் பெற்றிருந்தது..
வயிற்று வலி, உபாதைகள் ஏதும் இல்லை...
மாலை ஐந்து மணியளவில் எழுந்து மீண்டும் குளித்தபின்
இடும்பன் சந்நிதியிலிருந்தபடியே முருகனை வணங்கி விட்டு
உவரிக்குப் புறப்பட்டோம்...
ஆவணி மாதத்தின் இரண்டாவது திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில்
எங்கள் குலதெய்வத்திற்கு கொடை விழா...
அங்கே - செவ்வாய்க்கிழமை நள்ளிரவுப் போதில்
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடஸ்வாமி - என,

வாசிக்கும்போதே யாரென யூகித்ததுடன் -
மனதாரப் பாராட்டி கருத்துரை வழங்கி வாழ்த்திய
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
தொடரும் பகுதிகளுக்கும் இவ்வண்ணமே
அன்பினையும் ஆதரவினையும் வேண்டுகிறேன்...

சாமி அழைப்பு...
உவரி திருக்கோயிலில் நிறைவான தரிசனம்...
ஆவணிக் கொடையின் படங்கள் எதிர்வரும் பதிவுகளில்!...
ஸ்ரீ சந்த்ர சேகரர் - ஸ்ரீ மனோன்மணி அம்பிகை தைப் பூச தரிசனம் |
இரவு 3:30 மணியளவில் ஸ்வாமி ஊர் சுற்றித் திரும்பியதும்
அருள் வாக்கு கேட்டுக் கொண்டு அன்ன ப்ரசாதங்களுடன்
புதன் கிழமை காலை 7:30 மணியளவில் திசையன்விளை வழியாக திருநெல்வேலி!..
அங்கிருந்து 2:30 மணியளவில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மூலமாக திருச்சி..
திருச்சியிலிருந்து இரவு 8:30 மணியளவில் தஞ்சாவூர் பாசஞ்சர்..
நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்...
மறுநாள் காலை தஞ்சாவூர் பாசஞ்சர் மூலமாக திருச்சிக்குச் சென்று
அங்கிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னைக்கு வந்து மும்பை வழியாக வெள்ளியன்று காலையில் குவைத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று...
இந்த அளவில் மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து முருகன் காப்பாற்றினான்...
பிழையென்று ஏது செய்தேன்?.. தெரியவில்லை!..
ஆனாலும், ஏதோ ஆகாத நேரம்...
அதனை அவன் துணையுடன் அனுபவித்துக் கழித்தாயிற்று...
அடித்தாலும் அணைத்தாலும்
அவனன்றி ஆர் நமக்கு?..
அவனருள் ஒன்றே
ஆகாத வேளையில் கைவிளக்கு!...
சிவ குருநாதா சரணம்.. சரணம்..
செந்தில் வேலா சரணம்.. சரணம்!..
ஃஃஃ
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஎன்னதான் சொன்னாலும் இதை இன்றே உடைக்க வேண்டுமா?!! இன்றும் பெயர் சொல்லாமல் வெளியிட்டிருக்கிறேனே...!!!
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
நாந்தான் முந்திரிக்கொட்டையாய் முந்திக் கொண்டேனோ!...
தங்களைக் கலந்து கொள்ளாதது என்னுடைய தவறு!..
நான் நிறைய அனுபவித்திருக்கிறேன், அனுபவிக்கிறேன். அதனாலேயே வெளி ஊர்கள் சென்றால் பழங்கள், பழச்சாறு தவிர்த்து எதையும் சாப்பிடுவதில்லை. அப்படிச் சாப்பிட்டாலும் ஏதேனும் ஓர் வேளைக்கு மட்டும். இப்போது உடம்பு பரவாயில்லையா? பிழை செய்தோமோ இல்லையோ, அப்போது அனுபவிக்க வேண்டிய வேளை! இந்த மட்டும் இதோடு விட்டதே என நினைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் அவன் செயலே.
பதிலளிநீக்குதங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி அக்கா...
நீக்குவெளியில் சென்றால் அந்த அளவுக்கு நல்ல பழங்களும் கிடைப்பதில்லை..
ஆப்பிள் மீது விருப்பம் இருப்பதில்லை...கொய்யாப்பழம் தான் இஷ்டம்.. ஆனால் அது எப்போதும் கிடைப்பதில்லையே..
வெளியில் சென்றால் கையோடு உலர் திராட்சை எடுத்துச் செல்வோம்..
அன்றைக்கே பிரச்னைகள் சரியாகி விட்டன...
தங்கள் கருத்துரையும் அறிவுரையும் மகிழ்ச்சி.. நன்றீ..
எல்லாம் அவன் செயல்...
தஞ்சை பெரிய ஆஸ்பத்திரி பெரிய ஆலமரம் பற்றி தெரியாது. அங்கு சிலகாலம் தந்தை பணி புரிந்திருக்கிறார்.
பதிலளிநீக்குதிருமணத்துக்குமுன் நான் பணியாற்றிய ஒரு இடத்தில் அலுவலகத்திலேயே தங்கி இருந்தேன். சுற்றி ஜனநடமாட்டமே இருக்காது. தாண்டிச் செல்லும் வழியில் ஒருமுனீஸ்வரர் மரம் உண்டு. எதேதோபயமுறுத்துவார்கள். இரவில் தாண்டிச் செல்லும்போது இழுக்கும். நள்ளிரவு வெளியே வரக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். இரவு உணவு உண்டு விட்டு ஒன்பதுமணிசுமாருக்கு தாண்டிச் செல்வேன். மின்சாரம் தடைப்பட்ட சில நாட்களில் நள்ளிரவு வெளியே வந்து தாண்டி, சாலைக்கு வந்து அமர்ந்திருந்திருக்கிறேன். அவர் நம்மையொன்றும் செய்ய மாட்டார்.. அவர் நம்மைக் காக்கத்தானே தவிர, பயமுறுத்த அல்ல என்று நினைத்துக்கொள்வேன்.
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குநாளின் எந்த நேரத்திலும் பிறப்பு இறப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் மருத்துவமனை வளாகத்தில் காலகாலமாக முனீஸ்வரன் இருந்து அருள்பாலிப்பது என்பது பெரிய விஷயம்..
யாரோ எவரோ ஏதோ சொல்லி வைக்க நாம் குழம்பி இருக்கிறோம்...
ஆனால் கள்வர்களை மட்டும் அவர் விட்டு வைப்பதில்லை...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கதை நீங்கள் எழுதியதாகத் தான் இருக்கும் என நினைத்தேன். சென்ற வாரம் படிக்கவில்லை. இரண்டையும் படித்து விட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் அக்கா..
நீக்குஆர அமர படித்து விட்டு வாருங்கள்...
கஷ்டம் என்றும் பிழை என்றும் நினைக்கிறீர்கள். உங்களை தாமதப்படுத்தி அவன் எதிலிருந்து உங்களைக் காத்தானோ...
பதிலளிநீக்குநல்லபடியாக தரிசனங்கள் முடித்து, உறைவுகளுடன் கூடி மகிழ்ந்திருந்து திரும்பி விட்டீர்கள். மகிழ்ச்சி.. நான் சென்று எங்கள் பிளாக்கில் இந்த வாரக்கதையில்பெயர் வேறு சேர்க்க வேண்டும்...
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குஅவனது நோக்கத்தை யாரறியக்கூடும்!...
தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி..நன்றி...
நானும் இதே தான் நினைத்தேன் ...அவன் எண்ணம் நமக்கு புரியாது ...ஆனால் அனைத்திலும் ஒரு காரணம் இருக்கும்
நீக்குஅன்பு துரை,
பதிலளிநீக்குஉங்களைத் தவிர யார் இது போல எழுத முடியும். முனீஸ்வரன் கன கம்பீரம்.
அவரே காப்பாற்றி இருக்கிறார்.
முருகன் இருக்கும் இடத்தில் துன்பம் வருமா.
நோயும் தந்து மருந்தும் கொடுத்திருக்கிறான்.
முன்வினை எல்லாம் இல்லை.
இது உங்களைத் தாமதப் படுத்தி ஆறுதல் செய்து அனுப்பி இருக்கிறான். அப்பாடி இடைவிடாப் பயணம். நிறைய மோர் குடிக்கவும்.
கதை மிகப் பிரமாதம். மனம் நிறை ஆசிகள்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...
நீக்குநோயையும் தந்து அதற்கு மருந்தையும் தந்திருக்கின்றான்..
அவனது நோக்கத்தை யாரறியக்கூடும்!...
தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கும் அறிவுரைகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி...
எல்லாம் நலமாகும் ஜி இறையே துணை வாழ்க நலம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி...
நீக்குதங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி..நன்றி...
உங்கள் எழுத்தே உங்களைக் காட்டிக்கொடுக்கும் பயணங்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மனம் அல்லாடும்தானே
பதிலளிநீக்குஅன்பின் ஐயா...
நீக்குதொடர் பயணத்தில் விளைந்த உடல்நலக்குறைவு தான்...
தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி..நன்றி...
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் குமார்...
நீக்குதங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி..நன்றி...
வணக்கம் 🙏. பயணத்தில் உடல் நலம் சரியில்லாமல் போனால் கஷ்டம் தான். நல்லபடியாக எல்லாம் முடிந்து ஊர் திரும்பியது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்...
நீக்குதங்களன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..நன்றி...
பயண அனுபவங்கள் சில நேரம் இப்படி அமைந்து விடும்.
பதிலளிநீக்குஇறைவன் அருளால் உடல் நலம் காக்கப்பட்டது மகிழ்ச்சி.
குறைந்த காலத்தில் பயணங்கள், ஓய்வு இல்லை. ஓய்வு எடுத்தால் எல்லாம் சரியாகி விடும். சஷ்டி விரத மண்டபத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டது நல்லது.
கதை அருமையாக இருக்கிறது. சிவகுருநாதனும் வேலும் மயிலும் துணைஇருக்க பயம் ஏன்? எல்லாம் நலமே!
வாழ்க வளமுடன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குவேலும் மயிலும் துணையிருக்க பயம் ஏதும் இல்லை..
கொஞ்சம் அயர்ச்சியாக - அதிர்ச்சியாகி விட்டது...
தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...
அவனை காண செல்லும் போது சோதனைகளும் உண்டு ...ஏதோ பெரும் துன்பத்திலிருந்து காக்க வே இந்த சிறு துன்பம் ...
பதிலளிநீக்குஎன்றும் இறை துணை இருக்கும் அண்ணா ..