நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 05, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 23 
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திரு நாகை
(நாகப்பட்டினம்)


தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ... தனதான

விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே ... புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார் ... மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா ... துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ 
ரழியா வரமே ... தருவாயே..

தொழுதார் வினைவே ரடியோ டறவே 
துகள்தீர் பரமே ... தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
சுகிர்தா வடியார் ... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா ... ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


விழுகின்ற தாது தான் இவ்வுடல் 
என்பது புரியாமல்
வினைகளைச் சேர்ப்பதையே விரும்பி 

வாழ்நாளை வீணாக்கி உலக புத்தி மேலிட
பெண்ணாசை மிகுந்து அதனால்
அழுது கெட்டுக் கேவலமாகி 
வாழ்க்கை கழிந்து போகாமல் 

உனைத் துதித்து உனது தாமரைத் திருவடிகளே 
எனக்கு உறவாகும்படி அழியா வரத்தினைத் 
தந்தருள்வாயாக..

தொழுகின்ற அடியார் தமது வினை 
வேரற்றுப் போகும்படி குற்றம் தீர்த்து 
பரமபதத்தை அளிக்கின்றவனே.. 

தேவர்களுக்கு அரசனே..
கருணைக்கு இருப்பிடமான புண்ணியனே 
அடியார்களின் பெருவாழ்வே..

எழுதப்படாததாகிய  வேதத்தின் 
நிறைவானவனே வடிவேல் ஏந்தியவனே


என்னை ஆளுடைய இறைவனே.. 
எதைத் தர வேண்டுமோ 
அதை நீ தந்தருள்வாயாக.. 

தனக்குத் தானே இணையாகின்ற
நாகையில் வீற்றிருக்கின்ற 
பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. மயில் மீதமர் முருகா...  எங்கள் மனங்களில் குடிகொள் முருகா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. அனைவரும் நலமாக வாழ முருகனை பக்தியுடன் பணிந்து வேண்டி கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. திருப்புகழ் பாடி நாகை முருகனை வணங்கிக் கொண்டோம் .
    ஓம் முருகா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..