நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 25, 2023

கதம்பம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11
வியாழக்கிழமை

இன்றைய பதிவில்
தஞ்சை நகர் படங்கள் மேலும் சில.. 
ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் எனது கை வண்ணம்..






ஒரு காலத்தில் மிகச்சிறப்புடன் திகழ்ந்த ஸ்ரீ சுதர்சன சபா - தஞ்சை ராமநாதன் ஹால்.. 

இதன் சிறப்பு 1950 களுக்கு முன்பிருந்தே இங்கு நடைபெற்ற நாடகங்கள்..  ஆறாம் வயதில் என் தந்தையுடன் நான் நாடகம் பார்த்த நினைவுகள்.. பிறகு தான் தெரியும் இவர் தான் TR மகாலிங்கம்.. இவர் தான் MR ராதா என்பதெல்லாம்.. 

கல்லூரி நாட்களில் இங்கே பற்பல விற்பன்னர்களின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கின்றேன்..

 நன்றி விக்கி

சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தால் இந்தக் கட்டடம் முற்றாக தரை மட்டம் ஆக்கப்பட்டு விட்டது..

அடுத்து,
நவீன மின் அடுக்கு கார் நிறுத்துமிடம்..




மாநகராட்சிக்குச் சொந்தமான திருவள்ளுவர் திரையரங்கம் இருந்த இடத்தில் புதிய வணிக வளாகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது...














சுமைதாங்கிக் கல்- பிருந்தாவனம் அருகில்.








இனிவரும் நாட்களில். என்னென்ன மாற்றங்களோ!..

நலம் வாழ்க
வாழ்க நலம்
***

8 கருத்துகள்:

  1. தஞ்சாவூர் -  எனக்கும் இனிய நினைவுகள் வருகின்றன.  அப்போது ஒரே பஸ்ஸ்டான்ட்தான்.  அருளே சொனேகாவோ என்னவோ ஒரு கடை அப்போவே 25 பைசா போட்டு விரும்பிய பட்டு கேட்கும் வசதி அந்த டீக்கடையில் இருந்தது.  அதன் அருகே இருந்த பெரிய ஹோட்டல் வாசவி கபே என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ராமநாதன் ஹால் நினைவில்லை.  ஆனால் நான் படித்த அந்தோனியார் பள்ளியிலிருந்து மருத்துவக்கல்லூரி குடியிருப்பிலிருந்த எங்கள் வீடு செல்ல ராமநாதன் ஹாஸ்பிடல் தாண்டிதான் ஷீலா வேண்டும்.  அதில் யு டர்ன் எடுத்து பஸ் மேம்பாலம் நோக்கி செல்லும்!

    பதிலளிநீக்கு
  3. நிறைய படங்கள் திருவள்ளுவர் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.  நினைவுக்கு சட்டென வரும் இரண்டு படங்கள் கிரஹப்பிரவேசம், நான் போட்ட சவால்!  எதிர்த்தாற்போல அப்பா ஆபீஸ்.  எங்கே அவர் பார்த்து விடுவாரோ என்று பயந்து சைக்கிளில் விரைவேன் !

    பதிலளிநீக்கு
  4. நிறைய படங்கள். நிறைய மாற்றங்கள்

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அத்தனையும் அழகு. ரசித்துப் பார்த்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தஞ்சை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. உப்பரிகை அமைப்பில் இருக்கும் பழைய கால கட்டிடம் அழகு. இது போல சங்கரன் கோவிலில் இப்போது இருவர் வீடு கட்டி இருந்தார் சன்னதி தெருவில். இத்தனை அடுக்கு இல்லை. ஒரு அடுக்கில் இந்த உப்பரிகை அமைப்பு.
    முன்பு தஞ்சாவூர் ரயில் நிலையம் அடிக்கடி வருவோம். இப்போது மாற்றங்கள் நிறைய ஏற்பட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. தஞ்சை படங்கள் கண்டுகொண்டோம்.

    தஞ்சை பிடித்த இடம் ஒரு தடவைதான் செல்லக் கிடைத்தது. இரண்டு நாட்கள் தங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..