நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 27
புதன்கிழமை
ஸ்ரீ பூங்காளியம்மன் திருப்பூந்துருத்தி |
வழியெங்கும் சிறு சிறு கோயில்கள் கூட களை கட்டியிருந்தன..
தண்ணீர் மோர் பந்தல்கள்..
வழி நடப்போர் இருந்து இளைப்பாறுவதற்கு
நிழல் விரிப்புகளும் நாற்காலிகளும்..
சலியாத முகத்துடன் நாள் முழுதும் அன்னம் பாலிப்பு. விருந்து உச்சரிப்பு..
சப்த ஸ்தான விழாவில் மூன்று ஊர்களையாவது கடந்தால் தான் இதன் மகத்துவம் புரியும்..
நாங்கள் முதல் நாள்
சாப்பிட்டது - திருக்கண்டியூர் திருக்கோயிலில்.. அங்கு இரவு வரைக்கும் அன்ன தானம்..
மறுநாள் திரு ஐயாற்றில்..
அங்கு வர்த்தகர் சங்கத்தினர் நடத்திய விருந்து உச்சரிப்பு..
(இந்தப் பகுதியில் உள்ள படங்கள் எளியேனால் எடுக்கப்பட்டவை)
இது தவிர பல்லக்குகள் வரும் வழியில் வீட்டுக்கு வீடு மாலை மரியாதை..
நூற்றுக்கணக்கான வேஷ்டிகள் பல்லக்குகளுக்கு காணிக்கையாக்கப்பட்டிருந்தன..
தான தர்மங்கள் தழைப்பது இங்கே தான்..
அன்புடன் உபசரிப்பது புண்ணியம் என்றால்
அதனை ஏற்றுக் கொள்வதும் புண்ணியம் தான்..
பதிவின் இரண்டாம் பகுதி
தருமபுரம் ஆதீனம்
ஸ்ரீ மகாசந்நிதானம்
அவர்களின்
திருநெய்த்தானம்
வருகை..
மேற்கண்ட படங்களுக்கு நன்றி
தருமபுர ஆதீனம்
**
பெரிய பல்லக்கு எனப்படும் ஐயாற்றுப் பல்லக்கு திருநெய்த்தானம் கோயிலுக்குள்
எழுந்தருளும் காட்சி..
திருச்சோற்றுத்துறை பல்லக்கு திருநெய்த்தானம்
கோயிலுக்குள் எழுந்தருளும் காட்சி..
காணொளிகளுக்கு நன்றி
Thiruvaiyaru.in
**
கொட்டும் மழையில்
இரவு 10:00 மணியளவில்
திரு ஐயாற்றுக்கு வந்த பல்லக்குகளுக்கு
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..
கீழ்வரும்
படங்களுக்கு நன்றி தருமபுர ஆதீனம்
பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. 4/38/9
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இன்னும் தஞ்சாவூர், திருவையாறு, குடந்தை பக்கமெல்லாம் திருவிழாவை முறையாக அழகாக நடத்துகிறார்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஆம்.. நேரில் பார்த்தால் தான் புரியும்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
படங்கள் காணொளிகள் சிறப்பு. அடிகளாருக்கு ஒரு தனிப்படம்!
பதிலளிநீக்குஅந்தப் படம் சரியாகப் பொருந்தியது..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
சிறப்பான படங்கள். ஆதீனகர்த்தர்கள் வந்தால் தான் திருவிழாவே களை கட்டுகிறது. பெரிய பல்லக்கில் இருந்து எல்லாவற்றையும் நன்றாகத் தரிசித்துக் கொண்டேன். கூட்டம் நெரிசல் படங்களிலேயே தெரிகிறது. நம்மால் எல்லாம் தாங்க முடியாது. இப்படிப் பார்த்து மனதைச் சமாதானம் செய்துக்க வேண்டியது தான்.
பதிலளிநீக்கு/// நம்மால் எல்லாம் தாங்க முடியாது. இப்படிப் பார்த்து மனதைச் சமாதானம் செய்துக்க வேண்டியது தான்.///
நீக்குஎன்னால் முடிந்தவரை பதிவில் தருகின்றேன்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
மக்கள் வெள்ளம்... பார்க்கப் பரவசம். தருமபுரி ஆதீனம் தலையில் தலப்பாக்கட்டு வித்தியாசமாக இருக்கிறது. நல்ல பதிவு.
பதிலளிநீக்குதருமபுர ஆதீனம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
அழகான படங்கள்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நலம் வாழ்க..