நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2022

பூக்கோலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12
ஞாயிற்றுக்கிழமை

தஞ்சை ஸ்ரீ முத்து மாரியம்மன்
அன்னையே உனைப்பாட
ஆயிரமாய் சொல்லிருக்க
எந்த ஒன்றை நானெடுப்பேன்
என்னவென்று பாடிவைப்பேன்..

முத்தென்று பாடுவதோ
மணியென்று பாடுவதோ
முன்நிற்கும் தமிழென்று
முந்திவந்து பாடுவதோ..

தாயேநீ தன்மகனைத்
தாங்கியே காத்தருள்வாய்
வினையென்னைச் சூழாமல்
வேலியெனக் காத்தருள்வாய்..

பொய் சூது களவு என்று
புறவழியில் போனதில்லை
மெய் வழிந்த வாழ்வதனில் 
உனையன்றி யாருமில்லை..

காமத்தை மோகத்தை
கண்டறியும் மாரியே
கரையேற வேண்டுமே
நானும் தடுமாறியே..

அத்தன் திரு மேனியிலே
ஆங்கு ஒரு திருக்கோலம்
அடியார்தம் நெஞ்சகத்தில்
நீங்காத பூக்கோலம்..


பூக்கோலம் மாக்கோலம்
நானறிந்த தில்லையே
புகழ்க் கோலம் பாடுவார்
வழிமறந்த தில்லையே..

தில்லை தனில் காளியாய்
தீவளர்த்து ஆடினாய்
தீயதெலாம் ஓடிடவே
திங்களைத் தான் சூடினாய்..

ஆயிரமாங் கண்களும்
அன்பினையே பாலிக்கும்
அடியவர்தம் இல்லத்தில்
ஆனந்தமே பூரிக்கும்..

பிழையான பிழை தன்னில்
மீண்டு வர வேணுமே
சூலினியின் சந்நிதியை
சூழ்ந்து வர வேணுமே..

கூடிவரும் அடியாருள்
அடியனையும் கண்டு கொள்வாய்
பாடிவரும் தமிழ்கேட்டு
பாலனையும் ஆண்டுகொள்வாய்..

நின்வாசல் வழிநின்று
நித்தமுமே யாசிக்க
பிழையேது குறையேது
நான் இன்னும் யோசிக்க..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

12 கருத்துகள்:

  1. செய்த தவறுகளை மன்னித்து, இனி தவறு செய்யும் மனமே  இல்லாதிருக்கவும், உனையே நினைந்திருக்கவும் அருள்வாய் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // செய்த தவறுகளை மன்னித்து, இனி தவறு செய்யும் மனமே இல்லாதிருக்கவும், உனையே நினைந்திருக்கவும் அருள்வாய் அம்மா.//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அன்னை அனைத்து ஜீவன்களையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  3. அம்மனுக்கு பாமாலை அற்புதம்.
    ஆவணி ஞாயிறு புன்னை நல்லூர் மாரியம்மன் தங்க பாவாடை அணிந்து இருக்கும் கோலம் அருமை.

    தஞ்சை முத்து மாரியம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // புன்னை நல்லூர் மாரியம்மன் தங்க பாவாடை அணிந்து இருக்கும் கோலம் அருமை...//

      அவை பழைய படங்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. பாமாலையால் நீங்கள் தொடுத்திருக்கும் பூமாலை அற்புதமாக இருக்கிறது. இறைவி அவள் காத்திடுவாள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி துளசிதரன் ..

      நீக்கு
  5. அம்மனை துதிக்கும் பாமாலை அருமை. அன்னையவள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அம்பிகையின் அருளால் அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் மேலோங்கட்டும். அனைவர் வாழ்விலும் அமைதி நிலவட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..