நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 06, 2022

ஆபத் சகாயம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடிப்பூரம்..
ஸ்ரீ பாடகச்சேரி ஸ்வாமிகளின் குருபூஜை நாள்..


சூழ்நிலையின் சிரமங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை..  புதன்கிழமையன்று மதிப்புக்குரிய கோமதிஅரசு அவர்கள் ஸ்ரீ பாடகச்சேரி மகானைப் பற்றி எழுதியிருந்தார்கள்.. 

வியாழக்கிழமையன்று தான் அந்தப் பதிவினைப் பார்த்தேன்.. அன்றிரவு அந்தப் பதிவில் கருத்தை எழுதிய பின் உறக்கம்.. 

நேற்று காலையில் எழுந்ததும்
அந்தக் கருத்து பதிவாகி இருக்கின்றதா என  கவனித்தேன்.. பதிவில் கோமதிஅரசு அவர்கள் சொல்லியிருந்த மறு மொழியால் என் மனம் நெகிழ்ச்சியுற்றது..

அந்த நெகிழ்ச்சியின் விளைவு இன்றைய பதிவில்..


அருட்பெருஞ் ஜோதி அருட்சிவ ஒளியாய்
அடியவர்க்கு ஆகும் அடைக்கல நிழலாய்
ஆபத் சகாய அமுதே போற்றி..
அன்பின் ஒளியே போற்றி போற்றி..1

துயர்படும் வாழ்வில் துன்பங்கள் தீர்க்கும்
தூயவர் திருவடி போற்றி போற்றி..
தொழுவார் விழியில் ஒளியே போற்றி..
திருவே துணையே போற்றி போற்றி.. 2

நன்மைகள் நல்க நானிலம் நடந்த
பசுபதி பாத மலர்கள் போற்றி..
புன்மைகள் தீர்க்க புழுதியில் நடந்த
புண்ணிய பாதம் போற்றி போற்றி.. 3

அல்லலை அறுக்கும் அருட்பெருஞ் ஜோதி
அன்பின் முகமே போற்றி போற்றி..
தனிப்பெருங் கருணை தண்ணிழல் அருளும்
தவமே சிவமே போற்றி போற்றி.. 4

பிழையாய் பிழைகள் பிழைபல நூறு
அனைத்தும் மறந்து காத்திடும் ஜோதி
அன்பினில் கலந்து அருமருந்த ளிக்கும்
அருட்சிவ சுடரே போற்றி போற்றி.. 5

அருள் விழியாலே அல்லலை நீக்கி
அருள் மொழியாலே ஆறுதல் கூட்டி
திருநீ றதனால் திருவுளங் காட்டும்
திருவருள் போற்றி போற்றி போற்றி.. 6

திருந்தாப் பிணியை தீமையை ஓட்டி
வருந்தா வகையை வாழ்வினில் காட்டி
உயிரில் உடம்பில் உறுதியை ஊட்டும்
உத்தமர் திருவடி போற்றி போற்றி.. 7

நலிந்தவர் நடுக்கம் தீர்க்கும் மருந்தே
மக்களின் துயரம் மாற்றிடும் விருந்தே
அடைக்கலம் அருளும் ஆபத் சகாயம்
அருட்சிவ நிழலே போற்றி போற்றி.. 8

ஆடகப் பொன்போல் அருளொளி காட்டும்
பாடகச் சேரி திசையது போற்றி
வீடகத்தே நல் வினையது நிறைய
பாடகச் சேரி பசுபதி போற்றி.. 9

அடியவர் அன்பில் எனையும் வைத்த
அருளா னந்தக் கடலே போற்றி
கைதொழு வாரவர் கவலையை மாற்றும்
கருணா மூர்த்தி போற்றி போற்றி.. 10

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. கோமதி அரசுவின் பதிவையும் உங்கள் கருத்துப் பரிமாற்றங்களையும் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் பாடகச்சேரி ஸ்வாமிகள் பற்றிக் கேட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  3. படிச்சேன். மெய் சிலிர்த்தேன். இங்கேயும் கொடுத்திருக்கும் தகவல்களும் பாமாலையும் மிகவும் சிறப்பு. மிக அருமையாகப் பாமாலையால் துதித்து விட்டீர்கள். உங்களுக்குக் கைவந்த கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. தற்சமயம் உங்கள் வலியும் வேதனையும் குறைந்திருக்கும் என நம்புகிறேன். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. பாடச்சேரி சுவாமிகள் பாட வைத்து விட்டார். ஆபத் சகாயம் என ஓடி வந்து திருநீறு அணிவித்து இருப்பார்.
    ஆரோக்கியமாக கவி பாடுங்கள்.
    போற்றி அருட்பா அருமை.
    அன்பின் ஒளியில் அனைவரும் நலமாக இருக்க வேன்டும்.
    என் மறுமொழியை பற்றி சொன்னதற்கு நன்றி.
    உங்கள் பதிவில் என் பதிவைபற்றி சொல்லி இருந்த விவரம் கீதா சாம்பசிவம் சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படித்தான் நினைத்துக் கொள்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. மிக அருமையாகப் பாமாலை எழுதியிருக்கீங்க துரை அண்ணா. உங்கள் தமிழும், டக்கென்று பா எழுதும் திறமையும் வியக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி சகோ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. பாடச்சேரி சுவாமிகள் பற்றி நல்ல பாமாலை தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..