நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வெள்ளிக்கிழமை
சித்திரை ஒன்பதாம் நாள்..
தஞ்சை
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
ஆலயத்தில் மூலஸ்தானத்தின்
தென்புறமாக அமைந்துள்ள
அஷ்டலக்ஷ்மி
தரிசனம்..
இராவணனிடத்தில் தனது செல்வங்களைப் பறிகொடுத்ததும் அல்லாமல் நாட்டை விட்டு விரட்டப்பட்ட நிலையில்
குபேரன் இங்கு வந்து
சிவபெருமானை
வழிபட்டு நிற்க இறைவனும் தஞ்சம் அளித்து மீண்டும் அனைத்து செல்வங்களையும் அருளி வடதிசைக்கு அதிபதியாக ஆக்கினார் என்பது தலவரலாறு..
அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் தனது மனைவி
ஸ்ரீ சித்ரரேகாவுடன் ஸ்ரீ குபேரன் சிவ வழிபாடு செய்வதை தரிசிக்கலாம்..
தெற்கு நோக்கி விளங்கும் சிவலிங்க வழிபாட்டினால் கடன், நோய், பாவம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்..
இன்றைய பதிவிலுள்ள
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திர மாலை
தஞ்சை ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் சந்நிதியில் இருந்து பெறப்பட்டது..
தனலக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம: 1
வித்யாலக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம: 2
தான்யலக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம: 3
சௌபாக்யலக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம: 4
வீரலக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம: 5
மஹாலக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம: 8
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மறுபடி தஞ்சைப்பக்கம் வரும்போது (எப்போது?!) அவசியம் இந்தக் கோவிலையும் பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
சீக்கிரம் வாருங்கள்..
சிக்கல் எல்லாம் தீருங்கள்..
மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? இப்போதுதான் தங்களுக்கு சற்று உடல்நலமில்லை என எ. பியின் கருத்துரையில் தெரிந்து கொண்டேன். உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பதிவும், அஷ்டலஷ்மி அன்னைகளின் படங்களும் அருமையாக உள்ளது. இக்கோவில் விபரங்கள் படித்து தெரிந்து கொண்டேன். அன்னைகள் அனைவரையும் மனமாற தொழுது வணங்கி கொண்டேன். நீங்கள் பகிரும் எல்லா கோவில்களையும் நேரில் காண ஆசை வருகிறது. ஆனால், அதற்கான சந்தர்ப்பங்கள் அமைய வேண்டாமா? உங்கள் தளம் வழியாக அனைத்து கடவுளையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கே நான் மனமாற இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். உங்களின் இறைப்பணி என்றும் தொடர்ந்திட வேண்டுமாயும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இங்கே வெயில் வியர்வையின் தாக்கத்தினால் ஜலதோஷம் சளித் தொந்தரவு.. மற்றபடி வேறொன்றும் இல்லை..
நீக்குபதிவைப் பற்றிய தங்களது கருத்தினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இந்தக்கோயிலுக்கெல்லாம் போனதே இல்லை. அந்த ஊரில் வசிக்கும்/வசித்த உறவினர்களும் இது பற்றிச் சொல்லவே இல்லை! உங்கள் மூலம் இதெல்லாம் தெரிந்து கொள்கிறேன். நன்றி. படங்களும் விபரங்களும் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... கருத்துரைக்கு நன்றியக்கா..
நீக்கு//https://sivamgss.blogspot.com/2008/10/4.html// இந்த நமஸ்கார ஸ்லோகங்கள் தேவி மஹாத்மியத்தில் உள்ளவை. இது குறித்து முன்னர் சுமார் பதினான்கு வருடங்கள் முன்னர் நவராத்திரிப் பதிவுகளில் எழுதி இருப்பதன் சுட்டியை மேலே கொடுத்திருக்கேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குதரிசனம் நன்று ஜி வாழ்க வையகம்
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குபுதிதாய் அறியும் கோயில். வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வர வேண்டும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
அன்பின் துளசிதரன்..
நீக்குஅவசியம் தஞ்சைக்கு வாருங்கள்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான தரிசனம் கிடைத்தது. நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்கு