நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

கல்யாணத் திருவிழா 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நிகழும் பங்குனி 26 சனிக்கிழமை  அன்று (9/4) காலையில் திருஐயாற்றில் இருந்து புறப்பட்டு திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதன் பேட்டை - கிராமங்களைக் கடந்து கொள்ளிடப் 
பெரு நதியில் இறங்கி அக்கரையில் இருக்கும் திருமழபாடிக்குச் சென்ற மாப்பிள்ளை வீட்டார்கள்..
திரு ஐயாறு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர்
அருட்செல்வன் ஸ்ரீ நந்தீசன்..
மகா தீபஆராதனை தரிசனம்..










கொள்ளிடக் கரையில்
மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு வரவேற்ற பென் வீட்டார்கள்..
திருமழபாடி ஸ்ரீ சுந்தராம்பிகை உடனாகிய
ஸ்ரீ வைத்தியநாதப் பெருமான் அலங்கார தரிசனம்..








நி
கழ்வின் ஒளிப்படங்கள்
திரு நாராயண ஸ்வாமி அவர்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
**

ஸ்ரீ சுயம்பிரகாஷினி தேவி உடனாகிய
ஸ்ரீ நந்தீசன் திருவடிகள் போற்றி..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

22 கருத்துகள்:

  1. மாப்பிள்ளையும் பெண்ணும் அலங்காரங்களில் ஜொலிக்கிறார்கள்.  அருமையான படங்கள்.  அவர்கள் அருள் நமக்கு கிடைக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      இறைவனின் நல்லருள் கிடைக்கும்படிக்கு வேண்டிக் கொள்வோம்..

      மகிழ்ச்சி.நன்றி..

      நீக்கு
  2. முதலிலேயே வந்து நான்கு முறை முஅயற்சித்தேன்.  கமெண்ட் பப்லிஷ் கொடுத்ததும் காணாமல் போகிறது.   சில நிமிடங்களுக்குப் பிறகு புதிதாகத் திறந்து கமெண்ட் இட்டதும் இப்போது வந்திருக்கிறது.  வெங்கட் தளத்தில் இட்ட கமன்ட் சென்றதா இல்லையா என்று தெரியவில்லை.  இதேபோல சட்டென காணாமல் போனது.  தேவகோட்டைஜி தளத்தில் மற்றும் இங்கு வந்ததது போல ரோபோவும் வரவில்லை.  மாடரேஷன் உள்ள இடங்களில் இரு ஒரு சிரமம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயம் எனக்கு புதிதாக இருக்கின்றது.. என்ன செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை..

      நீக்கு
    2. நம் கையில் எதுவும் இல்லை.  பிளாக்கர் விளையாட்டு.  ஏற்கெனவே பானு அக்கா சொல்லிக் கொண்டிருப்பதுதான்.

      நீக்கு
    3. ஓ.. கதை இப்படிப் போகின்றதா...

      நல்ல வேளை..

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் எத்தனை மாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
  3. இன்றைய தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. இன்றைய தரிசனம் மிக அருமை.
    அடுத்து தேர்திருவிழா.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  7. அருமையான மாப்பிள்ளை/அருமையான பெண். படங்கள் எல்லாம் அழகு. அது சரி, எனக்கு ஒரு சந்தேகம். சுந்தரர் "மழபாடியுள் மாணிக்கமே!" என இவரைத்தான் அழைத்தாரா? இன்னொரு மழபாடி இருப்பதாகப் படிச்சிருக்கேன். அதான் சந்தேகம். அரியலூர் மாவட்டத்து மழபாடியும் இதுவும் ஒன்று தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமழபாடி திருத்தலம் இது தான்... வேறெங்கும் கிளைகள் இல்லை..

      ஈஸ்வரன் தன் கரத்தில் மழுவினை ஏந்தி திருநடனம் ஆடியதால் திரு மழு ஆடி என்பது திருமழபாடி என்றானதாம்...

      அன்றைக்குப் பெருங் கூட்டத்தால் கோயிலுக்குள் செல்வதற்கு இயலவில்லை.. கோயில் தரிசனம் செய்த பிறகு புதிய பதிவு ஒன்று தர வேண்டும்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. சுந்தரர் -மழபாடியுள் மாணிக்கமே!.. என்று பதிகம் பாடி அருளியது இத்தலத்தில் தான்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    3. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! பின்னர் வரேன்.

      நீக்கு
  8. அம்மையையும் அப்பனையும் காணக் கண் கோடி வேண்டும். கல்யாணம் களை கட்டுகிறது. முதல் பதிவையும் பார்த்துவிட்டு இங்கு வந்தேன்

    அருமையான தரிசனம், சார். மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மனதிற்கு நிறைவினைத் தரும் புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்த மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அனைத்தும் பார்த்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..