நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
" திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி.. "
ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு அது..
இந்தத் திருநெல்வேலி மண்ணில் தான் முந்து தமிழ் தோன்றிய மூத்த மலையாகிய பொதிகை விளங்குகின்றது..
இந்தத் திருப் பொதிகை மலை தான் தமிழகத்தின் ஜீவ நதியாகிய பொருணை எனப்படும் தாமிரபரணியின் பிறப்பிடம்..
இமயாசலத்தில் ஸ்ரீ பார்வதி - பரமேஸ்வரர் திருக்கல்யாணத்தின்
போது முப்பத்து முக்கோடித் தேவர்களும் முனிவர்களும், யட்ச, கின்னர, வித்யாதர, நாகர்களும் கூடியதால் பூமியின் நிலை பாதிக்கப்பட்டது..
வட கோடு தாழ்ந்து தென் கோடு உயர்ந்தது..
அப்போது,
பூமி சம நிலையை அடையும் பொருட்டு - இறைவன் பெருங்கருணை கொண்டு மண மேடையில் இருந்த பூரண கும்பத்திலிருந்து அகத்திய மகா முனிவரைத் தோற்றுவித்து தென் திசைக்கு அனுப்பி வைத்தார்..
அப்போது அகத்தியர் கேட்டுக் கொண்டபடிக்கு இறைவன் தனது கல்யாணத் திருக் கோலத்தைக் காட்டியருளிய திருத்தலமே பாபநாசம்..
திருநெல்வேலியின் தாமிரபரணிக் கரையிலுள்ள நவ கயிலாயங்களுள் முதன்மையானது பாபநாசம்..
இத்தலத்தில் பித்ரு தோஷங்கள் நீங்குகின்றன.. இங்கு தாமிரபரணியின் கரையில் செய்யப்படும் தர்ப்பணங்களினால் ஆத்ம காரகனாகிய
ஸ்ரீ சூர்யமூர்த்தி மகிழ்ச்சியடைகின்றான் என்பது ஐதீகம்..
அந்த வகையில் கடந்த
(பங்குனி 17) வியாழக் கிழமை அமாவாசையன்று பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பாபநாசத்திற்கு சென்றோம்..
இறையருளால் எல்லாம் நலமாக நிகழ்ந்தன..
திருத்தலம்
பாவ நாசம்
இறைவன்
ஸ்ரீ பாவநாசப்பெருமான்
அம்பிகை
ஸ்ரீ உலகநாயகி
தல விருட்சம்
களாமரம்
தீர்த்தம்
தாமிரபரணி
திருக்கோயிலின் வாசலில் பொங்கிப் பெருகியவளாகத்
தாமிரபரணி..
பாபநாசம் திருக்கோயிலினுள் படமெடுப்பதற்கு அனுமதியில்லை.. ஏனைய இடங்களில் பதிவு செய்யப் பெற்றவை இன்றைய பதிவில்..
முந்தித் தானே முளைத்தானை
மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை
அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச்
செஞ்சொல் மாலை அடி சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான்
என்பார் பாவநாசமே..4.015.11
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சிறப்பு. இத்திருத்தலத்திற்கு நான் சென்றதில்லை.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான தகவல்கள். திருநெல்வேலி சென்றிருந்தாலும் இங்கே சென்றதில்லை. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்களது வருகைக்கு
மகிழ்ச்சி.. நன்றி..
நாங்கள் சென்று வந்ததெல்லாம் நினைவில் வருகின்றன. அருமையான தலம். இது நவ கயிலாயத்தில் முதன்மை பெற்றிருந்தாலும் நாங்க பார்த்தது அந்த வரிசையில் அல்ல. வழியில் இருக்கும் கோயில்களை எல்லாம் பார்த்துக்கொண்டு சென்றோம். இங்கே போகும்போது மத்தியான வேளை என்பதால் நதியில் குளிக்க முடியலை. அதே போல் படமும் எடுக்க முடியவில்லை. :(
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு நல்வரவு.. நவ கயிலாய தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம்..
நீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நான் சென்று வராத இடம் தகவல்கள் படங்கள் அருமை ஜி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
பலமுறை சென்ற இடம்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஇன்றைய படங்கள் பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. மிக அருமையான தலம்.
பதிலளிநீக்குஅழகான அருமையான படங்கள்.
இறைவனும், இறைவியும் எல்லா நலங்களும் அருள வேண்டும்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. பாபநாசம் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம்.. அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபுஷ்கரத்தின்போது இந்தத் தலத்துக்குப் போக முடியவில்லை. நவகைலாயங்களில் நான்கிற்குச் சென்றிருந்தோம் (நவதிருப்பதியும் சென்றிருந்தோம்).
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
அழகான தலம். இயற்கையுடனான திருத்தலம். சென்றதில்ல. உங்கள் படங்கள் மூலம் கிடைக்கப் பெற்றேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
துரை அண்ணா பல நினைவுகள் சென்ற நினைவுகள்...மிகவும் பிடித்த இடம்.
பதிலளிநீக்குகீதா