நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த பத்து நாட்களாக தஞ்சை ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகை உட்னாகிய ஸ்ரீ தஞ்ச புரீஸ்வர ஸ்வாமி திருக் கோயிலில் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வந்த நிலையில் சித்திரை மூன்றாம் நாள் சனிக் கிழமை (16/4) காலை ஏழு மணியளவில் யாகசாலை பூஜைகளுடன் தீர்த்தவாரி நடைபெற்றது..
அருகிலுள்ள வெண்ணாற்றிற்கு பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ அஸ்த்ர தேவர் எழுந்தருளினார்..
அஸ்த்ர தேவருக்கு அங்கே அபிஷேகங்கள் நடைபெற்று பாலிகை வெண்ணாற்றில் கரைக்கப்பட்டு தீப ஆராதனையும் நடந்தது..
அந்த வைபவத்தின் காட்சிகள் இன்றைய பதிவில்..
சித்திரை நிறைநிலா
தரிசனம்
தீர்த்தனை சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ?.. 5/02..
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
பாலிகையை ஆற்றில் கரைக்க வெண்ணாற்றில் தண்ணீர் இருந்ததே... இதற்காக ஏற்பாடு செய்திருந்தார்களா? இயற்கையாகவே இருந்ததா? அழகிய படங்கள் மூலம் எங்களாலும் தரிசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்.
நீக்குதங்களுக்கு நல்வரவு..
வெண்ணாற்றின் படுகையில் எப்போதும் போல தண்ணீர் இருக்கின்றது.
இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரும் வரைக்கும் காணும் என்று நினைக்கின்றேன்..
மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான படங்கள். ஆற்றுக்குச் செல்லும் வழி அடர்ந்த மரங்களோடு பசுமையாகக் காட்சி கொடுப்பது கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவு. நல்ல தரிசனம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குஆக்ரமிப்பினால் பாதை சுருங்கி விட்டது..
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
நன்றியக்கா..
படங்கள் அனைத்தும் அருமை ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
படங்கள் அனைத்தும் அழகு. பரவாயில்லையே ஆற்றில் நீர் இருந்திருக்கிறதே. அருமை
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
படங்கள் அருமை...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
படங்களின் வழி தரிசனம் சிறப்பு. அனைத்தும் அழகாக இருக்கின்றன
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி துளசிதரன்..
தீர்த்தவாரியை நேரில் பார்த்து தரிசனம் செய்த உணர்வு கிடைத்தது.
பதிலளிநீக்குமிக அழகான படங்கள்.
நிறைமதி அழகு.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலமே வாழ்க..
படங்கள் அனைத்தும் அழகு. படங்கள் வழி நாங்களும் காட்சிகளைக் கண்டு ரசித்தோம். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
உங்கள் பதிவு மூலம் காணும் வாய்ப்பு. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..
நீக்கு