நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
செவ்வாய்க்கிழமை
திருப்புகழ்
ரத்தினகிரி
தத்தனா தானனத் ... தனதான
தத்தனா தானனத் ... தனதான
பத்தியால் யானுனைப் ... பலகாலும்
பற்றியே மாதிருப் ... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ... கருள்வாயே..
உத்தமா தானசற் ... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ... கிரிவாசா
வித்தகா ஞானசத் ... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ... பெருமாளே..
- அருணகிரிநாதர் -
பக்தியெனும் அன்பினால் நான் உன்னைப் பல வழிகளிலும் பற்றிக் கொண்டு -
உயர்ந்து விளங்குகின்ற திருப்புகழைப் பாடி முக்தனாகும் வழியிலே சிவகதியில் சேர்ந்து நான் உய்வடைவதற்கு திருவருள் புரிவாயாக..
உத்தமமான குணங்களுடன்
கூடிய நல்லவர்களிடம் நெருங்கி இருப்பவனே
ஒப்பில்லாத பெருமை உடைய ரத்னகிரியில் வாழ்பவனே ஞான வித்தகனே... திருவருள் ஞானத்தை நெஞ்சில் பதியச் செய்பவனே..
வெற்றி தரும் வேலாயுதத்தைத் திருக்கரத்தில் கொண்ட பெருமாளே..
நன்றி கௌமாரம்
முருகா முருகா
ஓம் நம சிவாய
***

வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய திருப்புகழ் பாமாலையும், அதன் நல்ல விளக்கமும் மிக அருமையாக உள்ளது. தம்பதி சமேதராய் முருக தரிசனம் பெற்றுக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.
நீக்குநன்றியம்மா
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
பதிலளிநீக்குதந்ததன தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கை
யுந்தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே
நின்சந்தயினை முன்பரிந் தின்பவுரி கொண்டு
நன்சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே
நல்ல பாடல். நீங்களே இயற்றியதா ஸ்ரீராம் சகோதரரே. இப்போதெல்லாம் பழங்கால செந்தமிழ் கவிபாட தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துகள்.
நீக்குகருத்துரையில் ஸ்ரீராம் அவர்கள்
நீக்குகுறித்துள்ளது அருணகிரிநாதர் பாடலாகும்
திருச்செந்தூர் திருப்புகழ்..
https://youtu.be/dTCyRYpZj1g?si=yu-JMEJEab4FoRVS
நீக்குதிருப்புகழ் பாடல் இணைப்பிற்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்குஅன்பின் வருகையும் திருப்புகழும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பாடல்பாடி முருகனை வணங்கினோம்.
பதிலளிநீக்குபடிக்கும் காலத்தில் பாடிய தேவாரப் பாடல். அருமையாக கருத்தும் தந்துள்ளீர்கள்.
ஓம் முருகா சரணம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.
நீக்குநன்றியம்மா