நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 24, 2025

மார்கழி 9

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 9 

குறளமுதம்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.. 9

அருளமுதம்


ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.. 9

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 9

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு சிராப்பள்ளி

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.. 1/98/1
**
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. மார்கழி ஒன்பதாம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. குறளமுதம், திருப்பாவை , திருப்பள்ளி எழுச்சி பாடி வணங்கினோம்.

    ஓம் திருப்பெருந்துறை பெருமானே சரணம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவும் அருமை. மார்கழி 9ஆம் வாழ்த்துகள். ஆண்டாள் நாச்சியார் அருளிய பாசுரமும், மாணிக்கவாசகர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி, திருஞானசம்பந்தர் இயற்றிய திருக்கடைக்காப்பு முதலிய பாடல்களையும் பாடி பரவசமடைந்தேன். இறைவன் அனைவரையும் நலமுடன் காப்பாராக. . .! நாளும் இறைவனடி பணிந்து தொழுவோம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..