நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 25, 2025

மார்கழி 10

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 10

குறளமுதம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.. 10

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.. 10

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி


புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.. 10

திருப்பள்ளியெழுச்சி நிறைவு

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு ஆலவாய்
(மதுரை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
**
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. மார்கழி பத்தாம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஈஸ்வர நாயாராயணன் இன்றும் என்றும் நம்மை காத்தருளட்டும்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம். அனைவருக்கும் நல்லதே கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள்புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..