நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 23, 2024

தேவாரத்தில்..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதம்
ஏழாம் நாள்
செவ்வாய்க்கிழமை

தம்பியொடுங் கான் போந்து
சேர் அரணும் போர் முடியத் 
தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத 
செவி என்ன செவியே..
-: சிலம்பு :-


திரு உசாத்தானம்

இறைவன்
ஸ்ரீ மந்திர்புரீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ பெரியநாயகி

தல விருட்சம் மா
தீர்த்தம் அநும தீர்த்தம்

நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர்வாழ் திரு உசாத் தானமே .. 3/33/1
-: திருஞானசம்பந்தர் :-
**

திருவலம்புரம்

இறைவன்
ஸ்ரீ வலம்புரநாதர்
அம்பிகை
ஸ்ரீ வடுவகிர்கண்ணி

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
 தல விருட்சம் பலா

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும் 
சேதுபந்தனஞ் செய்து சென்று புக்குப்
பொங்கு போர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொரு தன் திருவிரலால் இறையே ஊன்றி
அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே... 6/58/10
-: திருநாவுக்கரசர் :-
**
ஸ்ரீராம் ஜெய்ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. பாடலும் ,படங்களும் அருமை.
    தேவாரம் படித்து ராமரை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதை.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நம சிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. ஸ்ரீ ராமபிரானைப்பற்றிய பாடல்களையும் படித்து மகிழ்ந்தேன். திருஉசாத்தானம், திருவலம்புரம் கோவில்களைப் பற்றிய விபரங்களை அறிந்து இறைவனை வணங்கி கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ ராம் ஜெயராம்.
    ஓம் நமசிவாய.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராமரை தரிசித்துக் கொண்டோம்.

    சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..