நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 27, 2023

விட்டல விட்டல..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 10
புதன் கிழமை


ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தியை அனுசரித்து (10/9) கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தானம் எனப்படும் தக்ஷிண பண்டரி புரத்திற்குச் சென்றிருந்தோம்.. 

அன்றைக்கு ஏகாதசி..
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி வைபவத்தில் அன்றைய தினம் திருக்கல்யாண உத்ஸவம்..

இங்கே தஞ்சையில்
இரண்டு சிவாலய -  திருக் குடமுழுக்கு தரிசனம் செய்து விட்டு தட்டுத் தடுமாறி நடந்து நகரப் பேருந்துகளில் பயணத்து கும்பகோணத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு கோவிந்தபுரம் சென்றடைந்தபோது மணி 3:30.. 

காலை பத்து மணியளவில் திருக்கல்யாண வைபவம் நிறைவேறி கல்யாண விருந்தும் முடிந்திருந்தது..

மாலை தேநீர் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது..

சந்நிதி நடை திறக்கப்படும் நேரம்  4:30 என்பதால் அங்கே காவிரியின் கரையில் அமைந்திருக்கும கோசாலை தரிசனம் செய்து விட்டு வந்து  ஸ்ரீ ருக்மணி உடனுறை பாண்டுரங்கமூர்த்தியை கண்ணாரத் தரிசனம் செய்தோம்.. 

அருகிலுள்ள கோவிந்த புரத்தில் - ஸ்ரீ போதேந்திரர் அதிஷ்டானத்தையும் தரிசித்து விட்டு இரவு  பதினொரு மணியளவில் நல்லபடியாக
இல்லம் வந்து சேர்ந்தோம்..







காவிரி









கோவிந்தபுரம்





ஸ்ரீ போதேந்திராள்
அதிஷ்டானத்தின் திருவாசல்


அதிஷ்டானத்திற்கு அருகில் உள்ள
ஸ்ரீ காசி விஸ்வநாதர் சந்நிதி




ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்


மின்னல் தாக்கியதால் மூன்றாகக் கிளைத்திருக்கும் தென்னை


விட்டல விட்டல பாண்டுரங்கா..
விட்டல விட்டல பாண்டுரங்கா..
**
ஓம் ஹரி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***

6 கருத்துகள்:

  1. கோவிந்தபுரத்திற்கு மிக அருகில் சென்று நேரமில்லாததால் பார்க்காமல் திரும்பிய இடம். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. கோவிந்தபுரம் சென்றதில்லை. அங்கு சென்றால் ஒன்றிர்ர்கு மூன்று இடங்களை தரிசனம் செய்யமுடியும் போலிருக்கிறது. அடுத்த முறை செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. கோவிந்த புரம் தரிசித்துக் கொண்டோம். ஹரி ஓம்.

    பதிலளிநீக்கு
  4. அடிக்கடி தரிசனம் செய்த இடங்கள், கோவிந்தபுரம் . படங்கள் நன்றாக இருக்கிறது. தரிசனம் செய்து கொண்டேன்.
    நானும் முன்பு பதிவு செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அடிக்கடி போனோம். கோவிந்தபுரத்தில் சொந்தங்கள் இருந்தனர். அப்பாதுரையின் அம்மாவும் ஒரு சொந்தம் தான். ஆனால் அவரைப் பார்க்கலை. அவங்க தங்கை, தங்கை கணவர் நம்மவருக்கு அத்தை பையர், மருமகள். ஆகவே அடிக்கடி போயிருக்கோம். விட்டலனைத் தரிசிக்கவும் போயிருக்கோம். இப்போல்லாம் அந்த வழி சென்றால் கூடப் போவதில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..