நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 29
வெள்ளிக்கிழமை
இன்று
வயலூர் திருப்புகழ்
தானன தனத்த தானன தனத்த
தானன தனத்த ... தனதான
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ... லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ... யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ... மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ... மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ... நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ... குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ... வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
மணம் நிறைந்த தாமரை மலருக்கு
நிகரான உனது திருவடிகளைப் பற்றிய
நினைவு இல்லாதிருந்த அடியேனை.,
மகரந்தம் விரிகின்ற கொன்றை,
சுரபுன்னை, மகிழம் எனும் மரங்கள்
கற்பக விருட்சங்களைப் போல
வளர்ந்து நிறைந்திருக்கும்
விராலி மாமலையில்
யாம் நிற்போம். அதை மனத்தில் வைத்து
அந்தத் தலத்திற்கு நீ வந்திடு..
- என்று அழைத்து,
என் மனத்தில் இருக்கின்ற
ஆசை குற்றங்களை ஒழித்து,
ஞான அமுதம் அளித்த
அன்பினை இனி வருகின்ற
நாட்களில் மறக்க மாட்டேன்..
மன்மதனை எரித்த
தீ விழி நெற்றியையும்,
வேகமாக வந்த கங்கையைத்
தாங்கிய ஜடாமுடியையும்,
காட்டின் புற்றில் படமெடுத்து
ஆடும் பாம்பை அணிந்த காதையும்
உடைய தந்தையாகிய
சிவபெருமானின்
குருநாதனே..
சந்திரனும், சூரியனும்,
நட்சத்திரங்களும் உலவுகின்ற
சோலைகள் சூழ்ந்திருக்கின்ற
வயலூரனே..
திருக்கையில் தாங்கிய
வேலினைக் கொண்டு -
சூர பத்மனது தலையைக்
கொய்த பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
பாடலை நன்கு தமிழ்ப்படுத்தியுள்ளீர்கள் (எளிதில் அர்த்தம் புரிந்துகொள்ளும்படியாக)
பதிலளிநீக்குதிருப்புகழின் பதங்களை இன்னும் எளிதாகப் பிரிக்கலாம்.. பாடுவது சிரமமாக இருக்கும்..
நீக்குசந்தம் தான் அழகு..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு நன்றி ..
வினைகளைத் தீர்க்க முருகனைச் சரணடைவோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
அருமை...
பதிலளிநீக்குமுருகா சரணம்...
மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
திருப்புகழ் பகிர்வும் விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குதிருப்புகழை பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
திருப்புகழின் சிறப்பே சந்தம் தானே. எனினும் இங்கே எளீமையாகக் கொடுத்திருப்பதும் நல்லதே.
பதிலளிநீக்கு