நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 25, 2023

ஸ்ரீ கணேசம்

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 8
 திங்கட்கிழமை


அன்பின்
ஸ்ரீராம் அவர்களுக்காக
இந்தப் பதிவு..
தேவாரத்தில் இருந்து -
ஸ்ரீ கணேச ஜனனம்..

பிடியதன்  உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.. 1/123/5
-: திருஞானசம்பந்தர் :-

பிறர்க்கு வழங்கி மகிழும் கொடை எனும் குணத்தை வடிவமாகக் கொண்டு வள்ளலாக விளங்கும் பெருமக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் உறைகின்ற இறைவன், தனது திருவடிகளை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடிந்து களைவதற்காக - உமையாம்பிகையுடன் யானை உருக்கொண்டு கணபதியைத் தோற்றுவித்தருளினான்..


கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்தன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை அறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.. 6/53/4
-: திருநாவுக்கரசர் :-

கஜமுக அசுரனால் அடியவர்களுக்கு இன்னல் ஏற்பட்டபோது
கணபதியைக் கொண்டு அசுரனை அழித்தார் என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்!..

யாதும் சுவடு படாமல் -
ஏதொரு அடையாளமும் இன்றி - 
திரு ஐயாற்றுக்கு வந்து சேர்ந்த
திருநாவுக்கரசருக்கு
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபம் 
காட்டியதும் இதன்படியே!..


சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிண்யை 
என்பது லலிதா சஹஸ்ரநாமம்..

தனக்கென ஒரு காவலன் வேண்டும் என நினைத்த அம்பிகை - தானே தனது மேனியின் மஞ்சளைத் திரட்டி எடுத்து பாலன் ஒருவனை உருவாக்குகின்றாள்.. 

அந்தப் பிள்ளையே பிள்ளையார்.. 

அம்பிகை -
கணேச ஜனனியாகி இப்படியொரு பிள்ளையை உருவாக்கியதும் அந்தப் பிள்ளையை தனக்குக் காவலாக - கண நாயகனாக நிறைந்த வலிமையுடன்  நியமிக்கின்றாள்.. 

அவ்வேளையில் மாலைப் பொழுதானதால் கண நாயகனாகிய கணேசனை அழைத்து - " யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்!.. என்று சொல்லி விட்டு ஸ்நான கூடத்துக்கு சொல்கின்றாள்..

அம்பிகையைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாத நிலையில் ஈசன் அங்கே வருகின்றார்.. 

அவரை - கணேசன் அனுமதிக்காத நிலையில் பல வாக்குவாதங்களுக்குப் பின் திரிசூலத்தை ஏவுகின்றார்..

கணேசன் உருவாகிய சில பொழுதிலேயே அவருக்கும் ஈசனுக்கும் தர்க்கம் ஏற்பட்டு தலை தனியாகப் போய் விடுகின்றது..

இதற்குப் பின் நடந்ததை நாம் அறிவோம்..

இது வட நாட்டவரின் கதை..

ஆனால்,
தமது திருப்பதிகத்தின் வழியாக - கணபதியின் தோற்றம் பற்றி ஞானசம்பந்தப் பெருமான் அருளியிருக்கின்றார்.. 
அதுவே நமக்குப் பிரமாணம்..

திருநாவுக்கரசர்  ஸ்வாமிகளும் கணேச ஜனனத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றார்..

இப்படியாக,
அம்பிகை தானே - தற்பரையாய் கணேச மூர்த்தியை சிருஷ்டித்த விஷயத்தில் ஈசனும் அவரது பங்கிற்கு திருவிளையாடல் நிகழ்த்தியிருக்கின்றார்.

ஏதும் தெரியாத புரியாத நிலையில் இம்மண்ணுலகில் பிறந்த நாம் - இவர் தான் ஆதி விநாயகர் என்று தெரிந்து கொண்டிருக்கின்றோம்?..

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் - என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

ஆனை முகத்துடன் தோன்றியவரே விநாயகர்..

மனித முகத்துடன் ஆதி விநாயகரா? மனித முக நந்தி தேவர் என நினைத்தேன்!.. என்பது திரு ஏகாந்தன் அவர்களது வியப்பு..

மனித முகத்துடன் நந்தியம்பெருமானை தரிசிப்பதற்கு திரு ஐயாற்றுக்கு வரவேண்டும்!..

அம்பிகை - தானே தனது மேனியின் மஞ்சளைத் திரட்டி எடுத்து கணபதியை சிருஷ்டித்ததால் தான் இன்றும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பது!..

இது நமது மேலான சிந்தனைக்கானது..


திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், புலவர் கீரன் ஆகியோர் வழங்கியுள்ள -  பேருரைகளில் விநாயகரின் திருத்தோற்றம் பற்றி விரிவாகக் காணலாம்..

சதுர்த்தி வழிபாடுகள் நிறைவு எய்தியதும்
விசர்ஜனம் என்ற பேரில் நாடெங்கும் பிள்ளையாருக்கு செய்யப்பட்ட பிழைகள் ஏராளம்..

இனி வரும் நாட்களில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபடுவதற்கான உறுதியேற்று உய்வினை அடைவோம்!..
**

தற்போதைய குடியிருப்பில் 
ஸ்ரீ காரிய சித்தி விநாயகர் 
சதுர்த்தி அலங்காரம்..
**

ஓம் கம் கணபதயே நம: 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***


10 கருத்துகள்:

  1. விநாயகர் பற்றிய விவரங்களை மறுபடியும் அறிந்தேன்.  ஆதிவிநாயகர் கோவில் இதுவரை கேள்விப்படாதது என்றால் நீங்கள் அங்கு செல்ல ஆர்வமாயிருப்பீர்களோ என்றே உங்கள் பெயரை அங்கு சேர்த்தேன்!  

    வேழ முகத்தனை வேண்டி வேதனைகளை வென்றிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திலதைப்பதி செல்வதற்கு பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றேன்..

      முப்பது வருடங்களுக்கு முன்பே இத்தலத்த்தைப் பற்றித் தெரியும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. விநாயகர் வரலாறு அருமை.
    உங்கள் குடியிருப்பு ஸ்ரீ காரிய சித்தி விநாயகர் காரியங்கள் அனைத்தையும் நல்லபடியாக நடத்தி கொடுக்க வேண்டும்.
    சதுர்த்தி அலங்காரம் அருமை. வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரை வணங்கி விட்டுத் தான் எங்கும் செல்வது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. விநாயகர் பற்றீ நான் எழுதிய பிள்ளயார் பெருமை வாய்ந்த பிள்ளயார் மின்னூலாக வந்திருக்கு. Freetamil e books இல் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. மிகச் சிரமத்துடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டுத் தொகுத்தேன். இப்போக் கிடைக்கலை என்பது வருத்தமாய் இருக்கு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருத்தம் நியாயம் தான்..

      பிரதி இல்லாமல் போவது பிரச்னை..

      என்னுடைய தொகுப்புகள் பலவும் கணினியோடு போய் விட்டன..

      நீக்கு
  4. அதிலும் ஆனை உருவத்தில் அம்மையப்பன் நடத்திய திருவிளாயாடல் வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. உள் உணர்ந்தவர்கள் மிகச் சிலரே..

      மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  5. விநாயகர் பற்றி நல்ல பகிர்வு.

    கணேசா சரணம்.

    சதுர்த்தி அலங்காரம் அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..