நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 16, 2023

உறியடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 30
சனிக்கிழமை

குருவாயூர்
க்ஷேத்திரத்தில்
நடைபெற்ற உறியடித் திருவிழா..


சிறு வயதில் உறியடி வைபவங்களைப் பார்த்ததுண்டு..

தமிழகத்தில் உறியடித் திருவிழா இப்போது நடத்தப்படுகின்றதா..

தெரியவில்லை..


Fb ல் கிடைத்த காணொளி..
நெஞ்சார்ந்த நன்றி..

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே..14

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர்  நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல்  அவிழத் திளைத்து  எங்கும் 
அறிவு அழிந்தனர்  ஆய்ப்பாடி ஆயரே.. 16
-: பெரியாழ்வார் :-
***

ஓம் ஹரி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. உறியடி திருவிழா மயிலாடுதுறையில் உண்டு பார்த்து இருக்கிறேன். வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலில் உறியடி திருவிழா நடக்கிறது.

    காணொளி மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மேலதிக குறிப்பும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. பெரியாழவார் பாசுரம் பாடி உறியடி திருவிழாவை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. கோமதி அரசு சொன்னாப்போல் வடக்குக் கிருஷ்ணன் கோயில் உறீயடித்திருவிழா சின்ன வயசில் கண்டு களீத்திருக்கேன். அந்தக் கோயிலின் உற்சவங்கள் எல்லாமும் விமரிசையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..