நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 25
வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில்
வழக்கம் போல
திருப்புகழ்
தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன ... தனதான
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறல்சூலை குட்டமொடு ... குளிர்தாகம்
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீர டைப்பினுடன் ... வெகுகோடி
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி ... முடியாதே
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை ... யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை ... யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் ... முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு ... மழல்வேலா
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை ... பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)
வலி, வாதம், பித்தம், கண்ட மாலை எனும் கழுத்துப் புண், சிலந்தி எனும் குழிப்புண்,
உடல் வறட்சி, வயிற்று உளைச்சல், குஷ்டம், குளிர் சுரம், நா வறட்சி,
மிகுதியான நீரிழிவு, மகோதரம் எனும் உப்புசம், கபம் என சளி, வாந்தி, களைப்பு,
மூத்திரத் தடை இவைகளுடன் கோடிக் கணக்கில்
சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிவது
தெளிந்த அறிவு இல்லாத எனக்கு இனிமேல் இயலாது.
மங்கலம் நிறைந்த
உனது திருப்புகழை எனது நாவாரப் புகழ்வதற்கு
சிவஞான சித்தியைத்
தந்தருள்வாயாக.
நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழும்படி
ஒப்பற்ற ஒளி வீசும்
சுதர்சன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞான மயமான
பவள நிறச் சடை முடியினை உடைய ஈசன் - புகழ்மிக்க சிவகாமியின் மணாளன் -
பேரின்பப் பெருங்கடல் ஆகிய சித்த மூர்த்தி சிவபிரான் அருளித் தந்த முருகப் பெருமானே..
கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகன்
தாரகாசுரனுடன்
அசுரர்கள் யாவரும் இறந்து ஒழியும்படிச் செய்த அக்கினி வேலாயுதத்தை உடையவனே,
அமுத மயமான பீடத்தினள் ஆகிய வள்ளிக் குற மகளுடனும், ஐராவத யானை வளர்த்த மங்கை தேவயானையுடனும்
திருஅண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!..
அண்ணாமலையின்
அழகா சரணம்
அறுபடை வீட்டின்
இறைவா சரணம்..
***
அடடே... அண்ணாமலையின் திருப்புகழா... முருகா... முருகா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஅத்தனை வியாதிகளோடும் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்கேனே என நினைத்தால் என் மேலேயே எனக்குக் கழிவிரக்கம் மேலிடுகிறது. அந்த முருகன் தான் அருள் செய்ய வேண்டும். முருகனருள் முன் நிற்கட்டும்.
பதிலளிநீக்குவருந்தல் வேண்டாம்..
நீக்குவடிவேலன்
வழிகாட்டுவான்..
வேதனைகள் தீரும்..
அன்பின் வருகையும் கருத்தும் நன்றி.. நன்றியக்கா..
முருகன் திருப்புகழ் நன்று ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குதிருப்புகழ் பாடி உருகனை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குபிணிகள் அகல வேண்டும். எல்லோரு நலமாக இருக்க வேண்டும் முருகா!
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. முருகனை, வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகனை மனதாற தரிசித்துக் கொண்டேன்.
அருணகிரி நாதர் இயற்றியிருக்கும் அண்ணாமலை அழகின் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து துன்புறுத்தும் இவ்வாழ்வில், எனக்கும் சரி. என் மகள், பேத்திக்கும் சரி. முருகப் பெருமான் தன் அருள நோக்கு புரிந்து அவன் திருக் கைவேலால், எங்கள் பிறவி முன்வினைகள் யாவையும் அகற்றிட மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
முருகா சரணம். கந்தா சரணம் என தினமும் கை கூப்பி அவனிடந்தான் வேண்டுதலை வைத்தபடி உள்ளேன். 🙏.
இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
"அண்ணாமலை அழகனின்" எனத் திருத்தி படிக்கவும். தட்டச்சில் பிழை வந்து விட்டது.
நீக்கு// எங்கள் பிறவி முன்வினைகள் யாவையும் அகற்றிட மனமார பிரார்த்தித்துக் கொள்கிறேன்... //
நீக்குநானும் அவ்விதமே வேண்டிக் கொள்கின்றேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..