நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
நான்காவது வெள்ளிக்கிழமை..
***
இன்றைய பதிவில்
***
இன்றைய பதிவில்
அபிராமி பட்டர் அருளிச் செய்த
திருப்பாடல்கள்
கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே..
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே..
நாயகி நான்முகி நாரயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரன் நமக்கே..
***
சிக்கல்
ஸ்ரீ பத்ர காளியம்மன்
திருநடனக் காட்சி
நலமெலாம் தருவாய்
தாயே பராசக்தி..
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
தாயே பராசக்தி..
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
ஓம் சக்தி...
பதிலளிநீக்குபராசக்தி...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் பராசக்தி உலகை காக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..
பராசக்தி நடனம் காணொளி நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநலமெல்லாம் தருவாய் தாயே பராசக்தி!//
துளசிதரன்
பராசக்தி தாய் எல்லோருக்கும் நலம் அருள வேண்டும். இயற்கைச் சீற்றம் கூடியிருக்கிறதே.
கீதா
அன்பின் துளசிதரன்/ கீதா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
இயற்கையின் சீற்றம் கூடியிருக்கிறது தான்... ஆயினும் அன்னை அவள் அறிவாள் அனைத்தும்...
ஓம் சக்தி ஓம்..
உலகை அரசாளும் அன்னை அனைவரையும் காக்கப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
அன்னையின் நல்லருளை நாடி நிற்போம்..
ஓம் சக்தி ஓம்..
காளி ஆட்டம் அருமை. கும்பகோணத்திலும் பார்த்திருக்கேன். அவங்க கிட்டே நெருங்க முடியாது! அவ்வளவு உக்கிரமாக இருப்பாங்க. இன்றைய பதிவும் அழகான படங்களுடன் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநான் தஞ்சாவூர் பாபநாசத்தில் காளியாட்டம் பார்த்திருக்கிறேன்...
அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...
இன்றைய அம்மன் தரிசனம் மிக அருமை.
பதிலளிநீக்குகாளி ஆட்டம் நன்றாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமை பச்சைக்காளி, பவளக்காளி என்று ஆடிக் கொண்டு வருவார்கள். அம்மன் திருவீதி உலாவில் .
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குகடுமையான விரதம் இருப்பார்கள் காளியாட்டக்காரர்கள்...
தஞ்சை கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் காளியாட்டம் பிரசித்தம்...
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் சக்தி ஓம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅன்னை பராசக்தியின் படங்கள் அனைத்துமே அழகாக இருக்கின்றன.தலை சாய்த்து அருள் பாலிக்கும் அன்னை வடபத்ரகாளியம்மன் அவ்வளவு அழகு. தேவியை உலக நன்மைக்காக மனமாற பிரார்த்தித்து தரிசித்துக் கொண்டேன்.
சிக்கல் பத்ரகாளியம்மன் திருநடன காட்சி காணொளி அற்புதம். கண்டு மனங்குளிர ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதஞ்சை ஸ்ரீ வடபத்ரகாளி ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவள்...
ராஜராஜ சோழனின் பெரும் பாட்டன் விஜயாலய சோழரால் நிர்மாணிக்கப்பட்டவள்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
அம்மா முகத்தைப் பார்த்தால் சமயபுரம் அம்மன்
நீக்குமாதிரி இருக்கிறது. பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அபிராமி அன்னையும் எல்லா தாயார்களும் மனம் வைத்து நம்மைக்
காக்க வேண்டும். நனி அன்பு துரை.