நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடிப் பதினெட்டு
அன்பினில் மனந்தொட்டு
ஆடிக் கொண்டாடிடுமே..
கார்முகில் கனங்கெட்டு
நெற்றியில் நீர்மொட்டு
ஏர்வழி நூறாகுமே..
காவிரிக் கரைதொட்டு
கழனியில் முளைகட்டு
கதிர்களும் விண்முட்டுமே..
ஓடிடும் நீர்தொட்டு
உதித்திடும் உயிர்கட்கு
ஓங்கிய பொருளாகுமே..
கூடிக் குளிர்ந்திட்டு
கோதையின் தமிழ்தொட்டு
கொண்டாடு பண்பாடியே..
சூழ்ந்திடும் இருள்கெட்டு
சூரியன் ஒளிபட்டு
வாழ்ந்திட வாழ்வாகுமே..
நாற்றினைக் கைதொட்டு
சேற்றினில் தான்நட்டு
காத்திடப் பொன்சேருமே..
பொன்மகள் கரந்தொட்டு
பொலிந்திடும் நலம்எட்டு
பூமீது புகழாகுமே..
காவிரிப் படிக்கட்டு
காதலின் கல்வெட்டு
கைவளை மொழியாகுமே..
கண்களின் மைதொட்டு
காவியம் பலகட்டு
தென்றலும் தூதாகுமே..
தீந்தமிழ்த் தேன்தொட்டு
தீவினை விலக்கிட்டு
விளக்கிட வழிகாணுமே..
வாழ்ந்தவர் தாள்தொட்டு
வாழ்வதில் இசைகொட்டு
குன்றேறிப் புகழ் வீசுமே..
***
நாடெங்கும் வாழ்க..
நலமெலாம் சூழ்க..
அனைவருக்கும்
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
ஆடி பதினெட்டு பாடல் வரிகள் அழகு. விதை போடும் காலத்தில் கவிதை பிறந்தது. காணொளியில் தண்ணீர்ப்பெருக்கு - ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்.
உழவுப் படங்களும், அழகான கவிதை வரிகளும், ஓவியப் பெண்ணும், கோபுர அழகும் மனதை கவர்கிறது.
கவிதை வரிகள் மிகச்சிறப்பு. மிகவும் ரசித்தேன். அதன் அர்த்தங்களை அலசி மனதில் வடித்து இருத்திக் கொள்ள மற்றுமொரு முறை படித்துப் பின் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்லதே நடக்கட்டும்...
பதிலளிநீக்குஆடிப்பெருக்கன்று இளம் வயதில் கும்பகோணத்தில் காவிரியாற்றுக்கு சப்பரம் ஓட்டிக்கொண்டு, ஆற்றில் விளையாடிய நாள் நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குஆடிப் பெருக்கு வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாடல் வரிகள் அருமை, காணொளி ரசித்தேன்
துளசிதரன்
துரை அண்ணா காணொளியில் காவிரி நீர் பாய்ந்து ஓடுவதைப் பார்த்ததும் கிராமத்து ஆடிப்பெருக்கு நினைவு வந்து ஆற்றங்கரையில் போய் கலந்த சாதம் ஊரோடு போய் இருந்து சாப்பிட்ட நினைவுகள் இது ஒவ்வொரு வருடமும் வந்து போகும். காணொளி கண்டு ரசித்தேன்
பாடல் வரிகள் அருமை
கீதா
ஆடிப்பெருக்கு பாடல் நன்று ஜி
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் கூடி...
நேற்று நம்ம ரங்க்ஸ் கூடச் சின்ன வயதில் சப்பரம் ஓட்டிக் கொண்டு அரிசிலாற்றங்கரைக்குப் போய் விளையாடியதை எல்லாம் நினைவு கூர்ந்தார். மதுரைப்பக்கம் அந்த வழக்கம் இல்லை என்றாலும் புட்டுத்தோப்புக்கு ஸ்வாமியும் மீனாக்ஷியும் எழுந்தருளுவார்கள். எல்லோரும் அங்கே போவார்கள்.
பதிலளிநீக்குஇங்கே இந்நேரம் நம்பெருமாள் எழுந்தருளி அவருக்கு வழிபாடுகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். மாலை நான்கு மணி அளவில் ஆண்டாளம்மாவிடம் காவிரிக்குச் சீர் கொடுத்து அனுப்புவார்கள். ஆறு மணிக்குப் பின்னர் நம்பெருமாள் கோயிலுக்குப் போவார். எதுவும் இல்லாமல் ஒரே அமைதி! வெறிச்! :((((
பதிலளிநீக்குஆடிப்பெருக்கு கவிதை அருமை.
பதிலளிநீக்குபடங்கள், காணொளி எல்லாம் அருமை.
அணையில் தண்ணீர் பெருகி ஓடுவது பார்க்க அழகு.
இப்படியே நீர்வரத்து இருந்து வளமாக விவசாயம் நடந்து நாடும், வீடும் செழித்து வாழ வேண்டும்.
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.
ஆடிப் பெருக்கு கண்டு மகிழ்நத மனம், அன்பு துரையின் கவிதைப் பெருக்கில் நீராடியது. உவகை தரும் நாட்கள் மீண்டும் வரவேண்டும்.காணொளியில் கண்ட புனல, வாழ்வில் வளம் அளிக்க அன்னை அருள் செய்வாள்.
பதிலளிநீக்குவரிகள் நல்லாருக்கு. ஆனால், பொன்மகள் கரம் தொட்டு பொங்கிடும் நலம் எட்டா? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னா சொல்லுவாங்க. ஒரு கரத்துக்கு எட்டு என்று சொல்றீங்களா?
பதிலளிநீக்குநேற்று நான் ஏதோ ஓவியங்களை புரட்டும்போது (நெட்டில்) மாருதி படங்களைப் பார்த்து, இந்த துரை செல்வராஜ் சார், மாருதி கைவண்ண பெண் படம் போட்டு ரொம்ப நாளாயிடுச்சேன்னு நினைத்தேன். இன்று பொன்மகள் வந்தாள்
பதிலளிநீக்கு