நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

சக்தி முழக்கம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணிகளும் தொலைந்திட வேண்டும்.. 
***

இன்றைய பதிவில்
சக்தி முழக்கம்..


எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி 
ஏழுகடல் அவள் வண்ணமடா!.. - அங்கு
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து 
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?.. - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..


காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கே நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த 
வையம் முழுவதும் துண்டு செய்வேன் - என
நீளஇடை யின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்ப்படுவாள் உந்தன் தோளினிலே!..
- : பாவேந்தர் பாரதிதாசன் :-

இன்று பாவேந்தரின் நினைவு நாள்..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

24 கருத்துகள்:

  1. கடினமான இந்தக் காலத்தை வெற்றிகரமாகக் கடக்கும் சக்தியை அந்த மகாசக்தி அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு...

      அன்னை பராசக்தி எல்லா நலன்களையும் தந்தருள்வாளாக...

      நீக்கு
  2. எனக்கு எம் எஸ் பாடிய சக்தி ஒம் சக்தி ஓம் பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. உலகை காக்கும் வல்லமை சக்திக்கே உண்டு வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      அவள் தான்... அன்னை அவளே தான் காத்திடுவாள்..

      வாழ்க வையகம்.. நன்றி...

      நீக்கு
  4. மிக அருமையான பதிவு.மகாசக்தி இந்த உலகை காக்க வேண்டும்.
    பாவேந்தர் பாடல் பகிர்வு மிக அருமை.

    அனைவருக்கும் இந்த இக்க்ட்டான காலத்தை கடக்க மனபலம், வேண்டும் அந்த சகதியை தருவாள் அன்னை.மனபலம், உடல் பலம் தந்து இந்த வையகத்தை காக்க வேண்டும் அன்னையை வணங்கி கொள்கிறேன்.

    பாவேந்தருக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      அன்னை அவள் தான் முன்னின்று உலகைக் காத்தருளல் வேண்டும்...
      வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

      நீக்கு
  5. மாரியம்மா... அனைத்தையும் மாற வையம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.

      மாரியம்மா... மாரியம்மா..
      மாற்றங்கள் அனைத்தையும்
      மாற்றி வையம்மா...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தொடர்ந்து சமயப் பதிவுகளாக இருப்பதால், நான் திறந்து பார்ப்பதில்லை, இன்று தலைப்பைப் பார்த்ததும்.. சக்தி எதுக்காக முளங்குகிறா என உள்ளே வந்தேன், உள்ளே வந்தால் கொமெண்ட் போடுவேன் எல்லோ..

    முளங்கட்டும் சக்தி.. ஒலிக்கட்டும் சக்தி.... அம்மாள் ஆச்சி உலகைக் காக்கட்டும்!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது சக்தி மு"ழ"க்கம், மு"ள"க்கம் இல்லை. இந்த அழகில் தமிழில் "டி"எல்லோ? :P :P :P :P :P அதே போல் அம்மாள் "ஆட்சி" "ஆச்சி" இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. அதானே....

      நான் வேலை நேரத்தில் இருக்கும் போது பார்த்தேன்...

      சரியாக சொல்லியிருக்கின்றீர்கள் அக்கா!..

      இதிலே தமிழில் ஒரு '' டி '' கம்மியாக இருக்குதாம்!...

      நீக்கு
    3. அதிராவின் வருகையும் ''மழலைத் தமிழும் '' மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. ஆஹா ரைட்டோ...தமிழில் டி வாங்கினவங்க இப்ப ஏஞ்சல், நெல்லை ஸ்ரீராம் மட்டுமில்ல கீதாக்கா அண்ணா எலலரும் சேர்ந்தாச்சு ஹா ஹா ஹ

      கீதா

      நீக்கு
    5. ஆவ்வ்வ்வ்வ் ஓடிப்போய் சவ்வரிசி வடகம் வெயிலில் போட்டுவிட்டு வருவதற்குள் இவ்ளோ நடந்திருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஓ அது முழக்கமோ:)) ஹா ஹா ஹா ...

      ஆனாலும் மீக்கு டமில்ல டி என்பதை இப்போ நிரூபிக்கிறேன் பாருங்கோ.. அது அம்மாள் ஆச்சிதான் தெரியுமோ? நாங்கள் மரியாதையாக, செல்லமாக பெரும்பாலும் எல்லோருமே அம்மாள் ஆச்சி, பிள்ளையாரப்பா.. இப்படிப் பேசுவது வழக்கம்.. இது அந்த ஆச்சி ஆக்கும் ஹா ஹா ஹா.. அம்மன் ஆட்சி:) அல்ல:))..

      ம்ஹூம் என் டமில் டி யைப் பறிச்செடுப்பதிலேயே குறியாக இருக்கினம் எல்லோரும் கர்ர்ர்:)))

      நீக்கு
    6. அம்மாள் ஆச்சி என்பது சரியே...
      இந்த வார்த்தை தான் அம்மாச்சி என்றானது..

      ஆனால் இங்கே அம்மன் ஆட்சி என்பதாக கீதா அக்கா அர்த்தம் செய்து கொண்டதால் அதிராவின் றீயில் சந்தேகம்....

      ஆனாலும் டி... டி தான்!...

      நீக்கு
    7. ஹா ஹா ஹா நன்றி நன்றி.. கடசி வரியை உரக்கச் சொல்லுங்கோ துரை அண்ணன்.. ஸ்ரீரங்கத்தில எதிரொலிக்கட்டும்.. ம்ஹூம்ம்:))

      நீக்கு
    8. அதெல்லாம் அக்காவுக்கு நல்லாவே தெரியும்...

      இருந்தாலும் சும்மா உசுப்பி விடுவது...

      இருக்கட்டும்..காலையில றீ குடிச்சாச்சா!.

      நீக்கு
  7. அம்பிகையின் சக்தியால் அனைத்துத் தீய சக்திகளும் அழியட்டும். அம்பிகை அனைவரையும் காத்து அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  8. அருமையான சக்தி முழக்கம்!முதலில் சக்தி முழக்கம் என்றதும் பாரதியோ என்று நினைத்துவிட்டேன்...

    அழகான பாடல். தீயது ஒழிந்து நல்லது நடந்திட வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      தீயவை ஒழிந்து நல்லவை நடக்கட்டும்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இந்த இக்கட்டான சூழலைக் கடந்து செல்ல அன்னை பராசக்தி அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..