நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 29, 2020

களக்கோடி காவலன்

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

ஓராண்டுக்கு முன்னால்
அன்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது
குலதெய்வமாகிய 
ஸ்ரீ களக்கோடி தர்ம சாஸ்தாவைப் போற்றி
எழுதியிருந்த திருப்பாட்டு
இன்றைய பதிவில் ..

எல்லாருக்கும் எல்லா நலன்களையும்
ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் தந்தருள்வாராக... 
***
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா தேவியருடன்
ஸ்ரீ களக்கோடி தர்ம சாஸ்தா..
பணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்
துணைதேடி ஓடிவந்தோம் ஸ்வாமியே...1

உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!...2

களக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..
புகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்....3

வளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள
பூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்!...4

நீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க
நாகோடி தமிழ் உரைக்க வேணுமே...5


உனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்
ஊர்கோடி கண்டு உணர வேணுமே...6

வரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே
களக்கோடி கண்மணியே சரணமே!...7

மனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..
களக்கோடி காவலனே சரணமே...8  

கடைக்கோடி மனிதருக்கும் கதிகாட்டும் கோமகனே
களக்கோடி நாயகனே சரணமே...9

விடைதேடி நிற்போர்க்கு வழிகாட்டும் நாயகனே
களக்கோடி கண்மணியே சரணமே...10



திருக்கோடிக் காஉறையும் சிவநாதன் திருமகனே
களக்கோடி தானமர்ந்த தூயனே...11

வினைகோடி என்றாலும் பகைகோடி என்றாலும்
விரைந்தோடி நலஞ்சேர்க்கும் நாதனே...12

களக்கோடி என்னுங்கால் களிறேறி வரவேணும்
கண்கோடி காணும்படி ஸ்வாமியே...13

விழிகோடி தமிழ்கொடுக்க வில்லேந்தி வரவேணும்
பண்கோடி பாடும்படி ஸ்வாமியே...14


பொன்கோடி குவிந்தாலும் புகழ்கோடி விரிந்தாலும்
களக்கோடிக் காவலனே காரணன்..15

பூச்சூடிப் பொற்கலையும் பூங்கலையும் அருகிருக்க
கதிர்கோடி எனக்காட்டும் பூரணன்...16

வழிந்தோடி விழிநீரும் திருவடியில் மலராகும்
களக்கோடி கண்மணியே சரணமே...17

நெகிழ்ந்தோடி நெஞ்சகத்தில் நின்பெயரே நின்றாடும்
களக்கோடி காவலனே சரணமே...18


ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத
ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஸ்வாமியே போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. பால சாஸ்தா எங்கள் குலதெய்வம். சாஸ்தாவைச் சரண் அடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு...

      சாஸ்தா சரண்..
      சாஸ்தாவே அரண்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்.

    சாஸ்தாவின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      சாஸ்தாவின் அருளால் எங்கும் நலமே விளையட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சாஸ்தாவே சரணம்
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      சாஸ்தாவே சரணம்..
      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சாஸ்தாவின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிட்டப் பிரார்த்தனைகள். முன்னர் படித்த நினைவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      சென்ற ஆண்டு வெளியான பதிவு தான்.. சிக்கலான சூழ்நிலையில்
      பிரார்த்தனைக்காக மீன்றும் இன்றைய பதிவில்...

      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  5. களக்கோடிக் காவலனே... அனைவரையும் காப்பாற்றுப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      காத்தருள்வான் களக்கோடிக் காவலன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இந்த பங்குனி உத்திரத்திற்கு நீங்கள் எழுதி தந்த இந்த பாடலைபாடித்தான் வணங்கி கொண்டோம் குலதெய்வத்தை.

    இன்றும் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்க்க பாடி வணங்கி கொண்டேன் அனைவர் நலத்திற்கும்.

    சாஸ்தாவின் படமும் மன ஆறுதலை தந்தது.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தாங்கள் தங்களது குலதெய்வத்தைப் பற்றி எழுதியதும்
      ஸ்வாமியின் படத்தை வெளியிட்டதும்..
      ஐயனைக் கண்டு மனம் உருகி நான் சரணம் பாடியதும்
      மிக மிக நெகிழ்வான விஷயம்...

      கை கொடுப்பான் களக்கோடிக் காவலன்!...

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஹரிஹரசுதன் அர்ணாய் நின்று எல்லோரையும் காக்கட்டும்.

    பாடல் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

    ஹரிஹரசுதன் அரணாக நின்று
    அனைவரையும் காத்தருளட்டும்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..