நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
நலமும் வளமும் சூழ்ந்திட வேண்டும்..
***
நலந்தரும் திருப்பதிகம்
இன்றைய பதிவில்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
அருளிச் செய்த திருப்பதிகம்..
ஏழாவது திருமுறை
திருப்பதிக எண் - 27
திருத்தலம் - திருக்கற்குடி
இறைவன் - ஸ்ரீ உஜ்ஜீவ நாதர், கற்பகநாதர்,
அம்பிகை - ஸ்ரீ பாலாம்பிகை, மையார்கண்ணி (அஞ்சனாட்சி)
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - ஞானவாவி
அம்பிகை இரண்டு சந்நிதிகளில் விளங்குகின்றாள்..
சின்னஞ்சிறு மலையின் மீது திருக்கோயில்..
திருக்கோயிலில் ஸ்ரீ ஜேஷ்டாதேவி
தனிசந்நிதியில் விளங்குகின்றாள்...
நோய் நொடி, வறுமை பிணி, எதிர்பாராத விபத்துகள்
இவைகளில் இருந்து காத்து நிற்பவள் இவள்..
திருக்கோயிலில் ஸ்ரீ ஜேஷ்டாதேவி
தனிசந்நிதியில் விளங்குகின்றாள்...
நோய் நொடி, வறுமை பிணி, எதிர்பாராத விபத்துகள்
இவைகளில் இருந்து காத்து நிற்பவள் இவள்..
திருச்சி மாநகரில் விளங்கும் திருத்தலம்..
வயலூர் ( குமாரவயலூர்) செல்லும் வழியில்
இன்றைக்கு உய்யக்கொண்டான் என்றழைக்கப்படுகின்றது..
விடையாருங் கொடியாய் வெறியார் மலர்க் கொன்றையினாய்
படையாருர் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.. 1
மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்க நின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்ன முதாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அந்தணனே அடியேனையும் அஞ்சலென்னே.. 2
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.. 3
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணி பங்கா மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.. 4
சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே
பந்தாரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே.. 5
அரையார் கீளொடுகோ வணமும் அரவுமசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்
கரையாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.. 6
பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்திநின்ற
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.. 7
நிலனே நீர்வளிதீ நெடுவானகம் ஆகிநின்ற
புவனே புண்டரிகத்து அயன்மாலவன் போற்றிசெயும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.. 8
வருங்காலன் உயிரை மடியத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.. 9
அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலா: நல்லசிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.. 10
-: திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லதொரு பதிவுடன் இந்த காலை ஆரம்பித்திருக்கிறது. நலமே விளையட்டும்.
அன்பின் வெங்கட்..
நீக்குநலமே விளையட்டும்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய
பதிலளிநீக்குஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் சிவாய நம...
நீக்குஓம் சிவாய நம ஓம். பிணிகள் அகல பித்தன் அருளவேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நமசிவாய நலமே விளைக!
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குநலமே விளையட்டும்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
பதிகம் பாடி தரிசனம் செய்து கொண்டேன் .
பதிலளிநீக்குஓம் நமசிவாய !
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...
நலந்தரும் நமசிவாயம் என்றால் பிணிகள் போய் விடுமா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குநிச்சயம் பிணிகள் நீங்கும்.. அந்த நம்பிக்கை எனக்கு உண்டு...
தங்கள் வருகையும் கருத்துரையும் மிகுந்த மகிழ்ச்சி..
நெஞ்சார்ந்த நன்றி..