அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
சென்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து
Store Keeper ஆக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றேன்...
இங்குள்ள கல்வி நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும்
உணவகங்களை நடத்துதற்கான ஒப்பந்தத்தை
நான் வேலை செய்யும் நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது...
அடுத்த வாரம் அல்லது பிப்ரவரியின் முதல் வாரத்தில்
உணவகங்கள் திறக்கப்படலாம்...
அதன்பொருட்டு சரக்கறைகளை ஆயத்தப்படுத்தும் பணி
மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது...
விடியற்காலை ஐந்து மணிக்கு பேருந்து...
திரும்பி வருவதற்கு மூன்று மணி ஆகிவிடுகின்றது...
மாலை நேரத்தில் இணையத்தின் வேகத்தைச் சொல்லிமுடியாது...
ஒவ்வொரு பதிவும்
மிகுந்த போராட்டத்துக்கு இடையில் தான் வெளியாகின்றது...
ஐந்து மணிக்குப் பேருந்து என்றால்
நான்கு மணிக்கு எழுந்தால் தான் சரியாக இருக்கும்..
ஆனால் - மூன்றரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடுகின்றது...
அதிலும் சென்ற வாரம் முழுதும் கடுங்குளிர்...
நேற்றும் இன்றும் கொஞ்சம் குறைவு...
உடல் நலக்குறைவு ஏதும் இல்லை..
ஆயினும் குளிர் காற்றினால் சற்றே சிரமம்...
எனக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டோரை ஒழுங்கு செய்து
கணக்குகளை சரி செய்த நிலையில் -
வேறு ஒரு Store க்குச் சென்று
அதைச் சில நாட்கள் நடத்துமாறு சொல்லி விட்டார்கள்...
நேற்று ஐம்பது சதவீத பொருட்கள் வந்து சேர்ந்த நிலையில்
அவற்றை ஒழுங்கு செய்து கணக்கில் ஏற்றி விட்டு வந்திருக்கிறேன்..
சிறிய Store தான்...
நேற்று அங்கு எடுக்கப்பட்ட படங்களைப்
இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...
மாணவர்களுக்கான உணவுக்கூடம் |
Chiller அறையிலுள்ள காய்கறிகள்..
Freezer அறையிலுள்ள பொருட்கள்..
இதர உணவுப் பொருட்கள்..
முன்பு Kitchen Supervisor ஆக இருந்தபோது பெரிய பொறுப்புகள் ஏதுமில்லை..
ஆனால் -
தற்போது முன்பை விட அதிக விழிப்புடன் இருக்க வேண்டியதாகிறது...
அதற்கான வல்லமையையும் பாதுகாப்பையும்
தருவதற்கு இறைவன் காத்திருக்கின்றான்...
இந்த வேளையில் -
சென்ற மாதம் - நான் துவண்டிருந்த நிலையில்
தோளுக்குத் தோள் நின்று ஆறுதலும் தேறுதலும் கூறிய
நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனதார நன்றி சொல்கின்றேன்..
இந்த வலை அன்பினால் பின்னப்பட்டது.. - என்பது,
மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கின்றது...
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை!..
-: கவிஞர் அ. மருதகாசி :-
நலமே வாழ்க..
ஃஃஃ
மிக அருமையான செய்தி அன்பு துரை செல்வராஜு.
பதிலளிநீக்குபடங்கள் வெகு அழகு. இதற்கான சரியான உடைகள் தருவார்களா.
ரொம்பக் குளிருமே.
இறைவன் நல்ல தேகபலம் கொடுக்க வேண்டும்.
மன அமைதி பெற்று நன்றாக இருக்க வாழ்த்துகள். இனிய காலை வணக்கம்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குஇன்று வெள்ளிக் கிழமை!..
விடுமுறை நாள் - எல்லாவற்றுக்கும் முந்திக் கொள்ள வேண்டும்...
மதியத்துக்கான சாப்பாடு (கத்தரிக்காய் சாம்பார்)வரை முடித்துவிட்டு இப்பொழுது தான் வரமுடிந்தது..
தங்களது கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
@ >>> குளிருக்கு சரியான உடைகள் தருவார்களா.. <<<
நீக்குகுளிருக்கு ஏற்ற உடைகளா!..
வேறு சில நல்ல கம்பெனிகளில் Jerkins கொடுக்கிறார்கள்...
நான் வேலை செய்யும் இந்தக் கம்பெனியில் அப்படியெதுவும் கிடையாது!...
வருடாந்திரச் சீருடை கொடுத்தே இரண்டு வருடங்களாகி விட்டது..
கீழ்நிலைப் பணியாளர்களுக்கும் சமையல்காரர்களுக்கும் தான் அவ்வப்போது சீருடைகள் கிடைக்கும்..
நானெல்லாம் கம்பெனி வழங்கும் சீருடையை எதிர்பார்ப்பதில்லை..
அவை அளவில் சரியாக இருப்பதும் இல்லை...
அவ்வப்போது வெளியில் வாங்கிக் கொள்வேன்.. இப்போது கூட 2 செட் வாங்கியிருக்கிறேன்..
மிக மகிழ்ச்சியான செய்தி.
பதிலளிநீக்குபுதிய பொறுப்பு உங்களை உற்சாகப்படுத்தி இருக்கும். அதனாலேயே குளிரையும் பொருட்படுத்தாமல் எழுந்து வேலைக்குச் செல்ல முடிகிறது உங்களால். நல்ல செய்தி. இனிய காலை வணக்கம்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
வேலை செய்யும் இடத்தின் படங்கள் அழகு. வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார். பாசவலை உறுதியானது. அன்பால் நெய்யப்பட்டது அல்லவா! டைட்டில் சாங் சி எஸ் ஜெயராமனின் குரலில் ஆனது இல்லையா? அல்லது நடிப்பிசைப்புலவர் குரலா?!!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களது வினாக்களுக்கு ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் பதில் சொல்லி இருக்கின்றார்கள்..
நான் பாசவலை பாட்டு கேட்டதோடு சரி.. படம் பார்த்ததில்லை..
வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபுதிய பொறூப்புகளை திறம்பட நடத்தி செல்ல இறைவன் உறுதுணையாக இருப்பார்.
முன்னேறி செல்லுங்கள் இறைவன் வகுத்து தந்த பாதையில்.
படங்கள் மிக அழகு.
குளிருக்கு ஏற்ற உடைகள் அணிந்து செல்லுங்கள் உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நாளில் வேலை பழகி விடும்.
ஒவ்வொரும் பாசவலையில் இருக்கிறோம் ஸ்ரீராம் சொன்னது போல் உறுதியான பாசவலை.
வாழ்த்துக்கள்.
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி.
ஸ்ரீராம், நடிப்பிசை புலவர் பட்டம், கே.ஆர் ராமசாமிக்கு.
பதிலளிநீக்குஇவர் எம்.கே ராதா அவர்கள்.
வாழ்க நலம்..
நீக்குஸ்ரீராம் பாடல் சி. எஸ் ஜெயராம் தான்.
பதிலளிநீக்குபாசவலை படத்தில் எம்.கே ராதா பாடும் பாடலுக்கு குரல் கொடுத்தவர் ஜெயராம் தான்.
வாழ்க நலம்..
நீக்குகூடுதல் செய்திகளுக்கு மகிழ்ச்சி..
நல்ல ரெஸ்பான்சிபிலிடியுடன் கூடிய வேலை. உடனுக்குடன் செலவழிந்துவிடுமாகையால் பிரச்சனை இல்லை. செலவுக்கான ரெஜிஸ்டர் சரியா பராமரிக்கணும் (ஷார்டேஜ் இல்லாம). காலாவதியை சரியாக கவனிக்கணும். வேண்டாதவர்கள் நுழைந்து பொருட்களின் காலாவதியில் விளையாடக்கூடாது.
பதிலளிநீக்குசவால்கள் நிறைந்த வேலை. வாழ்த்துகள். ஈசன் அருளால் எல்லாம் செவ்வனவே நடைபெறட்டும்.
அன்பின் நெ.த..,
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை அண்ணா ஆஹா பொறுப்பு மிக்க பணி!!! சவால்கள் மிக்க பணி! வாழ்த்துகள்! கண்டிப்பாக உங்களால் திறம்படச் செய்ய முடியும். இறைவனின் அருளும் கண்டிப்பாக உங்களுக்கு துணை நிற்கும் அண்ணா.
பதிலளிநீக்குநடப்பது எல்லாம் நல்லதற்கே!
கீதா
அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
நீக்குவாழ்க நலம்..
அண்ணா இடங்கள் பொருட்கள் எல்லாம் பயங்கர சுத்தமாக இருக்கிறது....
பதிலளிநீக்குபொறுப்பு கூடுதலான பணி என்றாலும் மகிழ்ச்சியான செய்தி! சந்தோஷமான செய்தியும் கூட. எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு அண்ணா.
கீதா
>>> பொருட்கள் எல்லாம் பயங்கர சுத்தமாக.. <<<
நீக்குபாராட்டுக்கு நன்றி..தங்கள் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..
வாழ்க நலம்..
தங்களது நல்ல மனம் போல அனைத்தும் சிறப்பாக அமையும் ஐயா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஇறை அருளால் அனைத்தும் சிறப்பாக நடக்கும் ..
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதுன்பம் பனி போல் விலகி இதுவும் கடந்து போகும் என்று கடந்து தை பிறந்து வழியும் தங்களுக்கு பிறந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. என்றென்றும் எங்களது பிரார்த்தனைகள் உண்டு.
பதிலளிநீக்குதங்கள் பொறுப்பு கூடியுள்ளதாகத் தெரிகிறது ஆனால் இத்தனை நாள் துணையிருந்து அருள் புரிந்த அந்த இறைவன் இனியும் புரியாமல் போய்விடுவானா!!! நிச்சயமாக துணை இருந்து அருள் புரிவான்.
எல்லாம் இனிதே நடக்கும். மகிழ்ச்சியுடன் பிரார்த்தனைகள்.
துளசிதரன்
வாழ்த்துக்கள் துரை அண்ணன், தை பிறந்ததால் வழி பிறந்திருக்கிறது.. அழகாக இருக்கு உங்கள் ஸ்ரோர் பிளேஸ்ஸ்.. ஆனா சைவம் மட்டும்தானோ அங்கிருக்கும்.. அசைவமும் இருக்கும்தானே.. அதை எப்படி சமாளிப்பீங்க?...
பதிலளிநீக்குஅன்பின் ஜி
பதிலளிநீக்குநண்பர் திரு.நெ.த.அவர்கள் சொன்னதுபோல கவனம் தேவை.
சில புல்லுருவிகள் நுழைந்து விடக்கூடாது சிறப்புற பணியாற்ற இனிய வாழ்த்துகள்.
மகிழ்சையான தகவல்.....
பதிலளிநீக்குஉங்கள் பணியில் சிறக்க எனது வாழ்த்துகள்.....
வேலை உங்கள் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் உகந்ததாக இருக்கட்டும். குளிர் தாங்கும்படியான உடைகள் அணிந்து செல்லவும். நல்லபடி வேலை கிடைத்ததற்கும் மாணவர்களுக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கும் மகிழ்ச்சி. மெதுவாக நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
பதிலளிநீக்கு