நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 16, 2019

வாழ்க ஆனினம்..

அன்பின் இனிய
உழவர் திருநாள் வாழ்த்துகள்...

காவேரி மீனு போல கண்ணு தான்..
எங்கருத்தெல்லாம் அத்தை
பெத்த பொண்ணு தான்!... 
காத்தோட மருக்கொழுந்து வீசுதா
உங்காதோரம் எம்பாட்டு கேக்குதா..
மாடு ரெண்டும் எங்களுக்குக் கண்ணாச்சு..
அதுங்க நடந்த வழி எல்லாமே பொன்னாச்சு...
கட்டு கலம் காணும்..
கதிர் உழக்கு நெல் காணும்.. 
போரடிக்கும் களம் தானே எங்க கோயில்..
பொன்னு மணி நெல்லு தானே எங்க சாமி!.. 
ஊரெல்லாம் செழிக்க வேணும்..
உசுரெல்லாம் தழைக்க வேணும்!..
பட்டி நெறைய வேணும்..
பால் சொம்பு வழிய வேணும்!... 
என்ன ஐயா!... மாட்டுப் பொங்கல் அதுவுமா
எங்களப் பத்தி எழுதலையா?..

 கோவிச்சுக்காதீங்க.. ராசா...
நீங்க தானே எங்களுக்கு எல்லாமும்!.. 
கன்றும் வாழ்க.. கறவையும் வாழ்க..
நின்று எம்முடன் நிலைபெற்று வாழ்க.. 
வாழ்க ஆனினம்..
வளர்க ஆனினம்!..
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதுஎல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..
-: திருஞானசம்பந்தர் :-

அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. அவசரத்தில் ஆணினம் என்று படித்து விட்டேன்! காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. காதோரம் மருக்கொழுந்துஎப்படி வீசும்... காத்தால என்று வந்திருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      அவசரத்தில் கவனிக்கவில்லை..
      திருத்தப்பட்டு விட்டது..

      சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

      நீக்கு
  3. எல்லாமே மிக மிக அருமை. வரிகள் பொருத்தமாகவும், அழகாகவும் வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம்..
    தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. அழகிய படங்களுடன் வர்ணனையை ரசித்தேன் ஜி. இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையுடன் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அந்தக்காலத்து ஆனந்த விகடன் பொங்கல் மலரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதப்பட்ட நாட்டுப்பாடல்களை ஒத்திருக்கிறது உங்கள் கவிதை வரிகள். இனிமை, எளிமை. பொருத்தமான படங்கள். முன்னெல்லாம் தீபாவளி, பொங்கல் மலர்கள் படிக்கவே ஆவலாக இருக்கும். இப்போதெல்லாம் புத்தகங்களின் மீதே வெறுப்பு வந்து விட்டது! அந்த அளவுக்குப் புத்தகங்கள் மோசமான செய்திகளைப் பரப்புகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      இவற்றில்
      கட்டு கலம் காணும் - கதிர்
      உழக்கு நெல் காணும்..

      என்ற வரிகள் மட்டும் ஏதோ ஒரு பழம்பாடலில் உள்ளவை..

      அவை மகசூல் அளவைக் காட்டுபவை...

      நெஞ்சம் மறக்காத அந்த வரிகளுடன் - எனது வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன..

      கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எல்லாம் பெரியவர்கள்...

      மற்றபடி எனது வரிகள் எல்லாம் சாதாரணமானவை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னை ஒரே எழுத்தில் ஆணாக மாத்திட்டீங்க! இஃகி, இஃகி! :)))) கருத்துச் சொல்லி இருப்பது நான். :)))))

      நீக்கு
  7. ஆ..

    காலையில் இருந்தே குழப்பம்...
    பிள்ளைகள் பேத்தி என வீட்டு நினைவுகள்...

    பொங்கல் - மலரும் நினைவுகளின்
    தடுமாற்றம்...

    மாலையில் அறைக்குச் சென்றதும் திருத்தம் செய்து விடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  8. கவிதையும்,படமுமாக படிக்க,ரஸிக்க முடிந்தது. திரும்பத் திரும்ப. நான் அதிகம் வருவதில்லை. முடிந்தபோது படிப்பேன். உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இடர்கள் நீங்கி மனம் நிம்மதி பெற கடவுள் அருள் புரிவார். ஆசிகளும் அன்பும்

    பதிலளிநீக்கு
  9. நினைவுகள் முழுவதும் அன்பு குடும்பத்தின் மேல்.
    குடும்பத்தை விட்டு தொலைதுரத்தில் இருந்தால் ஏற்படும் நினைவுகள் !
    ஊருக்கு போய் வரலாம் இல்லையா? ஒரு மாற்றம் கிடைக்குமே.
    படங்.களுக்கு ஏற்ற கவிதை வரிகள் அருமை.

    இறையருள் மேலான பெருமைகளை கொடுக்க காத்து இருக்கிறது போலூம்.

    முன்பு செல்வம் எறு குறிப்பிடுவதில் மாடுக்ளும் உண்டு.
    விளக்கு பாடலில் பட்டி நிறைய பால்பசுவை தாம்மா, கொட்டகை நிறைய குதிரைகள் தாம்மா என்று வரும். ஒரு பசுமாடு இருந்தால் பிழைத்து கொள்ளலாம் என்று சொல்வார்கள்.

    ஆனினம் பெருகட்டும் இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
  10. பொங்கலுக்கு பொருத்தமான படங்களும், வரிகளும் அருமை. கன்றுக்கு பால் ஊட்டும் பசு அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  11. ஆன் இனம் என்பதை முதலில் ஆண் இனம் என்று படித்து விட்டேன். என்ன புதிதாக ஆண் விடுதலை கும்மி??!! என்று திகைத்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..