நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 06, 2018

கறிவேப்பிலை

ராத்திரி முழுக்க வேலை...

தமிழ்த் திருநாட்டில் பொழுது விடிந்த நேரம் - ஆறு மணி...

இங்கே குவைத்தில் விடியற்காலை 3.30

கொட்டும் பனியில உட்கார்ந்து கொண்டு
எபி எனும் எங்கள் பிளாஸ்க்கை -

இல்லை...இல்லை!...
எங்கள் பிளாக்கைத் திறந்தால் -
திறக்க முயற்சித்தால்....
சொய்ங்.... - என்று சுற்றிக் கொண்டிருக்கின்றது

அதுக்குள்ள ஒரு நிமிஷம் ஓடிப் போச்சே!..
தூக்கம் வராதோர் சங்கத்து ஆட்கள் எல்லாம் வந்திருப்பாங்களே...

ஆட்கள் எல்லாம்....ன்னா ஆயிரம் ரெண்டாயிரம் இல்லை..
ரெண்டு மூனு பேர் தான்....

அதிலயும் வேடிக்கை.. என்னான்னு பார்த்தால்,
கடமை ஆற்றுகிறேன்..ன்னு காஃபி ஆத்தி எடுத்துக்கிட்டு -

ஆ!... எபி திறந்துடுத்து!...

தட்டு... விறுவிறு....ன்னு தட்டு...
விடாதே... அமுக்கு.. அடுத்த பட்டனை!...

ஆகா... போய்டுத்து!...

தம்பீ!... ரொம்ப சந்தோஷப்படாதே....
காஃபி ஆத்தாமக் கூட வந்துருப்பாங்க!.. உஷார்!..

- மனசாட்சியாம்.. பேசிற்று...

எங்கள் பிளாக்கில் கருத்துரை ஏறி விட்டது...

என்னா?.. முதல்..ல நீதானே!...

இது பன்னாட்டு சதியாக் கூட இருக்கலாம்!...

ஓ!.. ரெண்டாவதா... 
அப்போ வணக்கம் சொல்லிட்டு போய் வேலையப் பாரு...

ஓய்!.. நெல்லைத் தமிழன் பதிவு எழுதியிருக்கார்...ங்காணும்.....
இருந்து படிச்சிட்டு கிளம்பிப் போம்!...

என்னா...வாம்!.. இன்னைக்கு திங்கக் கிழமை... இல்லே!...
கோயில் பிரசாதம் மாதிரி.. புளியோதரை பொங்கல்....ன்னு... 
ஏதாவது இருக்கும்!...


என்னது?... கோயில் பிரசாதமா!...
கறிவேப்பிலைக் குழம்பு...ல்லே வைச்சிருக்காங்க!....
இரு... இரு... நானு நக்கீரராமே!...

என்னது... நக்கீரரா.. நீயா!?...

ஆமா.... அப்படி வைச்சித்தான் எழுதியிருக்காங்க!....

அப்போ ஸ்ரீராமன் தான் செண்பகப் பாண்டியனா!?....

ஆமா!..

அது சரி.. பூங்குழலியைக் காணோமே!?...

பூங்குழலி... (...இது வேறயா!..)
புதுத் தண்ணியில குளிச்சதால
அவங்களுக்கு ஜலதோஷம் வந்துடுச்சாம்!..
ஓய்!.., நமக்கு எதுக்குங்...காணும் ஊர்வம்பு!..
இன்னுங் கொஞ்ச நேரத்தில
சலங்கைச் சாமி வந்துடும்!...

ஆகா!... சலங்கைச் சாமியா!..
அது நெத்திக் கண்ணோட வருமே!..
அப்போ நான் கிளம்பறேன்!...

துணைக்கு இருந்த மனசாட்சியும் கிளம்பியாச்சு..
இனி நாம தான் சமாளிக்கணும்...

தொண்டையைக் கனைத்துக் கொண்டால்
சிம்மக் குரலாக இல்லை!...

அது வேண்டாம்..
கையில் காஃபியோடு கீசா வந்தால் -
ஜிம்மக் குரலா!?.. - என்பார்கள்...

நமக்கு நம்ம குரலே போதும்!..
***

-: காலம் :-
பல நூறு ஆண்டுகளுக்கு முன்..

-: இடம் :- 
மன்னன் செண்பகப் பாண்டியனின்
அரசவை..

மன்னனும் நக்கீரரும் 
மற்றும் அவையோர்களும்


நக்கீரர் விளிக்கின்றார்...

கறிவேப்பிலைக் குழம்பு கொண்டு வந்த கலைஞரே!...

மன்னன் விடையளிக்கின்றான்...

அவரு கறிவேப்பிலைக் குழம்பு எல்லாம் கொண்டு வரலை..
சும்மா குறிப்பு மட்டும் தான் கொண்டு வந்தார்...
நீங்க பண்ணுன குழப்பத்துல பண்ட பாத்திரம்
எல்லாம் கொண்டு வந்து கொற்றவன் சபையிலயே
குழம்பு வைத்துக் காட்டுகிறேன்!.. - என்று போயிருக்கிறார்!...

ஓஹோ!... அவர் வர்ற வரைக்கும்...

பேசிக் கொண்டிருப்போமே!...

என்ன...ன்னு!...

அது கறிவேப்பிலை..யா?.. கரிவேப்பிலை...யா?... கருவேப்பிலை....யா?...

(அட... மறுபடியும் மறுபடியும் சந்தேகமா!...)
அரசே.. கறிவேப்பிலை என்பதே சரி!..

எப்படி நக்கீரரே!?...

பசுமையான கிழங்குகள் காய்கள் இலைகள் இவற்றுடன்
ஏலம் இலவங்கம் மிளகு என்பனவற்றைச் சேர்த்துச் சமைத்ததும்
அவற்றுக்கு கறி என்ற அடைமொழி சேர்ந்து கொள்கின்றது...

ஓ!.. அப்படியானால் கறி என்பது இறைச்சியைக் குறிக்காதா!...

மன்னவனே... இன்னும் கேட்பீராக!...
கறி என்பது மிளகுக் கொடியையும் குறிப்பதாகும்...

..... ..... தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது..

என்று, அகநானூற்றில் கபிலர் குறிக்கின்றாரே...
நீ குருகுலத்தில் அறியவில்லையா!...

(ஓ.. அப்ப தான் வில்லை எடுத்துக்கிட்டு
வேட்டைக்குக் கிளம்பிட்டேனே!...
நல்லவேளை நக்கீரர் கண்டுக்கலை..)
அருமை... அருமை!...

இப்படி மிளகு இடப்பட்ட கறிக்கு மேலும் சுவையூட்டும் இலை..
ஆதலின் கறிவேப்பிலை.. எனப்பட்டது!...

இந்தக் கறிவேப்பிலை செந்தமிழருக்கே உரியது...

வடநாட்டு வணிகன் வாங்கிச் சென்று
கறி பத்தா - என்று வாணிகம் செய்வான்...

மேலும், மேலைத்தேசத்தில் இருந்து
நாடு பிடிக்க வருபவனும், இதனை -

Curry Leaves - என்பான்..

தாங்கள் இப்போது சொன்னீர்களே.. அது என்ன மொழி?..

அதை இங்க்லீஷ் என்பார்கள்...

ஓ.. அந்த மொழியும் தெரியுமா!?..

எல்லாந்தான் தான் கற்றேன்.. என்ன பிரயோஜனம்!...

அப்படியா!... சரி.. அதை விடுங்கள்...
வேப்பிலை என்று எதற்காக?...

முற்றிய இலை சற்றே கசக்கும் வேப்பிலை போன்று...
அதனால் தான் அப்படியொரு பேர் சேர்ந்து கொண்டது...



இதன் தளிர் இலைகள் நீரிழிவு நோய்க்கு மிக நல்லது..
விடியற்காலையில் வெறும் வயிற்றில்
ஒரு கைப்பிடி அளவு தின்றால் நன்மை பயக்கும்...

இதன் இலைகள் மட்டுமல்லாது
சின்னஞ்சிறிய காய்களும் கனிகளும் 
மருத்துவ குணமுடையவை...

ஆனாலும்,
சாப்பிடும் போது தாளிக்கப்பட்ட இலைகளை ஒதுக்கி விடுகின்றோமே?...


சூடான எண்ணெயில் இலைகளைப் போட்டதுமே
காய்ந்து கருகித் தீய்ந்து விடுகின்றன!..
தீய்ந்த இலைகளைத் தூரப் போடுவதே நல்லது...

மருத்துவ நல்லோர் கூறுவதெல்லாம் -
இளந்தளிர்களை வாயில் இட்டு மென்று விழுங்கலாம் என்பதே!..

மற்றபடிக்கு முற்றிய இலைகளை நீர் விட்டு அரைத்து
தலையில் பூசிக் கொள்ள இளநரை மாறும் என்பார்கள்..

அப்படியானால் நீங்கள் ஏன் பூசிக் கொள்ளவில்லை!..

செண்பகப் பாண்டியனே!..
இது கிழநரை... மேலும்,
இந்த உடலே ஒரு மாயம்...
இதற்கு ஏன் வேறொரு சாயம்!...

ஆகா.. ஆகா!..

சபையோர்கள் எழுந்து கைகளைத் தட்டி மகிழ்ந்தனர்...

(வேறு வழி?... கை தட்டித்தான் ஆகவேண்டும்.. மேலும் -
கை தட்டி கலைத்து விடவில்லை என்றால்
நக்கீரர் பேசிக்கொண்டேயிருப்பார்..)

ஆகட்டும் ... நக்கீரரே!...
பூங்குழலியின் சமையல் வாசம்
தமிழ்ச் சபை வரைக்கும் வந்து விட்டது!..
நான் புறப்படுகின்றேன்...

மன்னா.. தாங்கள் அறிவித்தபடி ஆயிரம் பொற்காசுகளை
திரு.நெல்லைத் தமிழனுக்கே அளித்து விடுங்கள்...
நானும் வீட்டுக்குப் புறப்படுகின்றேன்...
அங்கே மோர் சோறும் வடு மாங்காயும் தான்!..
***


என்னையும் நக்கீரராக அறிமுகம் செய்ததற்காக
நானும் கறிவேப்பிலை புராணம் படித்து விட்டேன்...

படிச்சது மட்டும் தானா!.. பாட்டு ஒன்னும் இல்லையா?...

ஏன் இல்லை... இதோ இருக்கே!..
மண்டபத்துல உட்கார்ந்து நானே எழுதுனது!...

அறிவறியாய் மடநங்காய் அழகுதரும் ஓரிலையை
கறியறியும் வேப்பிலை இணையிதற்கு வேறுஇலை
வருநரையும் கதிகலங்கும் வளரிளமை நலந்துலங்கும்
திருநிறையும் கறியிலையை உண்டுணர்வாயே...

வாழ்க நலம்..
***

40 கருத்துகள்:

  1. ​// கோயில் பிரசாதம் மாதிரி... புளியோதரை பொங்கல்... ன்னு... ஏதாவது இருக்கும்....//

    ஹா.... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவங்க கலாய்த்தா சந்தோஷத்தைப் பாரு. கர்ர்ர்ர்ர்ர்ர்.

      இதேபோல, எனக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்கணும்னு தேர்ந்தெடுத்த 'தமன்னா அம்மா' படத்தையும் வெளியிடறது.

      இந்த ஸ்ரீராமோட வம்பு ஜாஸ்தியாகிடுச்சு.

      நீக்கு
  2. //அப்போ ஸ்ரீராமன்தான் செண்பகப் பாண்டியனா!?...//

    ஆட்சேபிக்கிறேன் நக்கீரரே... நான் ஸ்ரீராம்தான்! மேலும் நான் முதலில் சோழன், பின்னர்தான் பாண்டியன்!!!! ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த ஊரு அபிமானம்! :) நாங்கல்லாம் முதல்லே பாண்டியர். அதிலும் புராதனப் பாண்டியர். பின்னர் தான் சோழர். சோழர்கள் வந்தேறிகள் ஆச்சே! ஹிஹிஹிஹி! :)

      நீக்கு
    2. யக்கா.. நீங்களா! கடமையையும் காபியையும் ஆத்தி விட்டு நேரா இங்க லேண்ட் ஆயாச்சா!

      நீக்கு
    3. கண்டிப்பா நீங்க சோழனாத்தான் இருக்கணும். அவங்கதான் தமிழகத்தைத் தாண்டி பல தேசங்களிலும் பெண் எடுத்தவர்கள், ஆசைப்பட்டவர்கள் ( நான் அனுஷ்காவைச் சொல்லலை)

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. அதெல்லாம் இல்லை. எங்க புக்ககத்தில் நான் பார்த்தவரை வெளி ஊர்ப் பெண்கள் கடைசிவரை வெளி ஊர்ப் பெண்களாகவே இருப்பாங்க! அப்படித் தான் நடத்துவாங்க. குறைந்த பட்சம் புக்ககத்தில் யாருக்கானும் உறவுப் பெண்ணா இருக்கணும். இல்லைனா தஞ்சை ஜில்லாப் பூர்விகம் இருக்கணும்! அப்போத் தான் ஆட்டையில் சேர்த்தி! இல்லைனா சேர்த்துக்க மாட்டாங்க! இது என்னோட மட்டுமல்ல இன்னும் சில வேறே ஊர்ப் பெண்கள் தஞ்சை ஜில்லாவில் வாழ்க்கைப்பட்டுப் பட்ட அனுபவங்களையும் வைத்துச் சொல்லுகிறேன்.

      நீக்கு
    5. என்னாது ஸ்ரீராம்.. செண்பகப் பாண்டியனோ?:) இருங்கோ இப்பவே கண்டு பிடிக்கிறேன்ன் அந்த செண்பகா அக்கா ஆரென.. விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
  3. //அது சரி... பூங்குழலியைக் காணோமே!?...//

    அந்த ரோலில் அனுஷ் வர வர வாய்ப்பில்லையா நக்கீரரே...!!!! ஹா.... ஹா... ஹா....

    பதிலளிநீக்கு
  4. //இந்த உடலே ஒரு மாயம்
    இதற்கு ஏன் வேறொரு சாயம்?//

    ஆஹா... அருமை நக்கீரரே... பைந்தமிழ்ப் புலவரென நிரூபித்து விட்டீர்!

    பதிலளிநீக்கு
  5. //அங்கே மோர் சோறும் வடு மாங்காயும் தான் //ஹா.... ஹா... ஹா... பூங்குழலியிடமிருந்து ஒரு குடுவையில் கறிவேப்பிலைக்குழம்பு வாங்கிச் செல்லுங்கள் நக்கீரரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோர் சோறும், வடு மாங்காய் (அதுவும் வெங்கட் தளத்தில் பார்த்த படம் ஞாபகம் வருகிறது) - இது இருக்கும்போது வேறு நினைப்பு என்ன வரும்?

      மோர் சாதம் - மாவு தோசை (கோதுமை, ரவா போன்று) மிளகாய்ப்பொடி
      மோர் சாதம் - மிளகாய் பஜ்ஜி அல்லது குனுக்கு அல்லது வெங்காய பஜ்ஜி
      மோர் சாதம் - வாழைக்காய் பொரிச்ச குழம்பு
      மோர் சாதம் - புது மாங்காய் ஊறுகாய்

      இந்த காம்பினேஷனில் எது இருந்தாலும் போதுமே. வேறு எதைப் பற்றியும் நினைக்கத் தோன்றுமா ஸ்ரீராம்?

      நீக்கு
  6. கடைசியாய் அங்கவஸ்திர ஜரிகையாய் இணைத்திருக்கும் பாடல் நீங்களே இயற்றியதா? பாராட்டுகள். அகநானூறு, புறநானூறு என்று பாடல் உதாரணம் காட்டும் உங்கள் நினைவுத்திறனையும், எதைப் பற்றி கதைத்தாலும் அதைப்பற்றி விவரம் கொடுக்கும் உங்கள் திறமையையும் கண்டு தலை வணங்குகிறேன். பாராட்டுகளும், வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  7. கறிவேப்பிலைதான் சரி என்று நிறுவி விட்டீர்கள். இளநரை பற்றியும் பேசி விட்டீர்கள். ஒரு கல்லில் எத்தனை மாங்காய்தான் அடிப்பீர்கள்!

    பதிலளிநீக்கு
  8. /அறிவித்தபடி ஆயிரம் பொற்காசுகளை திரு நெல்லைத் தமிழனுக்கே அளித்து விடுங்கள் //

    "இரண்டு விடயங்கள் புலவரே.... ஒன்று பொற் இல்லை! இன்னொன்று கொஞ்சம் குறைகிறது...."

    "எவ்வளவு குறைகிறது மன்னா?"

    இப்படிக்கு காதைக் கொண்டு வாருங்கள்..."

    "இதோ.."

    எங்கே புலவரே உம்ம காது? ஒரே நரைமுடியாய் இருக்கிறது... களைந்தால் சேமியா உப்புமா செய்யலாம் போல... காது.... காது... காது... எங்கே அது?"

    "கிச்சுகிச்சு மூட்டாதீர்கள் மன்னா.. இதோ எம் காது..."

    "ம்ம்ம்... எங்கு விட்டேன்? ம்ம்ம்... கொஞ்சம் குறைகிறது என்று சொன்னேன் அல்லவா... ஒரு தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது காசு மட்டும் குறைகிறது புலவரே..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதெல்லாம் முடியாது குறைந்தாலும் என் பங்கு எனக்குக் கொடுக்கணுமாக்கும்....கறிவேப்பிலைதான் சரி என்று நேற்று நக்கீரரிடம் என் பதிலைச் சொல்லிக் கேட்டமைக்கு....பாருங்கள் இன்று அவரே அதுதான் சரி என்று தீர்ப்பளித்துவிட்டார்!! ஹெ ஹெ ஹெ ஹெ!!!! அந்த தொள்ளாயிரத்து தொண்ணூஉற்று ஒன்பது காசு எங்களுக்குத்தானே பங்கிட்டு கொடுக்க? அப்பால சுருக்குப் பைல மன்னரின் ஜிம் மாசனத்துல....மன்னர் ஹைடெக்காக்கும்!!! அதுல கட்டித் தொங்க விட்டுருக்கு பாருங்க...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  9. பாடல் பிரமாதம் எனில் இடுகை அதை விடப் பிரமாதம். நேத்திக்கு செல்ஃபோன் தொலைந்து போன வருத்தத்தில் கணினியைத் திறக்கவே இல்லை. இன்று வந்து பார்த்தால் தூள் கிளப்பி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  10. அது சரி. நெ.த. எங்கே? அவர் ஆதாரமாக எடுத்துக் கொண்டிருப்பது என்னோட கருகப்பிலை/கறிவேப்பிலை/கரிவேப்பிலை குறித்த பதிவுகள் என்பதால் பொற்காசுகள் எமக்கே உரியவை! என்னோட மண்டபத்திலே இருந்து எழுதி வாங்கியதால் அதற்குரியனவற்றைக் குறைத்துக் கொண்டு நெ.த.வுக்குக் கொடுங்க! பொற்கிழி எனக்கே எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி... மதுரையைச் சேர்ந்தவங்க எல்லாம் இறையனார் மாதிரி நியாய உணர்வோடு இருப்பாங்கன்னு எதிர்பார்க்கலாமா? அங்கு பாடல் எழுதிக் கொடுத்து பொற்காசுகளை தருமிக்கே தரச்சொன்ன மதுரை ஆலவாய் அரசர் எங்கே... எல்லாம் தனக்கே என்று சொல்லும் மதுரைக் கார மீனாட்சி (சீதாலக்ஷ்மி/கீசா மேடம்) எங்கே.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹாஹா !!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  11. // அதற்குரியனவற்றைக் குறைத்துக் கொண்டு நெ.த.வுக்குக் கொடுங்க! பொற்கிழி எனக்கே எனக்கு! //

    "புலவரே.... கொஞ்சம் குறையும் அந்த காசிலும் பங்கு வேண்டுமாம்.. பார்த்து ஏதாவது செய்யுங்கள்.. பொற் இல்லை. கிழிதான் இருக்கு. யாரங்கே... பூங்குழலியிடமிருந்து அந்த மஞ்ச சுருக்குப்பையை வாங்கி வாருங்கள்..."

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு.
    நிறைய விஷயங்கள் நக்கீரர் சொல்லி விட்டார்.
    புலவரின் கவிதை அருமை.
    எனக்கும் எங்கள் பிளாக் சுற்றிக் கொண்டே இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
    என் பிளாக் எனக்கு சுற்றிக் கொண்டு இருக்கிறது. கைபேசி வழியாகதான் பதில்கள் போடுகிறேன்.
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வந்தால் உதவி செய்வார்.

    பதிலளிநீக்கு
  13. துரை அண்ணா ஆஜர்!!! ஆ ஆ ஆ ஆ கொஞ்சம் அங்கிட்டு போய்ட்டு வரதுக்குள்ள கருத்த்துகள் பல வந்து அதிருது!!! இதோ பதிவை வாசிக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஹா ஹா ஹா ஹா அண்ணா எனக்கும் எபி சுத்தும் சுத்தும்...

    அதற்குள் தூக்கம் வராதோர் சங்கம்// ஹா ஹா ஹா ஹா ஹா ரொம்பவே சிரிச்சுட்டேன்......அவங்க வந்து என்ன அதகளம் பண்ணப் போறாங்களோ....ஆனா என்னால் வர முடியாம போகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. முதலில் கடைசியில் நீங்கள் எழுதியிருக்கும் பாடலைச் சொல்லிடறேன் அற்புதம்....அண்ணா எங்கேயோ போய்ட்டீங்க!!! தமிழ் சங்ககால இலக்கியம் என்று சொல்லிடலாம்!!! ஹப்பா வாசித்துவிட்டு மெய்மறந்து போனேன்....அசாத்தியம் அருமை அருமை...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. துரை அண்ணா என்ன அண்ணா நான் கரீக்ட்டாக கறிவேப்பிலைனு சொல்லிருந்தேனே.....நீங்க பாக்கலையா அதனால பொற்கிழில எனக்கும் பங்குண்டு ஆமாம் சொல்லிப்புட்டேன்....பாருங்க சைக்கிள் காப்ல இப்படிச் சொன்னாத்தான் உண்டு இல்லைனா நம்மள மறந்துருவாங்க....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. எ பில திங்கல… பொங்கல், புளியோதரை கோயில் பிரசாதம் // ஹா ஹா ஹா ஹா ஹா……ஹையோ அண்ணா செமையா கலாய்ச்சும் எழுதறீங்களே!!!!!
    நக்கீரர் சொன்ன பிறகு கருத்துக்கு மாற்று உண்டா என்ன? கறிவேப்பிலை மஹாத்மியம் அருமை…
    நல்ல குறிப்புகள்…..
    ஜல் ஜல் ஜல் சலங்கை மதியம் வரும் அதிர அதிர!!!!! இப்பவே எனக்கு கனெக்ஷன் போயிர்ச்சு….மதியம் வந்து ஹும்….கனெக்ஷன் சரியாகும் வரை இப்படித்தான்….

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அண்ணா பதிவு செம!!!! தமிழும், பாடல்களும், நகைச்சுவையும் எல்லாம் கறிவேப்பிலை மணத்துடன் கம கம என்று கலக்கிட்டீங்க!!!

    கம கம கம கம கம கம
    வாசம் வருதே மசாலா...
    நோ நோ
    க றி வேப்பிலை!
    கறிவேப்பிலை !!
    வாசம் வருதே!

    எதில் கறிவேப்பிலை சேர்த்தாலும் அதன் மணமும் சுவையும் அலாதிதான்!!!!! கறிவேப்பிலையின் பயன்கள் எல்லாம் செம...ம்ம்ம்ம்ம் இனி நம்ம நரை சரியாகாது இது கிழ நரை!! போனா போகுது...மத்த பயன்கள் கிடைக்குமே!! நான் உணவில் நிறைய கறிவேப்பிலை சேர்ப்பேன்...

    அசத்தல் பதிவு துரை அண்ணா...

    கீதா



    பதிலளிநீக்கு
  19. வளரிளமை - அருமையான சொல்லாடல். பாடலை ரசித்தேன்.

    செண்பகப் பாண்டியன், அனுஷ்கா மேல் அறிதுயில் கொள்ளும் காட்சியைப் போட்டிருந்தால் ஒருவேளை ஸ்ரீராம் ஒத்துக்கொண்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. மிக அருமை.. நகைச்சுவை கலந்து நிறைய விசயங்களை அள்ளித் தெளிச்சிட்டீங்க.. கறிவேப்பிலைதான் கரிட்டூஊஊஊஊஊ அதுதான் நான் நேற்றே சொல்லிட்டனே.. நேக்கு டமில்ல டி ஆக்கும்:))..

    காலியில் எப்போரையும் எங்கள்புளொக் படுத்தும் பாடு ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  21. கறிவேப்பிலைப் பழங்கள் இப்போதான் பார்க்கிறேன்.. இவை சாப்பிட முடியுமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சிறு வயதில் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கும் (மணத்தக்காளியைவிட பெரியது. பெரிய அளவில் கொட்டை உண்டு)

      நீக்கு
  22. இரசிக்க வைத்த கலாய்த்தல் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  23. பூங்குழலியாக அனுஷ்... என்னா ஒரு ஆசை! :)

    பதிவை ரொம்பவே ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  24. கறிவேப்பிலை பெயர்க்காரணம் அறிந்தேன் ..யாருக்கும் பொற்கிழி கிடையாது அந்த குறிப்பை இன்னிக்கு சமைத்து ருசித்த எனக்குதான் கோல்ட் parrot :)

    பதிலளிநீக்கு
  25. கறிவேப்பிலையின் புராணத்தை ரசித்தேன். நயம்படக் கூறிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  26. விடியற்கால வேளையில் கறிவேப்பிலை விற்கும் முதிய பெண்கள்,முதுகில் மூட்டையுடன் கறிப்பில்லே,கறிப்பில்லே என்று கூவி விற்பார்கள். இதை நல்ல சகுனமாகக் கருதுவார்கள். ஒரு கைப்பிடி அரிசி கொடுத்துதான் கறிவேப்பிலை வாங்குவார்கள். அது ஒருகாலம்.பண்ட மாற்றுதல்தான். அதேமாதிரி நல்லகாலம் பிறக்குது,நல்லகாலம் பிறக்குது என்று குடுகுடுப்பாண்டியும். உங்கள் பல்சுவை கறிவேப்பிலைக் கட்டுரையைப் படித்ததும் இதெல்லாம் ஞாபகம் வந்தது. கமகமக்கும் கட்டுரை. ரஸித்தேன். அன்புடன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..