உவரி..
தென் தமிழகத்தில் - பெயர் பெற்று விளங்கும் சிற்றூர்..
இவ்வூரின் பெருஞ்சிறப்பு -
வங்கக் கடற்கரையோரமாக விளங்கும் ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்...
எங்கள் குலதெய்வம் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலும் இதுவே..
இத்திருக்கோயிலில் ஆண்டு முழுதும் திருவிழாக்கள் என்றாலும்
வைகாசி விசாகமும் தைப் பூசமும் பெருந்திருவிழாக்கள்...
இந்த ஆண்டின் தைப் பூசத்திருவிழாவிற்கான திருக்கொடி
தை மாதம் பத்தாம் நாளன்று (23 ஜனவரி - செவ்வாய்)
அதிகாலையில் மகர லக்னத்தில் ஏற்றப்பட்டது..
அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு நாளும்
ஸ்ரி சந்திரசேகர மூர்த்தியும் மனோன்மணி அம்பிகையும்
கோலாகலமாக திருவீதி எழுந்தருளினர்..
நேற்று காலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
வடம் பற்றி இழுக்க திருத்தேரில்
எம்பெருமானும் அம்பிகையும் எழுந்தருளி
திருவீதி வலம் வந்து திருவருள் பாலித்தனர்...
திருவிழாவை நேரில் கண்டுகளிக்க இயலாவிட்டாலும்
தகவல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தினால்
காட்சிகள் அனைத்தும் கண் முன்னால் விரிகின்றன..
திருவிழாவின் நிகழ்வுகளை வலையேற்றித் தந்த
சிவனடியார் திருக்கூட்டத்தினர் தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி...
யான் பெற்ற பேற்றினைப் பெறுதற்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்...

நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90)
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய புகைப்பட தரிசனம் கண்டேன்.
கடந்த மாதம் குடும்பத்துடன் இக்கோயிலுக்குச் சென்று எங்கள் பேரன்கள் தமிழழகன், தமிழமுதன் ஆகிய இருவருக்கும் முடியெடுத்து வந்தோம் ஐயா.
பதிலளிநீக்குபழைய கோவில் என்றாலும் படத்தில் பார்க்கும்போது பளிச் என்றிருக்கிறது! உங்கள் நண்பர் உதவியாலும், உங்கள் பதிவாலும் எனக்கும் தரிசனம் கிட்டியது.
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அருமை, காலையிலேயே தரிசனம் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி எனக்கு...
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குபடங்களைப் பார்க்கவே மனதில் மகிழ்வு பிறக்கிறது.
தற்கால இந்த அரிய தொழில் நுட்பமெம்மை அங்கு நடக்கும் நிகழ்வுகளுடன் இணைத்து வைத்திருப்பதும் இறை அருளே!
நல்லருளை நாமும் பெற இங்கு பதிவாக்கித் தந்தமைக்கு
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் ஐயா!
வாழ்க வளமுடன்!
அருமையான நேரடி காட்சி போல் கண்டு களித்தேன்.
பதிலளிநீக்குபடம் அனுப்பி வைத்த சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு நன்றி வாழ்த்துக்கள்.
இறை நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் உங்கள் ஆர்வப் பகிர்வு நன்கு தெரிகிறது பாராட்டுகள்
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை! எங்களுக்கும் தரிசனமும் கிட்டியது. படங்கள் எல்லாம் அனுப்பிக் கொடுத்த சிவனடியார் திருகூட்டத்தினறுக்கும் அதை எங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதரிசனத்துக்கு அருமை! அதுவும் தேருக்குள்ளே எம்பெருமானைப் படம் எடுத்தது மிக மிக அருமை! எல்லாப் படங்களும் அருமை. உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குமிக அழகிய தரிசனம்....
பதிலளிநீக்கு