தென்னகத்தின் மாபெரும் திருநாள்..
திருக் கார்த்திகை எனும் பெருநாள்..
திரு அண்ணாமலை எனும் திருத்தலத்திற்கே உரிய நன்நாள்...
தமிழ் கூறும் நல்லுலகின் தொன்மையான விழாக்களுள் இதுவும் ஒன்று...
கடந்த நவம்பர் 23 அன்று திருக்கொடியேற்றத்துடன்
திரு அண்ணாமலையில் திருக் கார்த்திகைத் திருவிழா தொடங்கியுள்ளது...
இது போலவே தமிழகம் எங்கும் சகல சிவாலயங்களிலும்
திருமுருகன் திருக்கோயில்களிலும் திருக் கார்த்திகைத் திருவிழா கோலாகலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..
தீபஜோதி 2016 |
திரு அண்ணாமலை எனும் திருத்தலத்திற்கே உரிய நன்நாள்...
தமிழ் கூறும் நல்லுலகின் தொன்மையான விழாக்களுள் இதுவும் ஒன்று...
கடந்த நவம்பர் 23 அன்று திருக்கொடியேற்றத்துடன்
திரு அண்ணாமலையில் திருக் கார்த்திகைத் திருவிழா தொடங்கியுள்ளது...
இது போலவே தமிழகம் எங்கும் சகல சிவாலயங்களிலும்
திருமுருகன் திருக்கோயில்களிலும் திருக் கார்த்திகைத் திருவிழா கோலாகலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..
இன்றைய பதிவில் -
நினைக்க முக்தி நல்கும்
திரு அண்ணாமலையில் நிகழும்
திருவிழாவின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன..
படங்களை வழங்கியோர் -
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***
கார்த்திகை தீபங்களின் சுடரொளியால்
அன்பெனும் நல்வழி மலரட்டும்
இருள் எனும் அல்லல் அகலட்டும்..
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்..
***
திருத்தலம்
திரு அண்ணாமலை
இறைவன் - ஸ்ரீ அருணாசலேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அபிதகுசலாம்பிகை
தீர்த்தம் - பிரம தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழமரம்
பாடிப் பரவியோர்
திருஞானசம்பந்த மூர்த்தி
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்
மாணிக்கவாசகப் பெருந்தகை
***
திருத்தலம்
திரு அண்ணாமலை
இறைவன் - ஸ்ரீ அருணாசலேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அபிதகுசலாம்பிகை
தீர்த்தம் - பிரம தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழமரம்
நால்வர் பொற்றாள் சரணம் |
திருஞானசம்பந்த மூர்த்தி
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்
மாணிக்கவாசகப் பெருந்தகை
***
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவா வண்ணம் அறுமே..(1/10/1)
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார் வினையிலரே..(1/10/2)
-: திருஞானசம்பந்தர் :-
-: திருஞானசம்பந்தர் :-
பூவார்மலர் கொண்டுஅடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்து அணையுஞ்சாரல் அண்ணாமல்லையாரே..(1/69/1)
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங்கு உறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே..(1/69/4)
-: திருஞானசம்பந்தர் :-
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அணா மலையுளானே
நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே..(4/63/1)
பைம்பொனே பவளக்குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதாசீர்தரு மணியேமிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையுளானே
என்பொனே உன்னை அல்லால்யாதும் நான் நினைவிலேனே..(4/63/4)
-: திருநாவுக்கரசர் :-
வட்டனை மதி சூடியை வானவர்
சிட்டனைத் திருஅண்ணா மலையனை
இட்டனை இகழ்ந் தார்புர மூன்றையும்
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ..(5/4/1)
மத்தனை மதயானை உரித்த எஞ்
சித்தனைத் திரு அண்ணா மலையனை
முத்தனை முனிந்தார் புர மூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ...(5/4/3)
-: திருநாவுக்கரசர் :-
பெற்றம் ஏறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்றமா மிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.. (5/5/2)
தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம் நமதுள்ள வினைகளே..(5/5/5)
-: திருநாவுக்கரசர் :-
தமிழர் தம் இல்லங்கள் தோறும்
ஒளிவீசுகின்ற திருவிளக்குகள் -
அமைதிக்கும் ஆனந்தத்திற்கும்
நல்வழி காட்டுகின்றன..
உள்ளங்களும் இல்லங்களும்
ஒளி பெறட்டும்..
***
இன்று அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபம் |
அண்ணாமலை எம் அண்ணா போற்றி..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம..
***
அழகிய தீபதரிசனம் கண்டேன் ஜி.
பதிலளிநீக்குகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎங்கிருந்தாலும் தங்களின் எண்ணமெல்லாம்
பதிலளிநீக்குதமிழ் மண்ணின்மீதுதான்
வாழ்த்துககள் ஐயா
அமைதியும் ஆனந்தமும் கிடைக்க நல்வழிதான், கார்த்திகை தீபத்திருநாள்.
பதிலளிநீக்குபடங்களும், பாடல்களும் கண்டு, படித்து மகிழ்ந்தேன்.
தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
நண்பர்கள் அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅழகான கார்த்திகை தீபத் திருநாள் காட்சிகளைக் கண்டேன். மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருந்தன புகைப்படங்கள்.
பதிலளிநீக்குமிக அருமை...
பதிலளிநீக்குஅன்னையின் பெயர் ஸ்ரீஅபிதகுலாம்பிகை என அறிந்துக் கொண்டேன்
தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதீப ஒளி எங்கும் பரவட்டும். உங்கள் மூலம் தீபத் திருநாள் காட்சிகள் காணக் கிடைத்தது. நன்றி.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பொதிகை நேரலையில் கண்டோம்
பதிலளிநீக்குஅழகான தரிசனம் சகோ! திருவண்ணாமலை எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
மிக அருமை, திருவண்ணாமலைக் கார்த்திகை தீபம் நாமும் பார்த்திருக்கிறேன்.. ஊ ரியூப்பில்:)
பதிலளிநீக்கு