தமிழமுதம்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்..(019)
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்..(019)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 06
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
ஸ்ரீ பார்த்தசாரதி |
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
சிவ தரிசனம்
திருத்தலம்
திருகோடிகா
திருகோடிகா
இறைவன் - ஸ்ரீ கோடீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ திரிபுரசுந்தரி
தீர்த்தம் - சிருங்க தீர்த்தம்
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைகள் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புடஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே!..(6/81)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 06
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மீ தான் இம்முறை 1ஸ்ட்டா வந்து அருளைப் பெற்றுக் கொண்டேன்ன்ன்ன்ன்ன்_()_.
பதிலளிநீக்குதிருக்கோடிகா - இதுவரை கேள்விப்பட்டதில்லை. எங்கே இருக்கிறது?
பதிலளிநீக்குமார்கழி காலையில் இனிய தரிசனம். நன்றி.
மார்கழி 6 ஆம் தினம் அழகான தரிசனம். புள்ளும் சிலம்புகின்றன இங்கு அத்துடன் தளத்தில் திருப்பெருந்துறை சிவபெருமானையும், வண்டார்பூங்குழலியையும், திருக்கோடிகா இறைவனையும் (திருக்கோடிகா கேட்டதே இல்லையே!!) ஒப்பிலா பெருமானையும் ஔவை மொழியுடன் கண்டு தரிசித்தாயிற்று!!!
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஜி தரிசித்தேன் மார்கழிக் கோலம் வாழ்க நலம்
பதிலளிநீக்குபாடல்களை ரசித்தேன். திருக்கோடிக்காவல் இரு முறை சென்றுள்ளேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதேவாரம் திருவாசகம் திருப்பாடலென காலையில் படிக்க அரிய பதிகங்களும் கண்களுக்கு இனிமையான காட்சிகளும்...
அருமையான தெய்வ தரிசனம் இன்றும்.
நன்றி ஐயா!
வாழ்க வளமுடன்!
ஒப்பிலி அப்பன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன் வாழ்த்துகள் தொடர்கிறேன்
பதிலளிநீக்குஒப்பிலியப்ப தரிசனம். இவர் சன்னதியில்தான் எங்கள் திருமணம் நடந்தது.
பதிலளிநீக்கு