நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 14, 2017

நல்லாருக்கீங்களா?..

அண்ணே!.. நல்லாருக்கீங்களா!?..

யார்...யா அது!?.. அட... நம்ம சின்ன முத்து!..
வா.. வா.. நல்லாத் தான் இருக்கேன்!..

இல்லே.. நல்லாருக்கீங்களா.... ந்னு கேட்டேன்!...

அதான் நல்லா இருக்கேன்..ன்னு சொல்றேன்...ல்ல!..

அதைத் தான் நானுங் கேட்டேன்!.. நல்லா ருக்கீங்களா.... ந்னு!..

அதைத் தானே நானுங் சொல்றேன்!.. நல்லா இருக்கேன்..ன்னு!..



எதுக்கு கேட்டேன்...னா!..

ஏய்!.. இரு.. இரு!.. நீ நல்லா இருக்கியா?.. அதைச் சொல்லு முதல்ல!...

என்னத்தை.. நல்லா... என்னத்தை இருந்து!?..

நீ என்ன.. கன்னையாவா?.. சின்னையாவா?..

அது யாரு கன்னையா?..

ஏதோ ஒரு படத்தில.. நீங்க எம்ஜியார் மாதிரி தகதக..ன்னு இருக்கீங்க.. ந்னு வடிவேல.. பார்த்து, சொல்வாரே!.. அவரு தான்!..

அவருக்கு என்ன இப்போ?..

அவரும் இப்படித்தான் என்னத்தை வந்து.. என்னத்தை போயி... ந்னு பேசுவார்..  அவரு மாதிரி பேசுறியே..ன்னு கேட்டேன்... ஏன்?.. என்ன ஆச்சு உனக்கு?..

ரெண்டு நாளா வயிறு கடமுட..ன்னு ஒரே சத்தமா இருக்கு... 

ஏன்.. என்ன சாப்பிட்டே!...

எப்பவும் போல சோறும் குழம்புந்தான்!.. 

அப்புறம் என்ன குழப்பம்?.. 


அதுவும் இல்லாம காதுல விழுற சேதி எல்லாம் நல்லா இல்லே!...

என்ன.. இது?.. பிளாஸ்டிக் சோறு தின்ன மாதிரி... புலம்புற?...

இருந்தாலும் யாரையும் நம்ப முடியலை!.. 
திண்ணை எப்போ காலியாகும் ... ந்னு இருக்காங்க!..

சரியான பைத்தியம் ... நீ!..

ஏன்!?..

பிளாஸ்டிக் அரிசி..ன்னு ஒன்னு கிடையாது.. அதை முதல்ல தெரிஞ்சுக்க!..

நீங்க கூட சொன்னீங்களாமே.. அன்னைக்கு!...

சொன்னேன் தான்!.. ஆனா - வாளி குடம் குவளை அதெல்லாம் செய்ற பிளாஸ்டிக் இருக்கே அது இல்லை இது!..



பின்னே!?..

கழுதைக்குப் பேரு முத்து மாலை!.. - அப்படின்னு சொன்ன மாதிரி இது ஒருவிதமான கலப்பட அரிசி..ன்னு சொல்றாங்க...

அட!...

வீணாப் போன குறுணை , மட்டரகமான கிழங்கு மாவு இதுகளோட
வேற ஏதோ ரெசின்... ன்னு ஒரு இரசாயனம் இதெல்லாத்தையும் 
தண்ணி விட்டு அரைச்சி -

அப்புறம்!?..

அரிசி கனத்துக்கு அட்டை மாதிரி ஊத்தி அதைக் காய வெச்சு 
அப்புறம் அரிசி மாதிரி ஆக்குறானுங்க..ன்னு பேப்பர்ல போட்டுருக்காங்க!..

அடக் கருமமே!..

இந்த மாதிரி ஆறு ஏழு வருசத்துக்கு முன்னாலயே செஞ்சு புழக்கத்துக்கு விட்டுருக்கான் சீனாக்காரன்...

இவனை என்ன செஞ்சா தகும்!?..

அப்பவே அந்த நாட்டு அரசாங்கம் அதை தடை பண்ணிட்டாங்க!.. அதைத் தான் எப்படியோ மறுபடியும் மோப்பம் பிடிச்சு இருக்கானுங்க போல இருக்கு...

அடக் கெரகமே!...

நேபாளம் வழியா வருது..ன்னு சொல்றானுங்க...
தெலுங்கானாவில தயாரிக்கிறானுங்க.. ந்னு சொல்றானுங்க...

இதெல்லாம் யாருக்குமே தெரியாம நடக்குதாக்கும்!?.. 

பிளாஸ்டிக் அரிசி எல்லாம் உண்மை இல்லை.. 
பிளாஸ்டிக் ..ல அரிசி தயாரிக்கறது எல்லாம் லாபகரமானது இல்லை.. அப்படி..ன்னு இங்கே உள்ள ஆளுங்க சொல்றாங்க!..

அப்போ லாபம் கிடைச்சா செய்வானுங்க போல!..

இதைக் கேளு...  இங்கே உள்ளவங்க அப்படிச் சொன்னாலும் - 
ஏதோ ஒரு கலப்படம் உள்ளே நுழைஞ்சிருக்கு.. அது மட்டும் நிச்சயம்!..

அதோட முழு விவரம் சரியாத் தெரியலை... அதையெல்லாம்
சோதனை செய்றோம்.. ஆராய்ச்சி பண்றோம்..- ந்னு சொல்றாங்களே தவிர..

ஆமா.. அப்படியே ஆராய்ச்சி செஞ்சிட்டாலும் - 
முழுசா உண்மைய ஜனங்களுக்கு சொல்லிடுவாங்களாக்கும்!..

நம்புவோமே!.. நல்லது நடக்கட்டும் ..ன்னு!..

இருந்தாலும் வயிறு ஓயாம கடமுட....ங்குதே!..  அதான் எல்லாரையும் ஒருதரம் பார்த்துட்டுப் போகலாம்..ன்னு வந்தேன்...

அட நீ வேற!.. சரியான கிறுக்கனா இருக்கியே!..
உங்க வீட்டுல அம்மி அரைக்கிறது உண்டா?..

எப்பவாவது மிக்ஸி..ல அரைக்கிறாளுங்க.. இல்லேன்னா.. 
கடையில விக்கிற மசாலாத் தூளு தான்!..

இட்லி தோசைக்கு மாவு அரைக்கிறதுண்டா!...

அதான் பாக்கெட் மாவு விக்கிறானே.. அப்புறம் என்ன!..

நாட்டுச் செக்கு..ல கடலை ஆட்டுன காலம் எல்லாம் மலையேறிப் போச்சு..

அதான் அவனே பாக்கெட்..லயும் பாட்டில்..லயும் எண்ணெய் தர்றானே!.. 

நல்ல மாட்டையெல்லாம் சந்தையில வித்து பணம் பார்த்தாச்சு!..

ஆமா.. காலையில காபிக்கு பாக்கெட் பால் தான்!.. 
அட.. தயிர் கூட பாக்கெட்..ல விக்கிறானே!..

இப்படி வாழைப்பழ சோம்பேறியாப் போன நீ... 
கலப்பட அரிசி..ன்னா எதுக்கு பயப்படுறே!..

லாபம் வருதுன்னா.. எதில இருந்தும் அரிசி செய்வானுங்க!..
வேலை மிச்சம்..ன்னா எதையும் காசு கொடுத்து வாங்குவீங்க!..

அப்புறம் சுகம் என்னத்துக்கு?...  சுகாதாரம் என்னத்துக்கு?...

என்ன அண்ணே நீங்க!.. இங்கே நல்லாத் தானே எல்லாம் செஞ்சு தர்றான்.. அவனுங்க மேல சந்தேகமா?...

நீ வெளிநாட்டு கோகோகோலா குடிச்சிருக்கியா?..

நமக்கு அதுக்கெல்லாம் ஏது வழி?..

நான் குவைத்..ல குடிச்சிருக்கேன்.. 
நம்ம ஊரு மூலைக் கடையிலயும் குடிச்சிருக்கேன்!..

ரெண்டும் ஒன்னாத் தானே இருக்கும்?..

அது தான் கிடையாது.. ரெண்டும் வேற வேற ருசி.., ஏன்டா...னு கேட்டா - 
உன்னோட ஊர் தண்ணிக்கு இது தான் ருசி.. போடா!.. -ங்கறான்!..

இதுனால தான் அதுல பூச்சி மருந்து கலந்துருக்கு.. ன்னு பிரச்னை!..
சரி.. உணவுப் பொருளை நல்ல சுத்தமான முறையில விற்பனை செய்ங்க.. 
- ந்னு சொன்னாலும் கேக்கிறதில்லை... எங்க பார்த்தாலும் கறுப்பு ஆடு!..

விதவிதமான கலப்படம்!.. சாதாரண ஜனங்க என்னதான் செய்றது!?..

நீ உங்கையால சாகுபடி செஞ்ச தஞ்சாவூர் பொன்னி எங்கே?..
அதையெல்லாம் மூட்டை கட்டி வித்துப் போட்டுட்டு -
ஆந்திரா பொன்னி கர்நாடகா பொன்னி வடநாட்டு அரிசி 
அப்படின்னு எதையோ வாங்குறியே நியாயமா இது!?..

நீங்க சொல்றது.. சரி.. ஆனா எல்லாத்தையும் எப்படி செய்றது?..



நீ இதை நல்ல முறையில செய்.. அதை அவன் நல்ல மாதிரி செய்யட்டும்?..
நம்ம கையால செய்றப்போ நம்பிக்கை வருதில்லையா!..

போலி வியாபாரம் பெருகிப் போச்சு.. அதனால தான் ஆப்பிள் ரொம்ப நாளைக்கு இருக்கணும்..ன்னு மருந்தடிச்சு வெக்கிறான்...

கொடியில சுரைக்காயைப் பறிச்சு குழம்பு வைக்க சோம்பேறித்தனம்..
ஆனா, ஐஸ் பொட்டியில இருக்கிற கேரட்டும் பீன்ஸும் ஆனந்தம்!.. 

கொல்லைக் காடு குப்பை மண்டிக் கிடக்கு... கவனிக்க நேரமில்லை.. 
கொத்தி புரட்டி எரு அடிச்சு விதை போட்டா வெண்டை வரும்..
அவரை வரும்.. பீர்க்கு வரும்.. பறங்கி வரும்.. பாகல் வரும் .. 
கையில நாலு காசு வரும்!.. நோய் நொடி இல்லாம வாழ்க்கை வரும்!..

அதெல்லாம் விட்டுட்டு எல்லாத்துக்கும் அடுத்தவனை நம்பி இருந்தால்
மருந்து கடை வாசல் தான் கடைசியா இருக்கும்!...

நெசந்தான்.. அண்ணே!.. 
நான் கெளம்பிட்டேன் வயலுக்கு.. நீங்களும் வாங்க!.. 


நம்ம உழவு.. நம்ம உணவு!..

நாட்டுக்கும் வீட்டிற்கும்
நலம் தரும் செல்வம்!.. 
* * * 

15 கருத்துகள்:

  1. அருமை ஜி
    அவரவர்களுக்கு வேண்டிய உணவுக்கான உற்பத்தியை மக்கள் கடைபிடிக்க பழக வேண்டும் அப்பொழுதுதான் நமது சந்ததிகள் தொடரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஆட்கொல்லி இரசாயனங்களில் இருந்து விலகி இயன்றவரை தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நாட்டுக்கு பொருத்தம் நாமே ந்டத்தும் கூட்டுபண்ணை விவசாயம் ! என்று பாட வேண்டும் போல் உள்ளது.

    நம் கையால் மண்ணை கொத்தி கீரை, வெண்டை, கத்திரி போட்டக் காலம் போச்சே, அடுக்குமாடி வீட்டில் சாத்தியம் இல்லை , மொட்டை மாடி இருந்தால் செய்யலாம். எங்கள் குடியிருப்பில் மொட்டைமாடி உபயோகத்திற்கு கிடையாது.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்றைக்கே பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள்..
      நாகரிக மோகத்தால் மக்கள் தடம் மாறிப் போனார்கள்..

      இயன்ற வரை நமது தேவைகளை வீட்டுத் தோட்ட முறையில் நிறைவு செய்து கொள்ளலாம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நல்ல விதமாக சொன்னீங்க.... எல்லாத்திலும் கலப்படம்... மக்களிடம் சோம்பேறித்தனம் அதிகரித்து விட்டது. அது வியாபாரிகளுக்கு வசதியாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      நமது சோம்பேறித்தனத்தினாலும் அலட்சியத்தாலும் தான் கலப்பட வியாபாரம் அதிகமாகிப் போனது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான பதிவு!

    யந்திரகதியாய்ப்போன வாழ்க்கையில் எதற்குமே நேர‌ல்லாமல் பறக்கிறபோது மக்களுக்கு கலப்படங்கள் பற்றிய‌ என்று இது போன்று ஆயிரம் விழிப்புணர்வு பதிவுகளும் செய்திகளும் அறிவிப்புகளும் வந்தாலும் அதையெல்லாம் நின்று நிதானித்து கவனிக்க நேரமா இருக்கிறது? இழப்பு என்று வந்து, கண்ணீர் விட்டு அழும்போது தான் உண்மை முகத்தில் வந்து அறைகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வதைப் போல எதற்குமே நேரமில்லாமல் மக்களுக்கு இதையெல்லாம் கவனித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நேரம் எங்கேயிருக்கின்றது?..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நல்ல பதிவு. எங்கு, எதை, யாரை நம்புவது என்றே புரியாத நிலைதான். ஏதோ தப்பு நடக்குதுன்னு தெரியுது. என்ன தப்புன்னுதான் சரியாத் தெரியலை. சொல்லவும் மாட்டாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தப்பு நடக்கின்றது.. என்னவென்று தான் புரியவில்லை..
      இயன்றவரை பாதுகாப்பு தேடிக் கொள்வோம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. குழந்தைகளிடம் பால் எப்படிக் கிடைக்கிறது என்று கேட்டால் பால்பாக்கெட்டில் இருந்து என்பார்கள் வேலைக்கு போகிறேன் என்று சொல்லி எதையுமே ரெடிமேடாகத்தான் வாங்குகிறர்கள் மாங்கு மாங்கென்று உழைத்தால் பிழைக்கத்தெரியாதவன் என்னும் பெயர் நாட்டு நடப்பு சொல்லிப் போனவிதம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் சொல்வதைப் போலத் தான் -
      இன்றைய பிள்ளைகள் இருக்கின்றார்கள்..

      பரபரப்பான வாழ்க்கையில் எல்லாரும் சம்பாதித்து
      என்ன மிச்சம் ஆகியிருக்கின்றது?..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மிக மிக அருமையான பதிவு! நமது உணவை நாமே செய்து கொள்வது மட்டுமின்றி முடிந்தால் காய் பழங்களை நாமே வளர்க்கலாம் தான். இப்போது எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடாமல் இருப்பது என்ற பயம் வரத்தான் செய்கிறது...எல்லாவற்றிலும் கலப்படம்..பெரிய புகழ்பெற்ற நிறுவனம் என்றாலுமே இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..