நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 09, 2016

கடைக்குப் போன கரடி

இன்று அக்ஷய திரிதியை..

தான தர்மங்கள் செய்வதற்கும் 
வீட்டில் மங்கலகரமான வழிபாடுகளைச் செய்வதற்கும் உகந்த நாள்..

ஆனால் -

இந்த நாளை தங்கம் வாங்குவதற்கான நாள்!..
- என ஆக்கி வைத்திருக்கின்றார்கள்..

நகைக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தோறும்
ஆடம்பரமான விளம்பரங்கள்..  தோரணங்கள்..
கொண்டாட்டங்கள்.. கோலாகலங்கள்..

எங்கள் கடையில் தங்க நகை வாங்கினால் தான் உங்களுக்கு சுப யோகம்!..

- என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கின்றார்கள்..

அப்படிக் கூவிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு நகைக்கடையில் -

இன்றைய தினத்தில் - 
உங்களிடம் இருக்கும் ஒரு கிராம் பழைய தங்கத்தைக்
கொடுத்துப் பாருங்கள்!...

எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள்!..

இதிலிருந்தே உண்மை விளங்கும்!..

இந்த நல்ல நாளில் - நகை வாங்குவதற்கு என,

கரடி ஒன்று கடைத் தெருவிற்கு வந்திருக்கின்றது..

நகை வாங்கியதா.. இல்லையா!..

பின் தொடர்வோம்!...


கரடி - கரடியாய் கத்தி விட்டு வீட்டுக்கு வருகின்றது.. ஆனால்
உடையவள் இல்லை!..


அன்புக்குரியவளை அங்கும் இங்கும் தேடுகின்றது..
மகன் உண்மையைச் சொல்கின்றான்..


கடுப்பாகிப் போன கரடி காமெராவை தயார் செய்து வைக்கின்றது..
எதற்காக?..


ஆனாலும் - இன்னும் காணோம்.. பசி வேறு..
என்ன செய்வது.. உண்ட மயக்கம் ஊருக்கு..
கரடிக்கோ பசி மயக்கம்..


அங்கே - அக்னி நட்சத்திர கத்திரி வெயிலில் கடைத்தெருவில்
அலைகின்றது கரடி..


பொழுது போயிற்றே தவிர வேறொன்றும் ஆகவில்லை..
பசி மயக்கத்துடன் வீட்டுக்குத் திரும்பி வருகின்றது..
வழியில் - பழத் தோட்டம் ஒன்று..


வீட்டிலுள்ளவர்களின் 
களைப்பைக் கண்டதும் கரடிக்கு கண்ணீர் வந்து விட்டது..
அத்துடன் நல்ல புத்தியும் வந்து விட்டது..


ஆனாலும் - கரடி
அடுத்த அக்ஷய திரிதியைக்கு
மறுபடியும் தங்கம் வாங்கப் போகுமா?..
தெரியவில்லை..
***

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீரதுடைத்து.. (0221)

அக்ஷய திரிதியை நல்வாழ்த்துகள்..

வாழ்க வளமுடன்.. 
* * * 

8 கருத்துகள்:

  1. ஆஹா புகைப்படங்களின் வழியே சொன்ன கரடிக்கதை அருமை ஜி மீண்டும் அடுத்த வருடம் வந்து கரடியை பார்ப்பேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. என்றும் பொருந்தும் கரடிக்கதை. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்களில் கரடியின் ஃபீலிங் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  4. என்ன பின்னூட்டம் எங்கே,,

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை. மக்களுக்குப் புரிய வேண்டும். அடுத்த வருடமாவது நகைக்கடைக்கு கூட்டம் கூட்டமாக செல்லாமல் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. எத்தனை சொன்னாலும் கடைத்தெருவில் கூட்டம்தான். ஏதோ சும்மா தருவது போல் கடையெல்லாம் கூட்டம்.
    கரடி படங்களும் படம் மூலம் உணர்த்திய நீதி கதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. கரடி படங்கள் மூலம் உணர்த்திய கதை அருமை சார்.

    பதிலளிநீக்கு
  8. நகையை விற்க செய்யப்பட்ட விளம்பரம் தான் இது. மக்களுக்கு இந்த வணிக நோக்கம் என்று புரியுமோ? கரடி மூலம் நல்ல விழிப்புணர்வு கதை சொன்னமைக்குப் பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..