திருப்பாற் கடலில் தோன்றியவள்.
சகல செல்வங்களுக்கும் அதிபதியானவள்.
சர்வ மங்கலங்களையும் அள்ளித் தருபவள்.
அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத் தேனை அளிப்பவள்.
ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் வாசம் செய்பவள்.
பள்ளி கொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள்..
நவராத்திரியின் நடு நின்ற நாயகி - ஸ்ரீ மஹாலக்ஷ்மி!..
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
தொடரும் வழிபாடுகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி போற்றி வணங்கப்படுகின்றாள்!..
இக வாழ்வில் நமக்கு வேண்டும் வரங்களையும் வளங்களையும் வழங்கி - நம்மை நடத்துபவள் - ஸ்ரீமஹாலக்ஷ்மி!..
வாக்தேவி சரஸ்வதியாகத் திகழ்பவளே!.
சகல செல்வங்களுக்கும் அதிபதியானவள்.
சர்வ மங்கலங்களையும் அள்ளித் தருபவள்.
அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத் தேனை அளிப்பவள்.
ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் வாசம் செய்பவள்.
பள்ளி கொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள்..
நவராத்திரியின் நடு நின்ற நாயகி - ஸ்ரீ மஹாலக்ஷ்மி!..
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் - தீமையை வேரறுக்கும் ஸ்ரீதுர்கா தேவியின் திருவடித் தாமரைகளில் பூமாலையுடன் பாமாலையும் சூட்டிக் களித்தோம்!..
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!..
தொடரும் வழிபாடுகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி போற்றி வணங்கப்படுகின்றாள்!..
வழிபடும்
அன்பர்களின் துயர்களையும் துன்பங்களையும் தொலைத்து அழிப்பவள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி.
நம்முள் மண்டிக் கிடக்கும் தீமை எனும் தாரித்ரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி.
நம்முள் மண்டிக் கிடக்கும் தீமை எனும் தாரித்ரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி.
இக வாழ்வில் நமக்கு வேண்டும் வரங்களையும் வளங்களையும் வழங்கி - நம்மை நடத்துபவள் - ஸ்ரீமஹாலக்ஷ்மி!..
வேண்டும் வரங்கள் - வளங்கள் எனில்,
நாம் வேண்டியதை அல்ல!.. நமக்கு வேண்டியதை!..
நமது பூர்வ ஜன்மத்தின் சஞ்சித ப்ராரப்த வினைகளை அனுசரித்து - நமக்கு எவற்றை வழங்க வேண்டுமோ அவற்றை வழங்கி அருள்வாள்.
அதன்படி எவற்றையெல்லாம் நாம் அனுபவிக்கும் படியான விதி இருக்கின்றதோ - அதை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.
இப்படி
அனுபவிக்கும் வேளையில் - அல்லலும் துன்பமும் துயரமும் தொடருமேயானால் -
அவற்றில் இருந்து நாம் மீள்வதற்கு பெரிதும் உதவியாய்த் திகழ்வன -
வழிபாடுகள்.
விதியின்
வசமாக தொல்லைகளும் துயரங்களும் ஒரேயடியாகத் தொலைய வில்லை எனினும் -
இடையறாத அன்பின் வழிபாடுகளினால் - விதியின் இறுக்கம் இளகுகின்றது.
ஒருவன்
அளவு கடந்த வறுமையிலும் தடுமாறாது, தடம் மாறாது நேர்வழியில் செல்வானாயின்
அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது பொருள்.
அதற்காகத் தான் வறுமையிலும் செம்மை என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
அத்தகைய மனோதிடம் அமையுமானால் - சற்றும் குறைவில்லாமல் அருள் மழை பொழிவாள் என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகள் உள்ளன.
தமக்கென்று வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியை - பவதி பிக்ஷாம் தேஹி!.. என வந்த பாலகனுக்கு இட்டார் அந்தப் பெண்.
''பிக்ஷை
ஏற்க வந்திருக்கும் பாலனுக்கு இடுவதற்கு இதை விட நல்லதாக வேறு ஒன்றும்
இல்லையே..'' - என்று, மனவருத்தத்துடன் எண்ணிய எண்ணம் தான் - அன்று அங்கே
பொன்மழை பெய்யக் காரணமாக இருந்தது.
அத்தகைய மனோபாவம் அவளாலே அருளப்படுவது.
இத்தகைய பெருமை வாய்ந்த ''கனகதாரா ஸ்தோத்ரம்'' - இன்றும் ஞானப் பொக்கிஷமாக விளங்குகின்றது எனில் அது மிகையில்லை.
நவராத்திரிப்
பெருவிழா - தேசம் எங்கிலும் வேறு வேறு வழக்கங்களுடன் கொண்டாடப்பட்டாலும்,
நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருளை வேண்டியே
நடைபெறுகின்றன.
அவளுடைய அம்சங்களான ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ சரஸ்வதியின் அருள் வேண்டியே நடைபெறுகின்றன.
இந்த அளவில் சர்வலோக சரண்யை ஆன அம்பிகையை ஒன்பது நாட்களும் வழிபடும் போது -
முதல் மூன்று நாட்கள் - வீரம் , மனோதைரியம் இவற்றை அருளும்
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எனவும்,
அடுத்த மூன்று நாட்கள் - குன்றாத நலங்களையும் வளங்களையும் அருளும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனவும்,
கடைசி மூன்று நாட்கள் - கல்வி, நல்லறிவு, ஞானம் இவற்றை அருளும்
ஸ்ரீ மஹாசரஸ்வதி எனவும், வணங்கி நிற்கின்றோம்.
ஸ்ரீ மஹாசரஸ்வதி எனவும், வணங்கி நிற்கின்றோம்.
இல்லங்களில் மங்கலங்கள் தழைக்கவும் அனைவருடைய நலன் கருதியும் - தான் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அவற்றுள் பெண்களே முதலிடம் பெறும் வழிபாடு - நவராத்திரி வழிபாடு!..
அவற்றுள் பெண்களே முதலிடம் பெறும் வழிபாடு - நவராத்திரி வழிபாடு!..
நவராத்திரி வழிபாடுகளில் மற்ற பெண்களையும் அன்புடன் அழைத்து அவர்களுக்கு சந்தனம், குங்குமம், தாம்பூலம், பிரசாதம் - என வழங்கி அகம் மகிழும்போது அங்கே அன்னை மஹாலக்ஷ்மியும்
மகிழ்கின்றாள்.
இப்படி
தாம்பூலம் பிரசாதம் முதலானவற்றை முகம் அறியாதவர்களுக்கு
வழங்கும் போது கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகின்றன.
இப்படி அன்பின் வழி நின்று கொடுப்பதும் கொள்வதும் நிகழும் போது குற்றங்கள் அழிகின்றன. குறைகள் அகலுகின்றன. குலம் விளங்குகின்றது.
இப்படி நிகழ்த்தும் வழிபாடுகளில் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மனம் பூரிக்கின்றாள். ஏனெனில் அவள் - சாந்தமும் சாந்நித்யமும் உடையவள்.
உலகெங்கும் நாம் காணும் அனைத்திலும் வியாபித்து விளங்குபவள்.
சர்வ மங்கலங்களுக்கும் அவளே காரணி.
சர்வ மங்கலங்களுக்கும் அவளே காரணி.
அந்த காரணியை - பரிபூரணியைக் குறித்த ஸ்தோத்திரங்கள் பற்பல.
அவற்றுள் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் வெகு சிறப்பானது.
அதிலிருந்து சில கண்ணிகள் இன்றைய பதிவில்!..
அதிலிருந்து சில கண்ணிகள் இன்றைய பதிவில்!..
கீர்தேவதேதி கருடத்வஜ சுந்தரி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஸு ஸம்ஸ்திதாய
தஸ்யை நமஸ் திரிபுவனைக குரோஸ் தருண்யை!..
வாக்தேவி சரஸ்வதியாகத் திகழ்பவளே!.
கருடனைக் கொடியில் கொண்ட சுந்தரியே!...
சசிசேகர மூர்த்தியாகிய ஸ்ரீ பரமேஸ்வரன் -
ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனும் மூன்றினையும் விளையாட்டாகச் செய்து
கொண்டிருக்கும் போது அருகிருக்கும் சிவசக்தியாகவும் சாகம்பரியாகவும் திகழ்பவளே!.
மூவுலகங்களுக்கும் குருவான ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி!..
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை!..
தாமரை மலரில் வீற்றிருப்பவளே!..
பூமண்டலத்தின் தனிப்பெருந் தலைவியே!..
தேவர்களின் மீது தயை கொண்டவளே!..
சார்ங்கபாணியாகிய ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி!..
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாமஜ வல்லபாயை!..
பேரொளிப்பிழம்பு என தாமரையில் திகழ்பவளே!..
ஐஸ்வர்யங்களின் வடிவானவளே!..
இப்பேருலகைப் படைத்தவளே!..
தேவர்களால் வழிபடப்படுபவளே!..
நந்தகுமாரனாகிய ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி!..
மங்கலகரமான நவராத்திரி நாட்களில்
ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போற்றி வணங்கி,
நலங்களும் வளங்களும் பெறுவோம்!..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போற்றி வணங்கி,
நலங்களும் வளங்களும் பெறுவோம்!..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்:
ஓம் தன லக்ஷ்மியே போற்றி.. ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி..
ஓம் அன்ன லக்ஷ்மியே போற்றி.. ஓம் அம்ருத லக்ஷ்மியே போற்றி..
ஓம் அனந்த லக்ஷ்மியே போற்றி..
ஓம் ஆனந்த லக்ஷ்மியே போற்றி..
சர்வமங்கல மாங்கல்யே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகி கௌரி நாராயணி நமோஸ்துதே!..
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
* * *
ஆனந்த லட்சுமியின் பதிவு படிப்பதற்க்கு ஆனந்தமே... பொருத்தமான காணொளியும் கண்டேன்.
பதிலளிநீக்குஎனது புதிய பதிவு My India By Devakottaiyan.
அன்புடையீர்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
இன்று தங்களின் பதிவுக்கு முதல் ஆளாய் கருத்துரை இட்டது சந்தோஷமாக இருக்கிறது நண்பரே...
நீக்குஅன்பின் ஜி..
நீக்குமீண்டும் தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
ஆனந்தமாய் படித்தேன்
பதிலளிநீக்குஆனந்தமே
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஅழகிய மஹாலக்ஷ்மியின் தோற்றங்களும்
அதேபோன்று அழகிய பதிவும் ஐயா!..
கனகதாரா ஸ்தோத்திரத்தில் சிலவற்றின் பொருளறியத்தந்தீர்கள்.
மிகச் சிறப்பு! உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
மஹாலக்ஷ்மித் தாயார் இங்கே!
ஐயன் நீலவண்ணக் கண்ணன் இன்று என் பதிவில்!..
அன்பின் சகோதரி..
நீக்குதங்களின் கிருஷ்ண கானம் அருமை!..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
குவைத்திலிருந்து கொண்டும் குன்றாது இப்படி அழகான பதிவுகள் இடுகின்றீர்களே! அருமை!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் கருத்துரையில் மனம் நெகிழ்கின்றது..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆனந்த லக்ஷ்மியின் அருள்பெற்று அனைவரும் ஆனந்தமாக இருக்க வேண்டும். வளம் , நலம் அருவாள் அன்னை.
பதிலளிநீக்குகாணொளி அருமை.
நமக்கு எது எப்போது கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து தருகிறாள்.
கனகதாரா தோத்திரம் அதிலிருந்து சில பகுதிகளுக்கு விளக்கம் அருமை.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
arumaiyana pathivu aanantha lakshmi arul petru anaivarum vala valthukiren.annaiyin anaithu vadivankalum alaku mikka nanri sako pathivukku valthukkal .....!
பதிலளிநீக்குஅன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
புகைப்படங்களும், பதிவும் அருமை. ஒவ்வொரு முறை தங்களின் பதிவைப் படிக்கும்போது கோயிலுக்குச் சென்றுவருவது போல் உள்ளது. நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
என்னளவில் நான் இன்னும் மாணவனே!..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் ஆனந்தம் கிடைக்க ஆனந்த லக்ஷ்மி அருள் புரியட்டும். கனகதாரா ஸ்லோகத்தின் சில பாடல்களுக்கு பொருள் கொடுத்தமை நன்று.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்.
நீக்குதங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..