இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி!..
பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் உற்சாகம்!..
ஒருவருக்கொருவர் அன்பின் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில்- தனித்தன்மையான சந்தோஷம் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது.
கோயில்கள், வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக - தொழில் நிறுவனங்கள் - இங்கெல்லாம் அலங்காரமாக வாழைக்கன்றுகள் கட்டப்பட்டிருக்கின்றன. மாவிலை, தென்னங்குருத்துத் தோரணங்களும் -
அவைகளுக்குப் போட்டியாக - பல வண்ண காகிதப் பூந்தோரணங்களும் பளபள என்று மின்னிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரங்களையும் வாகனங்களையும் அலங்கரிப்பதே - தனி ஆனந்தம்.
வீட்டில் உள்ள தெய்வ சித்திரங்கள் எல்லாம் அலங்கரிக்கப்படுகின்றன. இசைக் கருவிகள் இருந்தால் அவைகளும் ஆனந்தத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன.
புத்தகங்கள், பேனா, பென்சில், வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான கருவிகள் இவைகளையும் சரஸ்வதி திருமுன் வைத்து பழவகைகளுடன் அவல் பொரி, சர்க்கரை, சுண்டல் - என நிவேதனங்களைச் சமர்ப்பித்து வழிபடுதல் மரபு.
சூழ்நிலை இடங்கொடுப்பின் சித்ரான்னங்களையும் சமர்ப்பிக்கலாம். அவரவர் மரபுப்படி ஆராதனை முடிந்ததும் - எல்லாவற்றுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம்.
நவராத்திரி விரதம் அனுசரிப்போர் - இரவில் பூஜை செய்து விரதத்தினை நிறைவு செய்தல் வேண்டும்.
கொலு வைத்திருப்பவர்கள் கொலுவுக்கு மகாஆராதனை செய்தல் வேண்டும். கொலுவுக்கு வரும் பெண்களுக்கு - மஞ்சள் குங்குமத்துடன் தாம்பூலம் தந்து உபசரிக்க வேண்டும்.
''அஞ்ஞான இருளை அகற்றி நல்லறிவினை வழங்குவாய் தாயே!..'' என்று அன்னையை வணங்கி வழிபடுதல் அவசியம்.
எல்லா கலைகளுக்கும் அவள் அதிபதி!.. அவள் இல்லாத இடம் - பொருள் என்று ஏதும் இல்லை.
அன்னை கலைவாணி நம்முடனே தான் இருக்கின்றாள். நாம் தான் அவளை உணர்ந்து கொள்வதில்லை.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா |
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத் திருப்பாள்..
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருள் ஆவாள்..
- மகாகவி பாரதியார் -
மனதினுள் மண்டிக் கிடக்கும் மாசுகளை அகற்றுவோம்!..
அன்பு எனும் திருவிளக்கை ஏற்றி வைப்போம்!..
எல்லாவித உயர்வுகளையும் உன்னதங்களையும்
அன்னை கலைவாணி நமக்கு அருள்வாள்!..
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு.
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே விரிஞ்சி
பத்ந்யை ச தீமஹி தந்நோ: வாணி ப்ரசோதயாத்.
***
***
// மனதினுள் மண்டிக் கிடக்கும் மாசுகளை அகற்றுவோம்...!
பதிலளிநீக்குஅன்பு எனும் திருவிளக்கை ஏற்றி வைப்போம்...! //
அருமை ஐயா...
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்...
அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. அனைவருக்கும் அன்னை நல்லருள் புரிவாளாக!..
நீக்கு''அஞ்ஞான இருளை அகற்றி நல்லறிவினை வழங்குவாய் தாயே!..'' என்று அன்னையை வணங்கி வழிபடுதல் அவசியம்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. அனைவருக்கும் அன்னை நல்லருள் புரிவாளாக!..
நீக்குஇனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு ... படங்கள் அழகு.
அன்பின் திரு. குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. அனைவருக்கும் அன்னை நல்லருள் புரிவாளாக!..
நீக்குசரசுவதி திருநாள், விஜயதசமி நன்னாள் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. சரஸ்வதி திருநாள் நல் வாழ்த்துக்கள்!.. தங்களின் வரவு கண்டு மகிழ்ந்தேன்!..
நீக்கு