கடல் கடந்தும் தமது புலிக் கொடியினை நாட்டிய - மாபெரும் வெற்றி வீரன்,
திருக்கோயிலைப் பாதுகாத்திட பெரும் பணியாற்றிய 'குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர்' தமக்கும் ,
http://www.facebook.com/Uzhavaram அவர்களுக்கும்,
எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்வார்களாக!..
ராஜராஜ சோழ மாமன்னனின் மகன் ராஜேந்திர சோழனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது - மானம்பாடி ஸ்ரீநாகநாதர் திருக்கோயில்.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் அடிப்படையில், இந்தத் திருக் கோயிலுக்கு - நேர இருந்த ஆபத்து விலகியுள்ளது.
நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக -
தஞ்சாவூர் - விக்ரவாண்டிக்கு இடையில் - கும்பகோணத்திற்கு அருகில் மானம்பாடி கிராமத்தில், சாலை ஓரமாக அமைந்துள்ள ஸ்ரீநாகநாதர் திருக்கோயில் 20 அடி அளவுக்கு இடிபடப்போகின்றது என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடையாத உள்ளங்களே இல்லை எனலாம்.
இந்தக் கோயிலின் அருமை பெருமைகளை அனைவரும் எடுத்துப் பேசினர்.
நமது வலைப்பூவில் 19.05.2013 அன்று முதல் - நகரும் செய்திக் குறிப்புடன்,
என்ற தகவல் குறிப்பும் -
இறைபணியில் அணு அளவாகக் கருதி வெளியிடப்பட்டது. இந்நிலையில்,
தற்போது - திருக்கோயிலை இடித்துச் சேதப்படுத்தாமல் நெடுஞ்சாலை விரிவாக்கத்தினை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
வேறு மூன்று வழிகளில் சாலை விரிவாக்கத்தினை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக - நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர்.
வரலாற்றின் ஈடு இணையற்ற அடையாளங்களில் ஈடுபாடு கொண்டுள்ள கலையன்பர்களும் இறையன்பர்களும் ஆர்வலர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி தெரிவிக்கின்றனர்.
இதில் பெரும் பங்காற்றிய குடந்தை ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தினர் வெளியிட்டுள்ள செய்தியை,
http://www.facebook.com/Uzhavaram - வாயிலாக அறிந்து அதனை உங்களுடன், நமது வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
http://www.facebook.com/Uzhavaram - வாயிலாக அறிந்து அதனை உங்களுடன், நமது வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஸ்ரீ நாகநாதஸ்வாமியின் திருக்கோயிலைப் பாதுகாத்திட ஆவன செய்த -
தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி!...
சென்ற வருடம் இந்தத் திருக்கோயிலைப் பற்றி விரிவாக கட்டுரை எழுதிய திரு. பாலகுமாரன் அவர்களுக்கும்
அதனை வெளியிட்ட சக்தி விகடனுக்கும் மனமார்ந்த நன்றிகள்!..
திருக்கோயிலைப் பாதுகாத்திட பெரும் பணியாற்றிய 'குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர்' தமக்கும் ,
http://www.facebook.com/Uzhavaram அவர்களுக்கும்,
இணையதளம் மூலமாக ஆதரவு திரட்டிய www.change.org அவர்களுக்கும்,
மேலும் -
தமிழக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கும்,
நமது வலைத்தளத்தின் தகவலை - பரிவுடன் பகிர்ந்து கொண்டு ஆதரவளித்த அன்பு உள்ளங்களுக்கும், இறையன்பர்களுக்கும்
மற்றும் மக்கள் எண்ணத்தினைப் பிரதிபலித்த தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் முதலான நாளிதழ்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும், சகல சமூக அமைப்பினருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகளை
தலை வணங்கி - தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
பழைமையான திருக்கோயிலைப் பாதுகாத்து அருளவேண்டும் - என,
பரம்பொருளிடம் வேண்டுகோள் வைத்தோம்.
அது இன்று நிறைவேறியுள்ளது. ஒருமித்த மனத்தினராக அன்பர்கள் இயற்றும் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
வீரப்பெருந்தகை மாமன்னன் - ராஜேந்திர சோழனின் திருப்பணியாகிய, இந்தத் திருக்கோயில் காக்கப்பட்ட வகையில் - தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சி அடைகின்றன!.. அந்த வகைக்கு - பாடுபட்ட அனைவரும்,
ஸ்ரீ செளந்தரநாயகி அம்பிகை உடனாகிய ஸ்ரீநாகநாதப் பெருமானின்
திருவருள் துணையுடன்
எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்வார்களாக!..
சிவாய திருச்சிற்றம்பலம்!...
மிகவும் மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
திரு.தனபாலன் அவர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி!...
பதிலளிநீக்கு