அடர்ந்த மரங்களில் வலிமையான கிளைகளில் கட்டப்பட வேண்டிய கூடு!...
பாவம் ... பரிதவித்துப் போன குருவிகள் - வாழ வழி தேடி - வாடி வதங்கிப் போகும் வாழையிலையை மடக்கிக் கூடாக கட்டியுள்ளன..
பாவம் ... பரிதவித்துப் போன குருவிகள் - வாழ வழி தேடி - வாடி வதங்கிப் போகும் வாழையிலையை மடக்கிக் கூடாக கட்டியுள்ளன..
Facebook -ல் வெளிவந்த படத்தைக் கண்ட பிறகு மனம் மிகவும் வலிக்கின்றது.
(படம்: நன்றி - பசுமைப் புரட்சி)
இந்த வாழை இலை எத்தனை நாட்களுக்குத் தாங்கும்?...
''காக்கை குருவி எங்கள் ஜாதி!...'' - என்று பாடினார் மகாகவி பாரதியார்.
இயற்கையுடன் இணைந்த
வாழ்வு நம்முடையது.
அவைகளுடைய வாழ்வாதாரத்தை - அழித்து ஒழித்து விட்டு நாம்
சாதிக்கப் போவது எதுவுமில்லை!..
இந்தக் கொடுமையைக் கண்ட பிறகாவது மரங்களை வாழ வைக்க வேண்டிய அவசியத்தினை தயவு செய்து உணருங்கள்.
இந்த வாழை - வளர்ந்துள்ள வீட்டுக்காரரே...
தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்!...
காப்பாற்றுவீர்கள் என்ற - நம்பிக்கையுடன்
குருவிகள் உங்களிடம் அடைக்கலம் ஆகியுள்ளன!...
அவற்றின் நம்பிக்கை மெய்ப்படவேண்டும்!..
எல்லாம் வல்ல இறைவனே!...
இந்த சிறு குடிலைக் காத்தருள்க!...
அவற்றின் நம்பிக்கை மெய்ப்படட்டும்...
பதிலளிநீக்குஅவற்றின் நம்பிக்கை மெய்ப்பட தங்களைப் போன்றோரின் நல்வாழ்த்துக்களுடன் இறைவன் திருவருளும் துணை செய்யட்டும்!.
பதிலளிநீக்கு