நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி
வெள்ளிக்கிழமை
இன்று
ஞானசம்பந்தர் தேவாரம்
தலம்
திரு அண்ணாமலை
எனைத்தோர் ஊழி அடியார் ஏத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமலர் உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன்
கைமேல் குழல்ஊத
அனைத்தும் சென்று
திரளும் சாரல் அண்ணாமலையாரே.. 1/69/6
ஊழிகள் தோறும் அடியார்களால் வணங்கப் பெற்ற தேவ தேவன் ...
நினைப்பவர் தம் பாவங்களைக் களைகின்ற சிவபெருமான்..
தான் உறைகின்ற திருக்கோயில்
கனைத்துக் குரல் எழுப்பியபடி மேய்ந்து கொண்டிருந்த எருமையைக் காணாத ஆயன் தன் கையிலிருக்கும் குழலை ஊதியதும் எருமைகள் அனைத்தும்
ஓடி வந்து சேர்கின்ற அண்ணாமலைச் சாரலே...
ஓம் நம சிவாய
***
.jpg)

அண்ணாமலையாரைச் சரணடைவோம்! ஓம் சிவாய நம.
பதிலளிநீக்குஓம் சிவாய நம
நீக்குவெள்ளி நாளில் அண்ணாமலையானை தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குஅண்ணாமலையானே சரணம்.
ஓம் சிவாயநமக.
தங்கள் அன்பினுக்கு நன்றியம்மா
நீக்குஓம் சிவாய நம
தலம் பெருமை சொல்லும் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஓம் நம சிவாய
தங்கள் அன்பின் வ்ருகைக்கு நன்றியம்மா
நீக்குஓம் சிவாய நம