நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 26, 2026

தில்லை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 வியாழக்கிழமை 


இன்று 
தேவாரத் திருவமுது

 நன்றி
பன்னிரு திருமுறை

திருநாவுக்கரசர் அருளிச்செய்த
கோயில் திருப்பதிகம்..


காணொளிக்கு நன்றி

சித்தர் வழிபாட்டுக் குழு

ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 2

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.. 5/2/1

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.. 2

நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.. 6

காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ.. 9

சிவாய திருச்சிற்றம்பலம்
***

2 கருத்துகள்:

  1. தீர்த்தனை, சிவனை, சிவலோகனை, மூர்த்தியை, முதலாய ஒருவனை, பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனை நானும் மறந்துய்யாமல் இருக்க அருள் புரிவாய் எம்பெருமானே...

    பதிலளிநீக்கு
  2. தில்லைக் கூத்தன் திருப்பதிகம் பாடி வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    தில்லைக் கூத்தன் அனைவரையும் காக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..