நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வியாழக்கிழமை
இன்று
தேவாரத் திருவமுது
நன்றி
பன்னிரு திருமுறை
திருநாவுக்கரசர் அருளிச்செய்த
கோயில் திருப்பதிகம்..
காணொளிக்கு நன்றி
சித்தர் வழிபாட்டுக் குழு
ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 2
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.. 5/2/1
தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.. 2
நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.. 6
காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ.. 9
சிவாய திருச்சிற்றம்பலம்
***

தீர்த்தனை, சிவனை, சிவலோகனை, மூர்த்தியை, முதலாய ஒருவனை, பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனை நானும் மறந்துய்யாமல் இருக்க அருள் புரிவாய் எம்பெருமானே...
பதிலளிநீக்குதில்லைக் கூத்தன் திருப்பதிகம் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
தில்லைக் கூத்தன் அனைவரையும் காக்க வேண்டுவோம்.