நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வியாழக்கிழமை
இன்று
சுவாமிமலை திருப்புகழ்
தான தனதன தான தனதன
தான தனதன ... தனதான
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய .. குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ... மருகோனே
காலன் எனையணு காம லுனதிரு
காலில் வழிபட ... அருள்வாயே..
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு .. சிறைமீளா
ஆடு மயிலினி லேறி அமரர்கள்
சூழ வரவரு ... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனி ... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
***

சுவாமிமலை எங்கள் இரண்டாவது குலதெய்வம். என் அக்கா திருமணம் நடந்த இடம். அதே சமயம்தான் எனக்கும் என் அண்ணனுக்கும் பூணூல் சூடும் வைபவமும் நடந்தது.
பதிலளிநீக்குமுருகா சரணம்
நீக்குமேல் விவரங்களுக்கு நன்றி ஸ்ரீராம்
ஓம் முருகா... முருகா சரணம். குன்றங்கள் யாவையும் குமரவேல் காக்கட்டும்.
பதிலளிநீக்குமுருகா சரணம்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
நல்லதே நடக்கட்டும்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி வெங்கட்
இறைவனுக்கு சுவாமிநாதனான முருகா உன் பாதம் பணிகின்றோம்.
பதிலளிநீக்குசுவாமி மலை முருகா சரணம்.
முருகா சரணம்.
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய திருப்புகழ் சுவாமிமலை பாமாலை அருமை. பாடலைப் பாடி முருகனை வணங்கிக் கொண்டேன். அப்பனுக்கு பாடம் சொன்ன அருமை மகன தப்பாது அனைவரையும் காக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஏதேதோ வேலைகளினால், கடந்த உங்களது பல பதிவுகளை தொடராமல் போய் விட்டேன். மன்னிக்கவும். இனி வழக்கப்படி தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
நீக்குஎல்லாப் பதிவுகளையும் வாசிக்கின்றீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி...
நன்றியம்மா..