நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 19, 2026

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 வியாழக்கிழமை


இன்று
சுவாமிமலை திருப்புகழ்

தான தனதன தான தனதன
     தான தனதன ... தனதான


பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய .. குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ... மருகோனே

காலன் எனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ... அருள்வாயே..

ஆதி அயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு .. சிறைமீளா

ஆடு மயிலினி லேறி அமரர்கள்
     சூழ வரவரு ... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவு
    சுவாமி மலைதனி ... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
***

10 கருத்துகள்:

  1. சுவாமிமலை எங்கள் இரண்டாவது குலதெய்வம்.  என் அக்கா திருமணம் நடந்த இடம்.  அதே சமயம்தான் எனக்கும் என் அண்ணனுக்கும் பூணூல் சூடும் வைபவமும் நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்

      மேல் விவரங்களுக்கு நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. ஓம் முருகா...  முருகா சரணம்.  குன்றங்கள் யாவையும் குமரவேல் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்...

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. இறைவனுக்கு சுவாமிநாதனான முருகா உன் பாதம் பணிகின்றோம்.

    சுவாமி மலை முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய திருப்புகழ் சுவாமிமலை பாமாலை அருமை. பாடலைப் பாடி முருகனை வணங்கிக் கொண்டேன். அப்பனுக்கு பாடம் சொன்ன அருமை மகன தப்பாது அனைவரையும் காக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ஏதேதோ வேலைகளினால், கடந்த உங்களது பல பதிவுகளை தொடராமல் போய் விட்டேன். மன்னிக்கவும். இனி வழக்கப்படி தொடர்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்

      எல்லாப் பதிவுகளையும் வாசிக்கின்றீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி...

      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..