நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 28, 2026

மாசி மகம்

  


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 சனிக்கிழமை

 மாசி 18 திங்களன்று (மார்ச்/2)
மாசிமக தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக் 
குளக்கரையில்
பெருந்திருவிழா..

ஸ்ரீ கும்பேஸ்வரர் மங்களாம்பிகை

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. 5/22/1

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.. 5/22/3

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே. 5/22/6
-: திருநாவுக்கரசர் :-
**

மாசிமகப் பெருந் 
 திருவிழாவின் அழைப்பிதழ்..


ஓம் நம சிவாய
***

10 கருத்துகள்:

  1. குடந்தை செல்ல ஆசைதான்.  இப்போதைக்கு முடியாது!  மேலும் எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையே தான் நானும் யோசிக்கின்றேன்...

      இறைவன் வழி காட்டுவான்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அருமையான பதிகங்கள். கொஞ்சம் படித்து மனதில் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பக்திதான் எப்படிப்பட்ட இனிமையான பதிகங்களை எழுத வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...
      இனிமையான பதிகப் பாடல்கள்..

      நெல்லை அவர்களுக்கு நன்றி
      மகிழ்ச்சி..

      நீக்கு
  3. திருநாவுக்கரசர் பதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    மாமி மகம் பார்த்த நினைவுகள் வந்து போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருப்பதி பாடல்கள் அருமை. ஸ்ரீ கும்பேஸ்வரரையும், அன்னை மங்களாம்பிகையையும் தரிசித்துக் கொண்டேன். மாசி மகாமகம் அழைப்பிதழை படித்து கொண்டேன். அனைவரையும் இறைவன் காத்தருள வேண்டுக் கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      வேண்டுதலும்
      கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  5. பாடல் பாடி வணங்கினோம்.

    மாசிமகப் பெருவிழா அழைப்பிதழ் கண்டோம்.

    ஓம் கும்பேஸ்வராய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..