நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 23
குறளமுதம்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.. 393
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.. 23
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 13
ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த
தேவாரம்
திருக்கடவூர்
பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7/28/1
*
நன்றி
பன்னிரு திருமுறை
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
மார்கழியின் காலைகள் உங்களால் புத்துணர்வுடன் துவங்குகின்றன. நன்றி.
மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
மார்கழி 23 ஆம் நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
பாடல்களில் அந்த எம்பாவாய் வருமிடத்து பெரும்பாலான சமயங்களில் அந்த இடத்தில வார்த்தைகளை பிரித்துக் கொண்டு வருவதற்கே கண்ணன் அருள் வேண்டும் என்பது போல அமைந்திருக்கும்!
பதிலளிநீக்குஉண்மை .. உண்மை...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
குளம், நீர், மலர், இலை
பதிலளிநீக்குஎன,
பார்க்கும் பொருள் யாவும்
நீயாகவே தெரிகிறாய்
கைவளையும் கால் சிலம்பும்
மோதி மோதி உண்டாகும்
நாதம் கூட
நாதன் உன் நாமம் போலவே
ஒலிக்கிறது.
குளத்தில் மூழ்கினால்
போகும் அழுக்கு போல
உன்னுள் நாங்கள் மூழ்கி,
முற்பிறவி, இப் பிறவிப்
பாவங்கள் அகன்று
எங்கள் பிறவிப் பயன் அடைய
அருளாய் பெருமானே
ஞானம்.. பக்தி...
நீக்குதிருவடி சரணம்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்...
சூப்பர், ஸ்ரீராம். நீங்களும் பக்தியில் கலக்கத் தொடங்கிட்டீங்க!
நீக்குகீதா
ஸ்ரீராமின் கருத்துரை சிறப்பு
நீக்குபாடல்களில் அந்த எம்பாவாய் வருமிடத்து பெரும்பாலான சமயங்களில் அந்த இடத்தில வார்த்தைகளை பிரித்துக் கொண்டு வருவதற்கே கண்ணன் அருள் வேண்டும் என்பது போல அமைந்திருக்கும்!
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
எவ்வளவு அழகான தமிழ் இலக்கியம் பக்தி இலக்கியம்! பாசுரங்களை வாசித்துக் கொண்டேன்
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மார்கழி பதிவு அருமை. திருப்பாவை பாசுர பாடலும், திருவெம்பாவை, பாடலும், மற்றும் தேவார பாடல்களும் பாடி மகிழ்ந்தேன்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் இறைவன் அடி பற்றித் தொழும் பாடலும் அருமையாக உள்ளது. தினமும் தெய்வீக பாதையில் அழைத்துச் செல்லும் உங்களுக்கும், அவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
__/\__
நீக்குதெய்வீகப் பாதையில் அழைத்துச் செல்ல ஏற்ற ஆள் நானில்லை. செல்வாண்ணா, கீதா அக்கா, கோமதி அக்கா, நெல்லை, திருவாழிமார்பன் போன்றோர்தான்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா