நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 17, 2026

கன்னியர் வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை மூன்றாம் நாள்
காணும் பொங்கல்

நன்றி
வெங்கடேஷ் ஆறுமுகம்





பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!...
**
2023ல் பதிவிடப்பட்ட கவிதை

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**

14 கருத்துகள்:

  1. மீள் ,கவிதையை ரசித்தேன்.  நடுவில் வாத்யார் எங்கு, எதற்கு வந்தார் என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரியை நீக்கி விட்டேன்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    2. நன்றி.  ஆனால் ஏன் அங்கு வந்தது என்று சொல்லி இருக்கலாமே!

      நீக்கு
    3. இந்த வயதில் இப்படி எல்லாம் தேவையா என்பதற்காக போட்டது...

      வாத்யார் என்பது என்னைத் தான்...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்.

      மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. காணும் பொங்கலை துரை செல்வராஜு சார், 'பெண்களைக் காணும் பொங்கல்' என்று அர்த்தப்படுத்திக்கொண்டு முதலிரண்டு படங்களைப் பகிர்ந்திருக்கிறாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டைய கிராமத்துப் பெண்களுக்கு இன்று தான் திருநாள்..
      .
      அதை நினைவில் கொண்டே இந்தப் பதிவு..

      மகிழ்ச்சி நன்றி

      நீக்கு
  4. கொலுசுக்குள் பவளம் என அடைந்துகிடந்தால் எப்படி அனுபவிப்பது?

    உங்களுக்கு வயது குறைகிறதா இல்லை இளமைப் பருவ நினைவுகள் நடையாடுகிறதா? கவிதை சூப்பர்.

    ஆனால் அந்தக் காலங்களை இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வருகுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலுசுக்குள் பவளம் என அடைந்து கிடந்தால் ஒலி இசை...

      எல்லாம் இளமைக்கால நினைவுகள்...

      மகிழ்ச்சி நன்றி

      நீக்கு
  5. கவிதை நன்றாக இருக்கிறது.
    தெய்வ நலம் திசைஎங்கும் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  6. கவிதையும் படங்களும் அழகு.

    காணும் பொங்கல் வாழ்த்துகள்.

    அன்பு என்னும் ஒளி மக்கள் மனங்களில் பரவி ஒளி தரட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..