நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 16, 2025

மார்கழி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி முதல் நாள்


ஓம் கம் கணேசாய மங்கலம்

குறளமுதம்

அகர முதல எழுத்தெல்லாம ஆதி
பகவன் முதற்றே உலகு.. 1


ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.. 1


ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

போற்றி என் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 1

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு அண்ணாமலை

பூவார்மலர்கொண்டு அடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின்று அதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந்து அணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.. 1/69/1
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

8 கருத்துகள்:

  1. மார்கழி முதல் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மார்கழி மாத நல்வாழ்த்துகள். இம்மாதத்திற்குரிய பதிவு சிறப்பு. ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையும், ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியும், ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக் காப்பும் பாடி தொழுது மகிழ்ந்தேன். ஸ்ரீ மன்நாராயணனும், அருள்மிகு அண்ணாமலையாரும் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி மூன்றையுமே பதிவுகளாகப் பகிர்ந்திருக்கேன். ஏதோ ஒரு தளத்தில் கூடக் கேட்டு வாங்கிப் போட்டார்கள். இப்போல்லாம் புதுசாக எழுத மனம் பதியவில்லை. அதிலும் பக்திப்பதிவுகள் எழுதவே மனம் ஒன்றவில்லை. இதிலே ஆன்மிகமெல்லாம் நமக்கு எட்டாத் தொலைவு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஆன்மிகமெல்லாம் நமக்கு எட்டாத தொலைவு!

      ஏதோ என்னால் இயன்றது இந்தப் பணி தான்...

      மகிழ்ச்சி
      நன்றி அக்கா

      நீக்கு
  4. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி அக்கா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..