நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 09, 2025

அன்பில் சிவாலயம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வியாழக்கிழமை

அன்பில் 
ஸ்ரீ சத்தியவாகீசர் ஆலய தரிசனம்..


காவிரி  நீர்ப்பிடிப்பில் கொள்ளிடத்தின் வட கரையில் பசுமை தவழ்கின்ற கிராமங்களில் ஒன்றுதான் அன்பில்..

இவ்வூரின் நடுவே ஸ்ரீ சுந்தரராஜப்
பெருமாள்  கோயில். 

அன்பில் ஸ்ரீ சுந்தரராஜப்
பெருமாள்  கோயிலில் இருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது சிவாலயம்..

அன்பில் கோயிலில்  
இறைவன் - ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர்.. அம்பிகை -  ஸ்ரீ சௌந்தரநாயகி.  

ஸ்ரீ பிரம்ம தேவர் இங்கு வழிபட்ட காரணத்தால் பிரம்மபுரீசர்  என்றும் திருப்பெயர்.. 

காயத்ரி தீர்த்தம் 
தல விருட்சம் ஆலமரம்..

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்  -  இருவரது திருப்பதிகங்களையும் பெற்றுள்ள இத்தலம் அன்பில் ஆலந்துறை என வழங்கப்பட்டு தற்போது அன்பில் என்று விளங்குகின்றது..

மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.

முன்மண்டபத்தில் அன்பர்கள் கூடியிருந்தனர். 

ஆதலால் காட்சிப்படுத்த
இயலவில்லை..

இவ்வூரில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் புகழ் பெற்று விளங்குகின்றது.. 

ஆயினும்,
தரிசனம் செய்ய இயலவில்லை..

தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை -  திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..



ஸ்ரீ காசி விஸ்வநாதர்



ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. அன்பில் சுந்தரராஜ பெருமான் தரிசனம் பெற்றோம்.

    ஓம் சிவாயநமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அன்பில் ஸ்தலத்தில் கோவில் கொண்டுள்ள எம்பெருமானின் வரலாறு அறிந்து கொண்டேன். அழகான கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். கோபுரத்தின் சிற்பங்கள் அழகாக இருக்கிறது. பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அவன் தாள் பணிந்து வணங்கி கொண்டேன். சிவாய நம ஓம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன் மண்டபத்தையும் கொடி மரத்தையும் காட்சிப்படுத்த இயலவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..